புதன், 31 அக்டோபர், 2012

வண்டிக்குப் பெற்றோல் போடப் போறீங்களா? அதிகாலையில் போடுங்கள்...

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன.

நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும்.

துபாய் ஷாப்பிங் மாலில் ஜட்டி ஆசாமி கைது!

துபாயில் உள்ள ஷாப்பிங் மாலில் வெறும் ஜட்டி மட்டும் அணிந்து ஷாப்பிங் செய்ய வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். துபாயில் உள்ள ஷாப்பிங் மாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு ஷாப்பிங் செய்வதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது வெறும் ஜட்டி, ஷூ மட்டும் அணிந்து கொண்டு அங்கும் இங்கும் திரிந்து 20 வயது வாலிபர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்.

மறதிக்கு என்ன மாற்று வழி?

எல்லாம் தெரிந்தவர்கள் அறிவாளிகள் அல்ல, தெரியாதவர்கள் முட்டாள்களும் அல்ல'' என்பார்கள். அந்த விஷயத்தில் இன்று பலரையும் ஆட்டுவிப்பது மறதி. ஆங்கிலத்தில் "அம்னீஷியா' என்றழைக்கப்படுகிறது.

மெத்தப் படித்தவர்களாகட்டும்,படிக்காதவர்களாகட்டும் மந்தமாகவே இருக்கின்றனர். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் சந்தேகம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. உதாரணமாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எத்தனை என்ற கேள்விக்கு உடனே யாராவது பதில் கூறுகிறார்களா என்றால் இல்லை.

புதுமையான ஏ.டி.எம். அறிமுகம்

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வியக்கவைக்கும் ஏ.டி.எம். எந்திரங்கள் அறிமுகமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள காமன்வெல்த் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்த இந்த வகையை சேர்ந்த புதுமையான 40 ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவி இருக்கிறது.

முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றமும், இன்றைய நிலையும்

1970களில் ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக வடிவு பெற்ற போது முதல் படுகொலையாக அல்பிரட் துரையப்பாவின் படுகொலை இடம் பெற்றது. அல்பிரட் துரையப்பா தமிழரின் விரோதி, தமிழினத் துரோகி என்பது போட்டி தமிழ் அரசியல் வாதிகளால் போலி முத்திரை குத்தப்பட்டார். இந்தப் போலி அரசியல் வாசகங்களை உண்மையென நம்பிய பிரபாகரனால்  1975 யூலை 27 அன்று பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் திடலில் வைத்து துரையப்பா  சுட்டுக்கொல்லப்பட்டார்.

`கறுப்பு சாக்லேட்' ஒரு வரப்பிரசாதம்!

அதிக அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் இதய நோயாளிகள் தினசரி சிறிது கறுப்பு சாக்லேட் வீதம் 10 ஆண்டுகளுக்குச் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பையும், பக்கவாதத்தையும் தடுக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலைநாட்டு மூடநம்பிக்கைகள்!

சில மேலைநாட்டு (மூட)நம்பிக்கைகளைப் பார்ப்போம்...

மரத்தைத் தொடுவது அதிர்ஷ்டம். உப்பைக் கீழே சிந்துவது துரதிர்ஷ்டம். வீட்டு அடுப்பில் குடும்ப தேவதைகள் வாழ்கின்றன.

முட்டை ஓடு, காய்கறித் தோல்களை நெருப்பில் போடக் கூடாது. இரவில் சாப்பாட்டு மேஜையில் வெள்ளைத் துணியை விரித்தபடி வைக்கக் கூடாது. 13 பேர் சேர்ந்து விருந்து சாப்பிடக் கூடாது. ஏணிக்கடியில் செல்வது தவறு.

உறவில் உற்சாகம் அதிகரிக்கணுமா?

என்னதான் செய்தாலும், எப்படிச் செய்தாலும் அவ திருப்தியே அடைய மாட்டேங்குறா பாஸ், இதுக்கு மேல எப்படி ... என்று புலம்புவோரைப் பார்க்கலாம். நோ புலம்பல் மாம்ஸ்... பிரச்சினை உங்க கிட்ட கூட இருக்கலாம். கொஞ்சம் இதைப் படிச்சுப் பாருங்க, சரியாயிருவீங்க.

குழந்தைங்க எதுக்கு அழுறாங்கன்னு தெரியலையா?

குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்கள் எப்போது பார்த்தாலும் அழுது கொண்டே இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் அழும் போது தாய்க்கு என்ன செய்வதென்றே புரியாது. அதிலும் முதல் குழந்தை என்றால் ஒன்றுமே தெரியாது. சிலசமயங்களில் அவர்களின் அழுகையை நிறுத்த பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். அதுவே சில நேரத்தில் கோபம் கூட வரும். குழந்தை பிறந்ததும் பேச முடியாது. அதனால் அவர்களுக்கு இருக்கும் உடல் பிரச்சனைகளை சொல்ல முடியாமல் தான்

சான்டி புயல் காரணமாக இளையாராஜா நிகழ்ச்சி ரத்து?

இலங்கைத் தமிழர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெறவிருந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் கலந்து கொள்ளவிருந்தனர். மிகப் பிரமாண்டமாக ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருந்தது. 30000 க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல