சனி, 21 டிசம்பர், 2013

இந்தியாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள அமெரிக்காவுக்கு அறிவுரை

அயல்நாட்டு தூதரக அதிகாரிகளை நடத்தும் விஷயத்தில் இந்தியாவை பார்த்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் கூறியிருக்கிறார். இந்திய பெண் துணை தூதர் தேவயானி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய அமெரிக்க அரசுகளுக்கு இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை சுஜாதா சிங், தூதரக அதிகாரிகளை நடத்துவது பற்றி இந்தியாவிடமிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

கிளிநொச்சியில் சாதனை மரம்…!

தெற்காசியாவின் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் தயாரிக் கப்பட்டுள்ளது. 116 அடி உயரம் கொண்ட இந்த சிறப்பு வாய்ந்த கிறிஸ்மஸ் மரமானது, 75க்கும் மேற்பட்ட படையினர் தயாரித்துள்ளனர்.

தேவ்யானி விவகாரத்தில் யு.எஸ். மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் இந்தியா திட்டவட்டம்!

உலகமும், காலமும் மாறி வருவதைப் புரிந்து கொண்டு தேவ்யானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்....

பெர்முடா முக்கோணம்

மர்ம முக்கோணம்! மரண முக்கோணம்! பேய் முக்கோணம் என்று பயமுறுத்தும் வகையில் அழைக்கப்படும் வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணத்தில் மர்மங்களானது இன்னும் நீடித்துக் கொண்டு தான் உள்ளது. அது என்னவென்றால், அந்த பகுதியில் கப்பல் சென்றாலோ அல்லது விமானம் பறந்தாலோ, அது மர்மமான முறையில் காணாமல் போய்விடும். இதற்கான காரணம் என்னவென்றே தெரியவில்லை.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல