திங்கள், 17 டிசம்பர், 2012

இராஜவரோதயம் சம்பந்தர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் 2

எல்.ரீ.ரீ.ஈ யின் மறைவின் விளைவாக மட்டுமே தமிழர்களின் பிரச்சினைகள் மிகப்பெரிய தார்மீக பலத்தையும் மற்றும் பெரியளவிலான சட்டப்பேற்றையும் கையகப் படுத்திக் கொண்டுள்ளன. (2)

- இராஜவரோதயம் சம்பந்தர் பா.உ.

(2012 டிசம்பர்,7ல் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கைகள் நிச்சயமாக எங்களை கவலையடைய வைத்தன. குறிப்பாக வடக்கில் மற்றும் கிழக்கிலும் கூட, இராணுவம் மிகப் பரந்து விரிந்தளவு நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. நாங்கள் பதட்ட நிலை உருவாவதை விரும்பவில்லை. நாங்கள் இயல்பு நிலமையில் வாழ விரும்புகிறோம். எங்கள் பிரதேசங்களில் குழப்பங்கள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆயுதப் படைகளுடன் மோதிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் சமாதானமாக வாழ விரும்புகிறோம். அவர்கள் அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அங்கிருப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில் அவர்கள் அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அங்கிருக்கும் வேளையில்,அவர்களது பிரசன்னம் எங்களுக்கு பெருஞ்சுமையாக உள்ளது.அவர்களது பிரசன்னம் எங்களை அவமதிப்பது போலுள்ளது. அவாகளது பிரசன்னம் எங்களது சுய மரியாதை மற்றும் தன்மானத்தின்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அது எங்களை சமம் அற்றவர்களாக ஆக்குகிறது. அது எங்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்குகிறது. அதனால்தான் நாங்கள் அதனை விரும்பவில்லை.

ஜே.வி.பி – புலி இரண்டும் வேறுபட்டவை

தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.)யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை.

புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். எனவே, இவ்விரு தரப்பினரதும் போராட்டங்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக

மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்தார்

சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவைப் பற்றி ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டு கைதான ஷாஹீன் தற்போது மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்துள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல