திங்கள், 28 மே, 2012

வீடு தேடிவந்து வக்கிர உணர்விற்கு வித்திடும் தமிழ் மெகா தொடர்கள்

தென்னிந்திய தமிழ் சினிமாக்களினதும், தொலைக்காட்சி மெகா தொடர் களினதும் வளர்ச்சி விண்ணைத் தொட்டு அதற்கும் அப்பால் சென்று விட்டது என்றே கூறவேண்டும். தமிழையும், கலையையும் இலக்கியச் சுவையுடன் அதேவேளை நாசூக்காக நாலு விடயங்களையும் புகுத்தி தமிழர் பண்பாடு, கலாசார விழுமியங்களுக்கு அப்பாற்சென்றுவிடாது பாதுகாத்து வளர்த்தது அந்தக்காலம். தமிழை டமிலாகவும், கலைகளை காமமாகவும், இலக்கியத்தை இல்லறங்களை பிரிப்பதாகவும், இரட்டை அர்த்த வசனங்களில் இளைய சமுதாயத்தைச் சீரழிப்பதாகவும் பெருமையுடன் வளர்ப்பதாக நினைப்பது இந்தக்காலம்.

அஸ்திவாரம் இல்லாத வீடு!

ஒரு கட்டடம் கட்ட வேண்டுமானால் முதலில் அஸ்திவாரம் அமைப்பது வழக்கமான நடைமுறை. அஸ்திவாரம் அமைக்காமலே கட்டடம் கட்டும் முறை ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா? யூரி விளாசவ் என்பவர் கண்டுபிடித்த இந்த முறை ‘மண்ணை அழுத்துதல்’ என்று கூறப்படுகிறது. 1968 ஆம் ஆண்டு நோவோசி பிர்ஸ்க் என்ற இடத்தில் குடியிருப்புகள் கட்ட ஆரம்பித்தனர். அந்த இடம்இ களிமண்ணும்இ மணலும் கொண்ட பரப்பு உடையது. எனவே அங்கு 16 மீற்றர் ஆழத்துக்கும் அஸ்திவாரம் தோண்டினால்தான் கட்டடம் உறுதியாக இருக்கும் என்று தீர்மானித்தனர். ஆனால் 11 மீற்றர் அளவுக்குத் தோண்டும்போதே அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. அதற்குக் கீழே கடும் பாறையாக இருந்ததுதான் காரணம். உடனே மண்ணைப் பற்றி ஆராயத் தொடங்கினர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல