வியாழன், 31 மார்ச், 2016

பாபாவும் திருடன்தான்...

புட்டபர்த்தி சாய்பாபா....


சாய் பாபா ஒரு மனிதன்....
அவர் கடவுள் அல்ல
அவர் மேஜிக் சாமியார்
சாய் பாபா மீது வைத்து இருக்கும் எந்த விமர்சனத்துக்கு நான் பதில் சொல்லபோவதில்லை..

காரணம் இவைகள் எல்லாம் எனக்கும் தெரியும்தான்...அவர் மீது நீங்கள் வைக்கும் எல்லா விமர்சனங்களும் எனக்கும் உண்டு...

திங்கள், 28 மார்ச், 2016

4 வயது மாணவனை உதைத்து தள்ளிய ஆசிரியை: வெளியான வீடியோ

அமெரிக்காவில் அனுபவம் மிகுந்த ஆசிரியை ஒருவர் 4 வயது மாணவனை தனது முழங்காலால் வேண்டுமென்றே உதைத்து தள்ளிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை சட்டை, கருப்பு துண்டில் ஜெ.- சேலையில் வைகோ: இது தேவையா உதயநிதி?!

சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை நக்கல் செய்து போட்டுள்ள ட்வீட் தீயாக பரவியுள்ளது.

வாலிபால் போட்டியின்போது பிரசவம்… குழந்தையை புதரில் வீசி விட்டு தொடர்ந்து விளையாடிய பெண்!

 The basketball player gave birth alone in the toilet before placing the baby in the bushes near the gymnasium “out of fear”. (Photo: AP)

பெய்ஜிங்: சீனாவில் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருந்தபோது, பிரசவித்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் வீராங்கனை புதரில் வீசி விட்டு, மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கள்ள இன்பம்“ தேடும் தமிழ்த்தேசியவாதிகள்


தமிழியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“

“யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்“ என்பார்கள். விடுதலைப் புலிகளும் அப்படித்தான். அந்த இயக்கம் களத்திலிருந்து அகற்றப்பட்டாலும் அதை வைத்துப் பயன்படுத்தும் நிலை மாறவில்லை. கொழும்பு அரசியலும் சரி, தமிழர்களின் அரசியலும் சரி, விடுதலைப் புலிகளை மையமாக வைத்துத்தான் இன்னும் நடக்கிறது. புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு புலிகள் இன்றும் ஒரு கவர்ச்சிப் பொருளே. தமிழ் நாட்டு அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் புலிகள் விரும்பியமாதிரி எல்லாம் கையாளக்கூடிய லாபத்தைக் அள்ளிக் குவிக்கும் ஒரு பெயர். சிலர் ஆதரவாக. சிலர் எதிராக. உலகெங்கும் உள்ள தமிழ் ஊடகங்களில் பெரும்பாலானவைக்கு புலிகளே தீனி. உச்சக்கட்டமாகத் தமிழ் முகப்புத்தகம் புலிகளின் வாலில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளப் புலிகளே தேவை. “புலிகளின் நிழலின்றி எதுவுமில்லைப் பராபரமே“ என்று சொல்லும் அளவுக்கு எல்லாம் “புலி மயம்“.

பிரபாகனை இராணுவம் சுடவில்லை! கருணா கூறினார்: சிவநாதன் கிஷோர் (காணொளி)


Share |

ஞாயிறு, 27 மார்ச், 2016

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு அதிசயத் திருமணம்

யாழில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மீண்டும் நாகரீகமாக மாறும் எம் முன்னோர்களின் செயல்.

மூக்கில் இரத்தம் வடியக் காரணங்கள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்!

இன்றைய தேதிக்கு விதவிதமான உடல் உபாதைகள் பெருகிக் கிடக்கின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று மக்களும் பல்வேறு சிகிச்சைகளை முயற்சி செய்கிறார்கள். இதில் மூக்கில் இரத்தம் வடிவதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன தெரியுமா?

மாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி நாட்களில் உதிரப் போக்கு குறைவாக இருக்கும்.

டென்சனுடன் பேட்டியை கேன்சல் செய்த வைகோ - வீடியோ

மக்கள் நலக் கூட்டணிக்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? என்ற பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கேட்ட கேள்வியால் மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் டென்சனாகி பேட்டியை பாதியில் முடித்து காலர் மைக்கை கழற்றி போட்டுவிட்டு வெளியேறி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெள்ளி, 25 மார்ச், 2016

உடலெங்கும் ரத்தம் வழிய மகனுக்கு பாலூட்டிய தாய்... நெஞ்சை உருக்கும் போட்டோ!

தாய்லாந்தில் கை, கால் உடைந்து, தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த வேளையில் பெண் ஒருவர், தன் 6 மாத மகனுக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.

முஸ்லீம் அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ் (படங்கள் இணைப்பு)

 Pope Francis kisses the foot of a refugee during the foot washing ritual at the Castelnuovo di Porto refugees center near Rome, Italy, March 24, 2016. Osservatore Romano / Reuters
புனித வியாழன் அன்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என 12 அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டுள்ளார்.

புதன், 23 மார்ச், 2016

'எஸ்பிபிக்கு வோட்டு போட இந்த நம்பரைப் பயன்படுத்தவும்'...சூப்பர் சிங்கருக்கு தெறிக்கும் மீம்ஸ்

சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பின்னணிப்பாடகர் ஆனந்த் அரவிந்தாக்ஷன் விருது வென்றது தான், சமூக வலைதளங்களின் தற்போதைய வைரல். ஆனந்த் விருது வென்றதை விட அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் தான் மக்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.

செவ்வாய், 22 மார்ச், 2016

ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா?

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது…? ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன – கடந்த 6 வருடங்களாக தனது மகளை தேடியழையும் தமிழ் தாய் ஒருவருக்கு மட்டும் சந்தோஷமான நாள் அன்று. இனிமேல் நிச்சயமாக தனது மகள் கிடைத்துவிடுவால் என்று.

சூப்பர் சிங்கர் தேர்வில் மோசடியா? விஜய் டிவி விளக்கம்!

சூப்பர் சிங்கர் போட்டித் தேர்வில் சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் கலந்து கொள்ளத் தடை ஏதுமில்லை. எனவே விதி மீறல் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது விஜய் டிவி..

திங்கள், 21 மார்ச், 2016

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை

சாப்பிடக் கூடாதது
1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.

வெள்ளி, 18 மார்ச், 2016

சமாதானத்துக்கான துணிச்சல் பிரபாகரனுக்கு இல்லை!: “கூர்வாளின் நிழலில்..” புத்தகத்தை விமர்சிக்கிறார் த.நா. கோபாலன்

“சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலியைப் பார்த்துமுடித்தவுடன் இருக்கையைவிட்டு எழுந்திருக்கத் தோன்றவில்லை. எல்லோரும் சென்ற பிறகு தனியாக அரங்கில் அமர்ந்து…. பார்த்த, உள்வாங்கிய, அனைத்தையும் அசைபோடவேண்டும்! சிந்திக்கமுடியாவிட்டால் கூட தனியே வெறுமையை எதிர்கொள்ளவேண்டும், மாபெரும் கலைப் படைப்புக்கள் அத்தகைய உணர்வுகளையே தூண்டும்!” என்பார் ஓர் விமர்சகர்.

பொட்டு அம்மான் மீண்டும் வரவில்லை

நந்திக்கடல் விவகாரம் குறித்து பொன்சேகா விபரிப்பு
தவறுதலாகவே வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது

புலி­களின் தலைவர் பிர­பா­கரன் மற்றும் பொட்டு அம்மான் உள்­ளிட்ட சிலர் இறுதி யுத்­தத்­தின்­போது நந்­திக்­கடல் தென் பகு­திக்கு தப்பிச்சென்­ற­தாக கே.பி.கூறி­யி­ருக்­கிறார். அத்­துடன் பிர­பா­கரன் திரும்பி வந்­த
தா­கவும் பொட்டு அம்மான் வர­வில்லை என்றும் அவர் கூறி­யி­ருக்­கின்றார். அந்த தகவல் மட்­டுமே எங்­க­ளுக்கு தெரியும்.

வியாழன், 17 மார்ச், 2016

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

நம் உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகள் குறித்து தெரியுமா? இந்த அழுத்தப் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இம்மாதிரியான வைத்தியங்கள் சீனாவில் மிகவும் பிரபலமானது.

மிகவும் நீளமான திருமண ஆடை

சீனாவில் ஷாங்டொங் மாகா­ணத்தில் ஜினான் நக­ரி­லுள்ள வீதியில் திரு­மண ஆடைக் கடை­யொன்றின் விற்பனை ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கைக்­காக 331 அடி நீள­மான பின் மேலாடைத் துணியைக் கொண்ட மணப்பெண் ஆடையை அணிந்து பெண்­ணொ­ருவர் ஊர்­வ­ல­மாக சென்று நகர மக்கள் அனை­வ­ரதும் கவ­னத்­தையும் ஈர்த்­துள்ளார்.

தப்­பிச்­சென்ற இரு கைதி­களை பிடிக்க உத­விய வீடு­வா­ச­லற்­ற­வ­ருக்கு 100,000 டொலர் சன்­மானம் மத்­தியூ

அமெ­ரிக்க சான்பிரான்­சிஸ்கோ பிராந்­தி­யத்­தி­லுள்ள சிறைச்­சா­லை­யொன்­றி­லி­ருந்து தப்பிச் சென்ற இரு கைதி­களை மீளப் பிடிக்க பொலி­ஸா­ருக்கு உத­வி­ய­மைக்­காக வீடு­வா­ச­லற்ற நப­ரொ­ருவர் 100,000 அமெ­ரிக்க டொலர் பணத்தை சன்­மா­ன­மாக பெற்­றுள்ளார்.

சமையல் குறிப்புகள்

பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

புதன், 16 மார்ச், 2016

பாலியல் இலஞ்சம் கோரும் தமிழ் அரச ஊழியர்கள்! (சந்திரிகா அதிர்ச்சி தகவல்)

வடக்கு மாகாணத்தில் கணவனை இழந்த பெண்களிடம் இராணுவத்தினர் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோரும் ஈனச் செயல்கள் நடப்பதாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க. நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நேற்று நடத்திய செயலமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

செவ்வாய், 15 மார்ச், 2016

அந்நாள் பெண் போராளிகள் இந்நாள்...?

இந்தா வீடு கட்டுறம் என்டு காசு சேர்த்தாங்க அவுஸ்திரேலியாவுல. ஒரு லட்சம் காசு தந்தாங்க. அவ்வளவுதான். அவாட இலட்சியத்துக்காக செலவழிக்கப் போறோம் என்டு சொல்லித்தான் காசு சேர்த்தவங்களாம். ஒரு நாள் மீட்டிங்ள மட்டும் 6 லட்சம் சேர்த்தவங்களாம். மிச்ச காசுக்கு என்ன நடந்தது என்டு தெரியா” என்று முடிக்க முன் அவரின் தாய் குறுக்கிட்டு, “முழுமையா எங்களுக்கு வந்தடையலயே? நீங்கதானே எடுத்துக்கொண்டீங்க. சுவிஸ், அங்க இங்கனு காசு சேர்த்திருக்காங்க. ஆனா, ஒன்டும் வந்து சேரல” என்று முடிக்கிறார்.

கருப்பா இருக்கும் அக்குளை வெள்ளையாக்குவதற்கான எளிய 3 வழிகள்!

அரிசி ஸ்கரப்

இந்த ஸ்கரப் செய்வதன் மூலம், வியர்வை மற்றும் துர்நாற்றம் கட்டுப்படுத்தப்படும். மேலும் இந்த ஸ்கரப் செய்வதால் அக்குளில் உள்ள கருமை நீங்கி விரைவில் வெள்ளையாகும்.

கிராமத்து கோழி குழம்பு

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 இன்ச்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - நறுக்கியது

திங்கள், 14 மார்ச், 2016

கிளிநொச்சியில் தனது 4 மாத பிள்ளையை சுவரில் அடித்துக் கொலை செய்தார் பெண் அரச ஊழியர்

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் தனது 4 மாதக் குழந்தையை கால்களில் பிடித்து சுவரில் தலையை மோதிக் கொலை செய்துள்ளார் பெண் அரச உத்தியோகத்தர். குறித்த குழந்தை தொடர்ச்சியாக அழுததால் கோபமடைந்ததே இவர் இவ்வாறு செய்துள்ளதாக கிளிநொ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிறந்த பின்னர் குறி்த்த பெண் அரச உத்தியோகத்தர் மனப் பிறள்வான தன்மையைக் கொண்டிருந்தாகவும் தெரியவருகின்றது.

NewJaffna
Share |

ஞாயிறு, 13 மார்ச், 2016

நாம் பார்த்த இணையதளங்களின் முகவரிகள் நாம் மட்டுமே பார்க்கும் வகையில் அமைத்துக் கொள்ள

ஒரு இலவச புரோகிராம் உள்ளது. அதன் பெயர் xmarks.

நீங்கள் தயாரித்த வேர்ட் டாகுமெண்ட்களில் மற்றவர்கள் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தாமலிருக்க...

வேர்டில் இதற்கான வழிகள் உள்ளன. உங்கள் டாகுமெண்ட்டினை 'படிக்க மட்டும்' (Read Only) என அமைத்துவிட்டால் போதும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும், மிக எளிய வழி ஒன்றினைக் கீழே விளக்குகிறேன்.

சனி, 12 மார்ச், 2016

யாரும் அறிந்திராத கூகுள் தந்திரங்கள்.!!


துவங்கப்பட்டதில் இருந்து இன்று வரை உலகின் தலைசிறந்த தேடு பொறி நிறுவனம் இருப்பது கூகுள். இண்டர்நெட் தேடலில் முதலிடத்தில் இருப்பதோடு பல்வேறு சேவைகளையும் வழங்கி வரும் கூகுள் நிறுவனம் சார்ந்து யாரும் அறிந்திராத சில பொழுதுபோக்கு தந்திரங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

வெள்ளி, 11 மார்ச், 2016

ஏன் பெண்களை மெட்டியும், கொலுசும் வெள்ளியில் அணிய சொல்கிறார்கள் தெரியுமா?

நமது காலாச்சாரத்தில் பெண்கள் சிறு வயது முதலே கொலுசு அணிவதும், திருமணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிவதும் பொதுவாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு பின்னணியில் ஆரோக்கியம், பிரசவம் சார்ந்த அறிவியல் காரணங்களும் இருக்கின்றன.

2005 இல் மகிந்த ராஜபக் ஷ வை ஜனா­தி­பதியாக கொண்டு வரவதற்கு பிரபாகரன் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா??

விடுதலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் உயி­ரி­ழப்­ப­தற்கு முன்­ப­தா­கவே யுத்தம் முடி­ வ­டைந்­து­விட்­ட­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அறி­வித்­தி­ருந்தார். ஆனால் போர் முடிந்­த­தாக அறி­விக்­கப்­பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திக­தி­யன்றும் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் உயி­ரு­ட­னேயே இருந்தார் என்று அமைச்­சரும் முன்னாள் இரா­ணுவத் தளபதியு­மான பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

வியாழன், 10 மார்ச், 2016

பிரிட்டன் இந்துக்கள் சிலர் கோமியம் குடிப்பதேன்?

லண்டனில் பசுவின் கோமியம் கடைகளில் விற்கப்படுவதை பிபிசியின் ஆசிய பிரிவு சேவை கண்டறிந்துள்ளது.

லண்டனில் இருக்கும் தெற்காசியக்கடைகளில் கோமூத்ரா என்கிற பெயரில் விற்கப்படும் இந்த பசுவின் கோமியத்தை பிபிசி செய்தியாளர் காசு கொடுத்து வாங்க முடிந்தது.

ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறு என பாலசிங்கம் ஒத்துக் கொண்டார்.. சோல்ஹீம்

லண்டன்: விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப் பெரிய தவறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுதான் என்று ஆண்டன் பாலசிங்கம் தன்னிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாக நார்வே முன்னாள் சிறப்புத் தூதர் எரீக் சோல்ஹீம் கூறியுள்ளார்.

புதன், 9 மார்ச், 2016

இந்த 7 அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு 'அந்த நோய்' நிச்சயம்..!!

அச்சச்சோ... அறிகுறிகளா..?? நோயா..?? என்று உடனே 'டென்ஷன்' ஆக வேண்டாம். இருப்பதிலேயே மிகவும் மோசமான நோய், மனநிலை சார்ந்த நோய்கள் தான் என்பதை ஒற்றுக்கொள்பவர்கள் மட்டும் மேற்கொண்டு படிக்க தொடரலாம். அதிலும் முக்கியமாக உங்களுக்கு 'பேஸ்புக்' ரொம்ப பிடிக்கும் என்றால், நிச்சயம் நீங்கள் இதை படித்தே தீர வேண்டும்..!

செவ்வாய், 8 மார்ச், 2016

கண்மூடித்தனமாக 'லைக்' செய்ய வேண்டாம், பின்விளைவு உறுதி..!

எந்நேரமும்... எவ்வளவு லைக்ஸ் வந்துள்ளது, இன்னும் எவ்வளவு லைக்ஸ் வரும், யாரெல்லாம் லைக்ஸ் போட்டு இருக்கிறார்கள் என்பதை கண்காணித்துக் கொண்டே இருப்பவர்ளை 'மரியாதையாக' லைக்காஃபோபியா (Likeaphobia)நோய் கொண்டவர்கள் என்றும் கூறலாம், கொஞ்சம் 'கேவலாமாக' - பேஸ்புக் பைத்தியம் என்றும் கூறலாம்.

திங்கள், 7 மார்ச், 2016

பேஸ்புக்கில் புதிய ஐகான்கள்

பேஸ்புக்கில் ஒருவரின் தகவல் பதிவைப் படித்தவுடன், அது தனக்குப் பிடித்திருக்கிறது (Like) என்று கருத்து தெரிவிக்கலாம். மிகவும் பிடித்திருந்தால், அதே பதிவைத் தன் பக்கத்தில் பதிந்து வெளியிடலாம். அங்கே, முதலில் எழுதியவரின் பெயர் இடப்பட்டு, “அவரின் பதிவு இங்கே பகிர்ந்து தரப்படுகிறது” என்று காட்டப்படும். சென்ற வாரம், பேஸ்புக் இந்த Like கருத்தினைத் தெரிவிப்பதில், மேலும் சில வசதிகளையும், உணர்வினைக் காட்டும் ஐகான்களையும் தந்துள்ளது.

ஞாயிறு, 6 மார்ச், 2016

ஆட்டோ ஓட்டுனர் முதல் தேசிய விருது வரை - கலாபவன் மணி!

சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறி தென்னிந்திய திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. காமெடி, நடிப்பு, குணச்சித்திரம் என ஒரு வெர்சடைல் நடிகரார சிறந்து விளங்கினார் கலாபவன் மணி.

நடிகர் கலாபவன் மணியின் மறைவால் வேதனை அடைந்துள்ளேன்: பிரதமர் மோடி

டெல்லி: நடிகர் கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் கலாபவன் மணி மரணம்

பிரபல நடிகர் கலாபவன் மணி கல்லீரல் பிரச்சனை காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 45. பிரபல நடிகர் கலாபவன் மணி கல்லீரல் பிரச்சனை காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார்.

சனி, 5 மார்ச், 2016

`புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'

 நோயெதிர்ப்புக் கட்டமைப்பை ஒழுங்கு படுத்தி புற்று நோயை அழிக்கும் முறைமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மனித உடலில் `நோயெதிர்ப்புக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி' புற்றுநோயை அழிக்கும் முறைமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பிரிட்டனில் உள்ள ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொலைபேசிகளை ஒட்டுக்கேட்ட போது இவர்கள் அரசுக்கு எதிராக தகவல்கள் பரிமாறி வருகின்றனர்.

ஆர் இந்த இரும்பு மதவடி NEWJAFFNA , SELVA ? பாகம் 01

01 - 09 ஆண்டு வரை நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் படித்த ஒரு தறுதலை.

02 - MR.ARIYAKUNARAJAH SELVA புலிகள் இயக்கத்தில் இருந்து பல கோடி பணத்துடன் தலைமறைவாகி லண்டனுக்கு தப்பி ஓடியவன்.

நீதிமன்ற ஊழியரை உள்ளாடை துவைக்கச் சொன்ன நீதிபதியை சஸ்பெண்ட் செய்ய வைகோ வலியுறுத்தல்

சென்னை: சத்தியமங்கலம் நீதிமன்ற ஊழியரை உள்ளாடை துவைக்க சொன்ன நீதிபதிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தாமே முன்வந்து தலையிட்டு சர்ச்சைக்குரிய நீதிபதி செல்வத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளி, 4 மார்ச், 2016

அபா­ய­க­ர­மான விலங்­கு­களின் விநோத நட்பு (படங்கள் இணைப்பு)

அபா­ய­க­ர­மான விலங்­கு­க­ளான சிங்­க­மொன்றும் புலி­யொன்றும் கர­டி­யொன்றும் ஒன்­றுக்­கொன்று நட்­பு­ற­வுடன் பழகி வரும் அதி­சயம் அமெ­ரிக்க ஜோர்­ஜிய மாநி­லத்­தி­லுள்ள நோவாஸ் ஆர்க் விலங்குப் புக­லி­டத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­தோ­னே­சி­யாவில் காத­ல­ருடன் தனித்து பொழுதைக் கழித்த யுவ­திக்கு 50 பிரம்­ப­டிகள்

காதல­ருடன் தனி­யாக பொழுதைக் கழித்த போது கையும் கள­வு­மாக பிடிக்­கப்­பட்ட 19 வயது யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு பெரு­ம­ளவு பொது­மக்கள் முன்­னி­லையில் 50 பிரம்­ப­டிகள் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட சம்­பவம் இந்­தோ­னே­சி­யாவில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

இறைவன் ஆணை­யிட்­டதால் 4 வயது சிறு­மியை படு­கொலை செய்­த­தாக ரஷ்ய பெண் தெரி­விப்பு

ரஷ்ய மொஸ்கோ நகரில் தனது பரா­ம­ரிப்­பி­லி­ருந்த 4 வயது சிறு­மி­யொ­ரு­வரை தலையைத் துண்­டித்து படு­கொலை செய்த குழந்தை பரா­ம­ரிப்­பாளர் ஒருவர் புதன்­ கி­ழமை நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்டார்.

6 மாத கால­மாக 5 வயது சிறு­மியின் மூக்­கி­லி­ருந்த 1.5 அங்­குல பூட்­டூசி (safety pin)

கடந்த ஆறு மாத கால­மாக கடும் சளியால் பாதிக்­கப்­பட்டு மருத்­துவ சிகிச்சை பெற்றும் குண­ம­டை­யாத 5 வயது சிறு­மி­யொ­ரு­வரின் மூக்கில் 1.5 அங்­குல நீள­மான பூட்­டூசி இருப்­பது கண்­ட­றி­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

உங்களுக்கு ஒன்று சொல்வேன்

வர­வி­ருக்கும் தமி­ழக சட்­ட­சபைத் தேர்­த­லுக்­காக திரா­விட முன்­னேற்றக் கழகம் காங்­கிரஸ் கட்­சி­யுடன் மீண்டும் கூட்டுச் சேர்ந்­தி­ருப்­ப­தை­ய­டுத்து இலங்கைத் தமிழர் பிரச்­சினை தேர்தல் பிர­சா­ரங்­களின் முக்­கிய பேசுபொருள்­களில் ஒன்­றாக இருக்­கப்­போ­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

உள்ளாடையை துவைக்கவில்லை… நீதிபதி கொடுத்த மெமோ!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி, தன் உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு மெமோ கொடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.

இந்திய அரசியலையே தடம் மாற்றிய ராஜீவ்காந்தி கொலை நடைபெற்றது எங்கே தெரியுமா?

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 25 வருடங்களாக சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதும் அதனை தொடர்ந்து இனி மத்திய அரசு எடுக்கவிருக்கும் முடிவும் தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

வியாழன், 3 மார்ச், 2016

ராஜீவ் வழக்கும், ஏழு பேர் விடுதலையும்- என்ன தான் விரும்புகிறார் ஜெயலலிதா?

தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து விட்டது. பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்து விட்டதாக தெரிவிக்கிறார் மாநில தலைமை செயலாளார் கே.ஞானதேசிகன்.

போதையால் உச்சகட்ட கோபம்: சக தோழியின் கன்னத்தை கடித்து சதையை தனியாக எடுத்த பெண்!

 GRUESOME: A large chunk of flesh was bitten out of Kate Nield's cheek
இங்கிலாந்தில் தனது தோழிகளுடன் மது விருந்திற்கு சென்ற பெண்ணின் கன்னத்தை அவருடன் பணியாற்றும் பெண்மணி ஒருவர் கடித்து எடுத்துள்ளார்.

உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்” விருது!

ஒரு முக்கிய அறிவித்தல்: வாழ்நாள் முழுவதும் சாதிவெறி, இனவெறி, மதவெறி பேசி சாதனை படைத்த நபர்கள், IBC தொலைக்காட்சியால் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கிக் கௌரவிக்கப் படுவார்கள்!

யாழில் திருட முயன்ற இருவர் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் பட்டப் பகலில் நகையைத் திருட முயன்ற இருவர் கையும் மெய்யுமாக கடை ஊழியர்களால் பிடிக்கப்பட்டு யாழ். பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புதன், 2 மார்ச், 2016

வேர்ட் டாகுமெண்ட்டில் தோன்றும் ஐகான்

வேர்ட் டாகுமெண்ட்டில், எதையேனும் பேஸ்ட் செய்தால், இறுதி வரி அல்லது படத்திற்குக் கீழாக, ஒரு சிறிய ஐகான் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், சில ஆப்ஷன்கள் காட்டப்படுகின்றன. இதை லட்சியம் செய்திடாமல், தொடர்ந்து டைப் செய்தால், அது மறைந்துவிடுகிறது. பின்னர் தேடினாலும் கிடைப்பதில்லை. எதற்காக இந்த ஐகான்?

Hybernate நிலை Sleep நிலை, என்றால் என்ன

இரண்டு நிலைகளும், ஸ்லீப் மற்றும் ஹைபர்னேஷன் (Sleep and hibernation), ஏறத்தாழ ஒரே செயல்பாட்டினையே தருகின்றன. இவை இரண்டும் இயக்கப்படுகையில், இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன சேவ் செய்யப்படுகின்றன.

எக்ஸெல் டிப்ஸ்! டேட்டாவினை வரிசைப்படுத்த, எக்ஸெல் தேதி உள்ளீடு

டேட்டாவினை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்! வேர்ட் டாகுமெண்ட்டின் அமைப்பினை அறிந்து கொள்ள

வேர்ட் புரோகிராமில், நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் குறித்த அனைத்து புள்ளி விபரங்களை நமக்கு எடுத்துச் சொல்ல டூல் ஒன்று உள்ளது. டாகுமெண்ட் ஒன்றில், எத்தனை பக்கங்கள், சொற்கள், எழுத்துகள் சொற்கள், பத்திகள் உள்ளன என்று அந்த டூல் பட்டியலை நமக்குத் தருகிறது.

இந்த டாகுமெண்ட் புள்ளி விபரங்கள் எப்படி காட்டப்படுகின்றன என்று பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்! இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய

வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும்.

செவ்வாய், 1 மார்ச், 2016

ஜிமெயில் பின்னணியை மாற்ற!

இணையத்தில் செயல்படும் அனைவரும், தங்களின் மின் அஞ்சலாக, கூகுள் தரும் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் அஞ்சல் தளத்தினைத் தாங்கள் விரும்பும்படி அமைத்திட கூகுள் வழி தந்துள்ளது. பல படங்கள், கட்டமைப்புகளை இதற்கென வழங்குகிறது.

யாஹூ மெயில் தளத்தில் தானாகப் பதில் அளிக்கும் Auto Response வசதியை எப்படி செட் செய்வது?

கீழே தந்துள்ள செயல்முறைகளைப் பின்பற்றவும். இவை, யாஹூ மெயில் சார்ந்த குறிப்புகள் மட்டுமே. மற்ற மின் அஞ்சல் கணக்குகளுக்கு அல்ல.

உங்கள் பிரவுசரில் www.mail.yahoo.com என்ற தளத்தில் நுழையவும்.

உங்களுடைய லாக் இன் பக்கம் காட்டப்படும்.

டாஸ்க் பாரில் “Get Windows 10” என்ற ஐகானை நீக்க ...

உங்கள் விருப்பம் இல்லாமல், நீங்கள் சரி என்று கிளிக் செய்திடாமல், உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட மாட்டாது. டாஸ்க் பாரில் உள்ள ஐகானை நீக்க வேண்டுமா? அது அங்கிருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அதனை நீக்கிவிடலாம்.

பயர்பாக்ஸ் பிரவுசர் திடீரென முன்பு போல் இயங்கவில்லை

ஏதேனும் வைரஸ் அல்லது மால்வேர் கைப்பற்றி இருக்குமோ என்பதனை எப்படி உறுதி செய்வது?

கீழே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை நீங்கள் உணர்ந்தால், உங்கள் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டு விட்டது என்பது உறுதியாகிறது.

எக்ஸெல் டிப்ஸ்... செல்லுக்குள் சுருங்கும் எண்கள், ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க, ஒரே டேட்டா - பல செல்கள்

ஒரே டேட்டா - பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.

வேர்ட் டிப்ஸ்! அகராதியில் இல்லாத சொல்

அகராதியில் இல்லாத சொல்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது.

பிகாஸோ மூடப்படுகிறது

சென்ற பிப்ரவரி 12 அன்று கூகுள் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தன்னுடைய போட்டோக்களுக்கான செயலியான பிகாஸோவினை (Picasa) உடனடியாக மூடுகிறது. ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னர், கூகுள் அறிமுகப்படுத்திய 'கூகுள் போட்டோஸ்' செயலியின் மீது, தன் முழு கவனத்தையும் திருப்புவதற்காக, பிகாஸோவினை மூடுகிறது.

திரையில் தோன்றும் கீ போர்ட்

விண்டோஸ் இயக்கத்தில், திரையில் நம் பயன்பாட்டிற்கென ஒரு கீ போர்ட் தரப்படுகிறது. கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் கீ போர்ட் நமக்கு இல்லை என்றாலும், இதனை நாம் பயன்படுத்த முடியும். குறிப்பாக, இப்போது வரும் தொடு உணர் திரை எனப்படும் 'டச் ஸ்கிரீன்' திரையில் இதன் பயன்பாடு அதிக வசதிகளைத் தருகிறது. இதனை மவுஸ் மூலம் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 சிஸ்டங்களில், இரண்டு வகையான கீ போர்ட் தரப்படுகிறது. இவை: basic touch keyboard மற்றும் advanced on-screen keyboard. இரண்டாவது கீ போர்டினை Ease of Access செட்டிங்ஸ் அமைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த இரண்டினையும் எப்படி பெற்றுப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.

விண்டோஸ் இயக்கத்தில் மவுஸ் ட்ரிக்ஸ்

கம்ப்யூட்டர் இயக்கத்தில், குறிப்பாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மவுஸ் சாதனத்தின் பயன்பாடு அளப்பரியது. கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் சாதனங்களில், மிகவும் நுண்மையான, அதிக வசதிகளை தரக்கூடியது மவுஸ்தான். ஆனால், பயனாளர்கள் அனைவரும், மவுஸ் பயன்படுத்திக் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகமே. பெரும்பாலும், புரோகிராம் அல்லது டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க, காண்டெக்ஸ்ட் மெனு பெற, பைல் தேர்ந்தெடுக்க, பைலைத் தேர்ந்தெடுத்து போல்டர்களில் இழுத்துப் போட என்று சில செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சில நாசூக்கான வேலைகளையும், வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களில், மவுஸைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

ரேஷன் கார்டு இல்லாததால் நின்ற இருதய ஆப்பரேஷன்

சிவகங்கை: ரேஷன் கார்டு இல்லாததால், சிவகங்கை சிறுவனுக்கு, சென்னை அரசு மருத்துவமனையில் நடக்க இருந்த இதய ஆப்பரேஷன் நிறுத்தப்பட்டது. இதனால, புது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த சிறுவனின் தாய்க்கு, 'எக்ஸ்பிரஸ்' ரேஷன் கார்டு வழங்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல