செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

ஆசிரியர் மாணவரை தாக்கும் காலம் மலையேறி போச்சு

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பெரியபுலம் மகாவித்தியாலையத்தின் ஆசிரியை ஒருவர் நேற்று மாணவர் ஒருவரால் கடுமையாயாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தலையிலும் முகத்திலும் காயங்களுக்கு உள்ளான ஆசிரியை சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார்.

இலங்கை அகதிகளுக்கும் கனேடிய வரவு செலவுத் திட்டத்துக்கும் என்ன தொடர்பு?

கடந்த ஆகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சீ.கப்பலின் மூலம் ,கனடாவில் இலங்கை தமிழ் அகதிகளாக ஏற்குமாறு கோரி தஞ்சம் புகுந்த 492 பேரினால் கனேடிய அரசிற்கு 25 மில்லியன் டொலர்கள் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித் தமிழீழத்திற்கு அமெரிக்கா ஒருபோதும் ஆதரவளிக்காது

தமிழீழம் என்றொரு தனிநாடு அமைய அமெரிக்கா ஒருபோதும் ஆதரவளிக்காது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் தெரசிடா ஷாபர் தெரிவித்துள்ளார்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் நினைவு தினம்

இலங்கைத் தமிழர்களின் நலன்கருதித் துவக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஆவார். இலங்கையின் அரசியலில் 1940களிலும் 1950களிலும் மிகவும் அறியப்பட்டிருந்த இவர் ஒரு திறமையான குற்றவியல் வழக்கறிஞரும் ஆவார். ஜீ.ஜீ. என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவர்.

இங்கிலாந்தில் இரண்டு தமிழ்ப பெண்கள் தீ வைத்து கொலை! பிரித்தானிய பெண் கைது!

இங்கிலாந்தில் இரண்டு இலங்கை பெண்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தீ வைப்புச் சம்பவம் ஒன்றால் ஏற்பட்ட விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை இங்கிலாந்தின் எபன்கர் க்ரெவ் பிரதேசத்தில் உள்ள மெரின் என்ற தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 42 வயதான குணாழினி அழகரத்தினம், 59 வயதான சந்திராபதி தர்மலிங்கம் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

பேஸ்புக்கின் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன!

உலகின் முன்னணி சமூக வலையமைப்பு இணைய தளங்களில் ஒன்றான பேஸ் புக் இணைய தளத்தின் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கையர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

கண்ணீர் உருக்கும் அன்னை மரியாள் (காணொளி இணைப்பு)

அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் புனித அன்னை மரியாள் சிலை ஒன்றில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கண்ணீர் வடிகின்றது. ஏராளமானவர்கள் நேரில் வந்து இந்த அதிசயத்தை பார்த்துச் செல்கின்றனர்.

இலங்கைப் போர்க்குற்றவாளிகள் 73 பேர் பிரித்தானியாவில் தஞ்சம் - கார்டியன் செய்தியால் பரபரப்பு

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்களில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் 73 பேர் பிரித்தானியாவில் இருப்பதாக கார்டியன் பத்திரிகை பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் பின் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதும், மனித உரிமை அமைப்புக்களால் போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் தற்போது இனங்காணப்பட்டுள்ள 73 இலங்கையைப் பின்னணியாகக் கொண்டவர்களில் தமிழ் இளைஞர்களும் உள்ளனரா என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கரவெட்டியில் விபத்து குடும்பஸ்தர் மரணம்

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற லொறி-துவிச்சக்கர வண்டி விபத் தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் கரவெட்டி தெற்கைச் சேர்ந்த சின்னத்துரை துரைராசா (வயது 42) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரி ழந்தவராவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

20 ஆண்டுகளாக மனைவியை சிறை வைத்த கணவர்!

பூட்டிய வீட்டுக்குள் 20 ஆண்டுகளாக கணவர் தனது மனைவியை சிறை வைத்திருந்தார். பிரேசில் நாட்டில் உள்ள பரானா மாகாணத்தில் உள்ள மரிலூஷ் நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு வீட்டில் பெண் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்றனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல