ஞாயிறு, 28 ஜூலை, 2013

விண்டோஸ் 7ல் கம்ப்யூட்டரை பூட் செய்து எவ்வளவு நேரம் இயங்கிக் கொண்டிருந்தது என்று அறிய

டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Task Manager என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது (Ctrl+Shift+Esc) என்ற கீகளை அழுத்தவும். இப்போது டாஸ்க் மானேஜர் விண்டோ கிடைக்கும். இதில் தரப்பட்டுள்ள டேப்களில் Performance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ரெஸ்டோர் (restore) பாய்ண்ட் வசதி உருவாக்க

விண்டோஸ் சிஸ்டத்தின் முக்கிய செயல்பாடு இது. சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், மீண்டும் அதனை இயக்கத்திற்குக் கொண்டு வர, இந்த செயல்பாடு மிக முக்கியமானதாகும். எக்ஸ்பியில் நீங்கள் கையாண்ட வழி இல்லாமல், இதில் வேறு வழியைக் கையாள வேண்டும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

விண் 8ல் ஸ்டார்ட் கீ செயல்பாடு

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் கீ இல்லாமல், பலர் முகம் சுழிக்கின்றனர். ஏறத்தாழ, அதன் செயல்பாட்டினைப் பெறும் சிறிய வழி ஒன்று உள்ளது. விண்டோஸ் கீயை அழுத்தி, கீ போர்டில் எக்ஸ் (X) கீயினைச் சேர்த்து அழுத்தவும்.

லேப்டாப் மவுஸின் பாய்ண்ட்டரை உங்கள் வசதிப்படி பெரிதாக்க

1. “Start” கிளிக் செய்து “Control Panel” –ஐத் தேர்ந்தெடுக்கவும்.

2. “Mouse” என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

குழந்தைகளுக்கான இணையத் தேடல் இஞ்சின் கிட்ரெக்ஸ்

உங்கள் குழுந்தைகள், இணையத்தை உலா வர உட்கார்ந்தால், உங்களுக்கு பகீர் என்கிறதா? அவர்கள் பார்க்க கூடாத இணைய தளங்கள் தப்பித் தவறி வந்துவிடப் போகிறதே என்று பதறுகிறீர்களா? ஏற்கனவே இந்த மலரில், இத்தகைய சூழலுக்கு சிறுவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் முறைகள் குறித்து, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரவுசர்கள் கொடுக்கும் பாதுகாப்பு வழிகள் குறித்து பார்த்துள்ளோம்.

வேர்ட் டிப்ஸ்

வேர்டில் டூல்பார் ஐகானில் படம், டெக்ஸ்ட் மாற்ற: வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.

இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

அதிக பாராக்களை ஒரே செல்லில் அமைத்திட

வேர்ட் தொகுப்பில் உள்ள டேட்டாவினை எக்ஸெல் தொகுப்பிற்கு மாற்ற வேண்டிய தேவை நம்மில் பலருக்கு அடிக்கடி வரும். பல நேரங்களில் இந்த டேட்டாவினை நம் விருப்பப்படி எக்ஸெல் செல்களில் அமைக்க முடியாது. நாம் ஒரு வழியில் திட்டமிட்டால் டேட்டா பல செல்களில் அமைந்து நம் திட்டத்தைக் கெடுக்கும். இதனை எப்படி சரி செய்து நம் தேவைக்கேற்ப அமைப்பது எனப் பார்க்கலாம்.

விண்டோஸ் 8 திரையில் பின்புலப் படங்கள்

விண்டோஸ் 8 இயக்கம் தொடங்கப்படுகையில், இரண்டு வகையான திரைக் காட்சிகளைப் பார்க்கலாம். இரண்டுமே Logon screen அல்ல. விண்டோஸ் 8 இயக்கச் செயல்பாட்டினைத் தொடங்குகையில், முதலில் நாம் காண்பது Lock screen. இது மிகப் பெரிய அளவில், நேரத்தையும், தேதியையும் காட்டும். அடுத்ததாக நமக்குக் கிடைப்பது Signin screen. இங்கு யூசர் அக்கவுண்ட் விண்டோ காட்டப்பட்டு, பாஸ்வேர்ட் கொடுக்கச் சொல்லி கேட்கப்படும். விண்டோஸ் 7 இயக்கத்தில், அதன் செயல்பாடு தொடங்கும்போதே, அதன் Logon திரை கிடைக்கும். நாம் பாஸ்வேர்ட் கொடுக்கும் வரை அப்படியே இருக்கும். இங்குதான், பின்புலத் திரையை தங்கள் விருப்பப்படி அமைக்க விரும்புகிறோம்.

யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை

பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிக்கிறோம். ஆனால், சில வேளைகளில், நம் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள, ஐ.எஸ்.ஓ. பைல் பயன்படுத்தி, விண்டோஸ் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட விரும்புவோம். இதில் பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திடாமல், குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைலை படிக்க இயலாது. இங்கு, விண்டோ ஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான ஐ.எஸ்.ஓ. பைலைப் பயன்படுத்தி, பூட் செய்யக் கூடிய யு.எஸ்.பி. டிஸ்க்கினை எப்படித் தயார் செய்வது எனப் பார்க்கலாம்.

மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரை கிளீன் செய்திட

இந்த டிஜிட்டல் உலகம் தரும் அனைத்து கேடு விளைவிக்கும் புரோகிராம்களிடம் இருந்தும், உங்கள் கம்ப்யூட்டரை மிகக் கஷ்டப்பட்டு, பாதுகாக்கிறீர்கள். உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்கிறீர்கள். சந்தேகப் படும்படியான இணைய தளங்கள் பக்கமே செல்லாமல் இருக்கிறீர்கள். அதே போல, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் லிங்க்களில் கிளிக் செய்வதில்லை. ஜாவா, ப்ளாஷ் மற்றும் அடோப் ரீடர் புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கிறீர்கள். அல்லது இவை இல்லாமலேயே, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, உங்கள் பணியை முடிக்கிறீர்கள்.

எஸ்.டி. கார்ட் பயன்பாட்டில் சிக்கல்கள்

மொபைல் போன்கள், கேமராக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் நாம் அனைவரும் பயன்படுத்துவது எஸ்.டி. (SDSecure Digital) கார்ட்களே. மிகச் சிறிய இந்த கார்ட்களில் நாம் பல ஜிபி டேட்டாக்களைப் பதிந்து எடுத்துச் செல்லலாம். மேலே கூறப்பட்ட சாதனங்களில் வைத்து, தகவல்களை எளிதாகப் பதியலாம். தொல்லை அற்ற இந்த கார்டுகள், சில வேளைகளில் நாம் எதிர்பார்த்த செயல்பாட்டினை மேற்கொள்ளாது. அந்த வேளைகளில் நாம் சற்றுப் பொறுமையினை இழந்து, கார்டினைக் குறை கூறத் தொடங்குவோம். இந்த கார்ட் பயன்படுத்துவதில் நாம் சந்திக்கும் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம்.

விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

விண்டோஸ் 8 தொடுதிரை வசதிகளுடனும், முற்றிலும் புதிய இடைமுகம் எனப்படும் இன்டர்பேஸ் கொண்டும் அமைக்கப்பட்டிருப்பதால், வழக்கமான விண்டோஸ் ஷார்ட் கட் கீகளையே பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், இந்த சிஸ்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் பழக சற்று சிரமப்படுகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்த தொகுப்பு வழங்கப்படுகிறது.

விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ்

விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் இயங்கத் தொடங்கியவுடன், பிற நிறுவனங்கள், இதில் இயங்கும் வகையில் தயாரித்து வெளியிட்டுள்ள பல சிஸ்டம் டூல்ஸ்களை நாம் பதிந்து இயக்கத் தொடங்குகிறோம். ஆண்ட்டி வைரஸ், பயர்வால், சிடி பதிதல், மானிட்டர் நிர்வாகம், பி.டி.எப். வியூவர் என இவை பலவகைப்படும். இவை அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதாலும், இவை குறித்த தகவல்கள் நமக்கு அதிகம் கிடைப்பதனாலும், இவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஒரு சிலர், இவை விண்டோஸ் சிஸ்டத்தில் இல்லாததனால், மற்ற நிறுவனங்கள் தயாரித்துத் தரும் இவற்றைப் பதிய வேண்டியதுள்ளது என்று எண்ணி இயங்குகின்றனர். ஆனால், விண்டோஸ் சிஸ்டத்திலேயே, இத்தகைய சிஸ்டம் டூல்ஸ் பல தரப்பட்டுள்ளன என்பதே உண்மை. குறிப்பாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில், நாம் எதிர்பார்க்கும் பல புதிய டூல்ஸ்கள் உள்ளன. விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் பல்வேறு பயன்பாட்டு புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

இணையத்தில் கற்றுக் கொள்ள

இணையம் ஒரு விண்ணளாவிய தகவல் சுரங்கம். அது மட்டுமின்றி, இருபக்கமும் கூர்மையான கத்தி போன்ற சாதனமாகும். இணையத்தைக் கொண்டு, அன்றைய பொழுதை வீணாகவும் கழிக்கலாம்; அதே நேரத்தில், நல்ல பயனுள்ள தகவல்களையும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ள சில நிமிடங்களே போதும். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதனை நீங்களே வியக்கும் வகையில் கற்றுக் கொள்ளலாம்.'
இணையத்தில் கற்றுக் கொடுக்கும் தளங்கள் பல இருந்தாலும், கீழே மிக அதிகமானோர் பயன்படுத்தும் தளங்களாக ஆறு தரப்பட்டுள்ளன. நீங்கள், இதுவரை இவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தால், உடனடியாக இவற்றைக் கண்டு, தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்பது உறுதி. அவற்றை இங்கு பார்ப்போம்.

விண்டோஸ் 7 - ஸ்டிக்கி நோட்ஸ்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும், புதிய வசதிகளில், மேம்படுத்தபப்ட்ட ஸ்டிக்கி நோட்ஸ் என்னும் வசதி குறிப்பிடத்தக்கதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து பல வாசகர்களும் நமக்கு எழுதி உள்ளனர். அனைவரும் அறியும் வண்ணம் அது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

ஆக்ஸ்போர்ட் அகராதியில் ட்வீட் (“Tweet”)

புதிய சொற்களைத் தன் அகராதியில் ஒரு சொல்லாக இணைக்க வேண்டும் எனில், அந்த சொல் குறைந்தது பத்து ஆண்டுகளாவது புழக்கத்தில், ஒரே பொருளுடன் இருக்க வேண்டும் என்ற விதியை, ஆக்ஸ்போர்ட் அகராதி ஆசிரியர் குழு கொண்டுள்ளது.

விண்டோஸ் 8: சில குறிப்புகள்

போட்டோ நிர்வாகம்: நம் போட்டோக்களை எளிதாகக் கையாள, விண்டோஸ் 8, விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) என்னும் அப்ளிகேஷன் ஒன்றை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வழங்கியுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நாம் போட்டோக்களை மிக எளிதாக, நம் கம்ப்யூட்டரில் பதிய முடியும். Photos app மூலம் இவற்றை மாற்றிக் கொள்வது மிக எளிது என்பதால், நூற்றுக் கணக்கில் நாம் போட்டோக்களை, கம்ப்யூட்டருக்கு மாற்றுகிறோம். இந்த அப்ளிகேஷன் சில அடிப்படையான வேலைகளை மட்டுமே மேற்கொள்ள நமக்கு வழி காட்டுகிறது. இந்த அப்ளிகேஷனைத் திறந்து, நாம் காட்ட விரும்பும் போட்டோ பைலின் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர் அதனை நம் விருப்பப்படி காட்டுகிறோம்.

விண்டோஸ் 7 ல் தனிதனியே யூசர் அக்கவுண்ட் தொடங்குவது எப்படி ?????

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், யூசர் அக்கவுண்ட்களை உருவாக்க எளிதான வழிகளைத் தருகிறது. இதன் மூலம், ஒரு பயனாளர், எந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பயன்படுத்தலாம் என்று வரையறை செய்து விண்டோஸ் சிஸ்டத்திற்குச் சொல்கிறது. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரில், ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களை உருவாக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எப்படி இவற்றை உருவாக்கலாம் என்பதனை இங்கு பார்க்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவிலிருந்து Control Panel ஐத் திறக்கவும்.

விண்டோஸ் 8ல் மீடியா பிளேயர் செட் செய்திட

விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர் அதில் உங்களுக்குப் பழக்கமான விண்டோஸ் மீடியா பிளேயர் புரோகிராமினை உங்கள் ஆடியோ பைல்களை இயக்கும் மாறா நிலை புரோகிராமாக செட் செய்திட ஒரு சில செட்டிங்ஸ் மாற்றங்களை மேற்கொண்டால் போதும்.

எக்ஸெல் பங்சன்கள்

பங்சன் என்பது எக்ஸெல் தொகுப்பு ஏற்கனவே உருவாக்கிய பார்முலாவினைக் குறிக்கிறது. எக்ஸெல் தொகுப்பில் இது போல பல பார்முலாக்கள் உள்ளன. அவற்றை நேரடியாக நாம் பயன்படுத்தலாம். அத்தகைய பொதுவான பங்சன்களில் சிலவற்றை இங்கு காணலாம்.

விண்டோஸ் ஸ்டோரில் ஒரு லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள்

விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்களில் பயன்படுத்த அப்ளிகேஷன் புரோகிராம்களை எழுதுமாறு, மென்பொருள் வல்லுநர்களுக்கு, முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. அவற்றினைத் தன் விண்டோஸ் 8 ஸ்டோர் தளத்தில் பதிந்து கொண்டு வழங்க அனுமதித்தது.

வேர்ட் டிப்ஸ்

ஹைலைட்டிங்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்து முடித்தவுடன், அதனைப் படிப்பவரின் கவனத்தைச் சில சொற்கள் பால் ஈர்க்க வேண்டும் என விரும்புவோம். அதற்காக அவற்றை போல்டு செய்தாலோ, அல்லது சாய்வாக அமைத்தாலோ அது பிற விளைவுகளைப் படிப்பவர்கள் பால் ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக ஹைலைட் செய்திடலாம். மெல்லிய வண்ணங்களில் அவற்றை அமைத்திடலாம். இதற்கு வேர்டில் உள்ள ஹைலைட் டூல் அழுத்த வேண்டும். வழக்கமாக நாம் ஹைலைட் பேனா கொண்டு என்ன செய்வோமோ, அதன்படி இதிலும் செய்திடலாம். இதனுடைய அடிப்படை வண்ணம் மஞ்சள். ஒரு வரிசையில் ஐந்து வண்ணங்கள் இருக்கும். மூன்று வரிசைகள் மூலம் 15 வண்ணங்களை அமைக்கலாம். இந்த டூல் பாரைத் தேர்ந்தெடுத்தவுடன் பென்சில் போல கர்சர் கிடைக்கும். அதனைக் கொண்டு ஹைலைட் செய்திட வேண்டிய டெக்ஸ்ட்டை ஹைலைட் செய்திடலாம். ஹைலைட் செய்ததை நீக்கிட None என்பதைத் தேர்ந்தெடுத்து ஏற்கனவே அமைத்ததன் மீது இழுக்க வேண்டியதுதான்.

கூடுதலாக ஆப்ஜெக்ட் காப்பி செய்திட

விண்டோஸ் சிஸ்டத்தில், அதன் கிளிப் போர்டில், ஏதேனும் டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றை காப்பி செய்தால், அது அங்கு தங்கும். ஆனால், இரண்டாவதாக ஒன்றைக் காப்பி செய்திடுகையில், முதலில் காப்பி செய்தது மறைந்து போகும்.

இதன் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க இயலாது. இந்தக் குறையினைத் தீர்க்க நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் விண் கிளிப்பர் (Winklipper)

டப் எங்கல்பர்ட் (ஜனவரி 30, 1925-ஜூலை 2, 2013)

மவுஸ் வடிவமைத்த எங்கல்பர்ட் மரணம்!

இன்றைய கம்ப்யூட்டர்களின் தொடக்க காலத்தில், மவுஸ் உட்பட பல்வேறு சாதனங்களை வடிவமைக்கக் காரண கர்த்தாவாக இருந்த எங்கல்பர்ட் (Doug Engelbart), சென்ற ஜூலை 2ல், தன் 88 ஆவது வயதில் மரணமடைந்தார். 1950 முதல் 1960 வரை, "கம்ப்யூட்டர் உலகின் தீர்க்கதரிசி" எனப் பாராட்டும் புகழும் பெற்றவர் எங்கல்பர்ட். மனிதனின் நுண்ணறிவை வளப்படுத்துவதில், கம்ப்யூட்டர் முக்கிய பங்கினை எடுத்துக் கொள்ளும் எனவும், உலகப் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, அவற்றிற்குத் தீர்வு காண கம்ப்யூட்டர் பயன்படும் எனவும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தவர் அவர்.

உலகில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்ற முதலாவது ஆண் விவாகரத்து வழக்கு !! – படங்கள் இணைப்பு

உலகில் முதன்முதல் கர்ப்பம் தரித்து பிள்ளை பெற்ற ஆண் என்கிற பெருமைக்கு உரியவர் Thomas Beatie. வயது 38. 2008 ஆம் ஆண்டில் முதல் குழந்தையை பிரசவித்தார். இவருக்கு மூன்று குழந்தைகள்.

புதுமைப் பெண்ணை சீண்டிப்பார்க்கும் இணையம்

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வன்னியில் வலம் வந்து மக்களுக்கு துணிச்சலுடன் சலிக்காது அளப்பரிய சேவையாற்றிவரும் அம்மணி கீதாவை ஒரு இணையம் சீண்டிப் பார்த்துள்ளதாம். கடன் சுமை காரணமாக ஒளிந்து கொண்டு தன்னைக் கடத்திவிட்டார்கள் என கதை கட்டி விட்டு வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அந்த முன்னாள் உள்ளூர் ஊடகவியலாளராம். கற்பனையில் புலனாய்வுச் செய்திகளை எழுதிவரும் இவர் வன்னி வந்து அரசின் அபிவிருத்தியைப் பார்க்க வேண்டும் என்றும் தமிழ்ப் பெண்களை இவ்வாறு விமர்சிப்பது அழகல்ல என்றும் கீதா ஒரு போடு போட்டுள்ளாராம்.

தினகரன்
Share |
Image Hosted by ImageShack.us

விடை பெற்ற அழகிய தமிழ் மகள்

நடுத்தர குடும்பத்தில் பிறந்த மஞ்சுளா சின்ன வயதில் இருந்தே எம்.ஜி.ஆருடன் நாயகியாக நடிக்க வேண்டும் என்கிற கனவில் இருந்தார். வளர்ந்ததும், ரிக்'hக்காரனில் எம்.ஜி.ஆருடன் நடித்தார்.

பெருங்காயம்

ஒரு மரத்தினுடைய பிசினிலிருந்து வரும் பாலில் செய்யக் கூடியது. ஆங்கிலப் பெயர் பெரூலா அசபோய் டிடா (ferula asafoetida). இதை மருந்திற்குப் பயன்படுத்துவார்கள். பொதுவாக ஒரு குறள் உண்டு.

மாறுபாடு இல்லாத உண்டி

மருந்துண்ணின் ஊறுபாடு

இல்லை உயிர்க்கு

என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

ஒரு பொருளோடு இன்னொரு பொருள் சேரும் போது எதிரான பொருளைச் சேர்க்கும் போது வயிற்றிலே சென்று சண்டை போடக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ஒற்றுமை ஏற்படாது. நோயை உண்டாக்கக் கூடியது.

மாவீரன் செண்பகராமன்

“எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும்” என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால் நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் - நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்.” என்று கூறினான் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?

அமெ­ரிக்­காவின் அர­சியல் சாணக்­கியம்

திரு­கோ­ண­ம­லையில் இலங்கைக் கடற்­படை மற்றும் விமா­னப்­ப­டைக்கு அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் சிறப்புப் படைப்­பி­ரிவைச் சேர்ந்த அதி­கா­ரிகள் அளித்து வந்த ‘பிளாஷ் ஸ்ரைல்‘ பயிற்சி இறு­திக்­கட்­டத்தை அடைந்­தி­ருந்த போது, வொஷிங்­டனில், ஐ.நா.வுக்­கான புதிய அமெ­ரிக்கத் தூது­வரின் நிய­மனம் தொடர்­பாக செனட் வெளி­வி­வ­காரக் குழு ஆராய்ந்து கொண்­டி­ருந்­தது.

இந்த இரண்டு விட­யங்­களும் ஒன்­றுடன் ஒன்று நேர­டி­யாகத் தொடர்­பு­டைய விட­யங்கள் அல்ல.

அதே­வேளை, கொஞ்சம் கூடத் தொடர்­பே­யில்­லாத விட­யங்­களும் அல்ல.

அவுஸ்­தி­ரே­லியா நோக்­கிய ஆபத்து மிக்க படகுப் பயணம்

அவுஸ்­தி­ரே­லியா நோக்கி சட்­ட­வி­ரோ­த­மாகப் பய­ணிப்­போரின் எண்­ணிக்கை நாளாந்தம் அதி­க­ரித்து வரு­கின்­றது. பட­கு­களின் மூலம் சட்­ட­வி­ரோ­த­மாகப் பய­ணிப்­பது ஆபத்து நிறைந்­தது என அறிந்­தி­ருந்தும் கூட உயி­ரையும் துச்­ச­மென மதித்து சிலர் பய­ணித்து வரு­கின்­றனர்.

மூன்று பிள்ளைகளின் தாய் குத்திக்கொலை

உயிரிழந்த விஜயகுமாரி மகனுடன்

சாதாரணமாக ஒரு ஈ, எறும்பைக்கூட கொல்லத்தயங்கிய காலமொன்று இருந்தது. ஆனால் இன்று சர்வசாதாரணமாக மனித படுகொலைகளை புரிகின்ற அளவுக்கு சமூகம் மாறியிருப்பதானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். தாய், தந்தை, கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் என உறவுகளையே 

கொலை செய்யுமளவுக்கு இந்த கொலைப்படலம் வியாபித்துள்ளது.

மக்­களை மறந்த அர­சியல்வாதிகள் மீண்டும் வாக்கு கேட்க வந்து விட்­டார்கள்



வீரகேசரி

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களை வாக்குகள் மூலம் தெரிவு செய்வது வாக்காளரது உரிமை! பொய் வாக்குறுதிகளை வாரிவழங்கும் போலி அரசியல் தலைவர்களை இனங்கண்டு ஒதுக்குவது எமது கடமை!

தேர்தல் ஒன்று வந்­தால்தான் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மக்­க­ளைப்­பற்­றிய நினைவு வரும். மக்­களை என்றால் மக்­க­ளை­யல்ல- அவர்­களின் 'வாக்­கு­க­ளைப்­பற்றி' நினை­வுக்­கு­வரும். மற்­ற­படி மக்கள் வெறும் 'மாக்­கற்கள்' தான்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல