சனி, 7 டிசம்பர், 2013

இலங்கைக்கு எதிராக திரும்புமா இந்தியா???

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் பேர­வையில், இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா கொண்டு வந்த தீர்­மா­னத்தை இந்­தியா ஆத­ரித்த பின்னர் இரு­நா­டு­க­ளுக்கும் இடை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வு­களில் ஒரு­வித மந்த நிலை இருந்து வரு­கி­றது.

பாலிவுட்டில் படு ப்ளாப்பான பிரபு தேவா படம்... திட்டித் தீர்க்கும் விமர்சகர்கள்!

இந்த ஆண்டின் படு மோசமான படம், இதெல்லாம் ஒரு படமா..., இது படமல்ல - பெரும் தலைவலி..., இதுக்கு மார்க்கே கிடையாது... வேணும்னா ஜீரோ போட்டுக்கலாம், இப்படியெல்லாம் விமர்சனங்களைச் சம்பாதித்துள்ளது பிரபு தேவா இயக்கத்தில் நேற்று வெளியான ஆர் ராஜ்குமார்.

போராளித் தலைவன் நெல்சன் மண்டேலாவுக்கு உலக பிரபலங்களின் 'ட்வீட்டாஞ்சலி'

உலகம் போற்றும் உன்னத போராளியான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு சமூக வலைதளமான ட்விட்டரும் தமது அஞ்சலியை செலுத்திவருகிறது. அதில் உலக தலைவர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவின் அடிமை இருள் அகற்ற பிறந்த ஒளிநட்சத்திரம் சுயநலம் பாராது இனநலம் கருதி தன்னையே ஒப்படைத்துக் கொண்ட பெருந்தலைவன் நெல்சன் மண்டேலா.

மண்டேலாவுக்கு ஒபாமா நேரில் சிறப்பு அஞ்சலி!

தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபராக இருந்த நெல்சன் மண்டேலாவுக்கு, அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் பராக் ஒபாமா சிறப்பு அஞ்சலி செலுத்துகிறார்.

உல­க­ளா­விய ரீதியில் அதி­க­ரித்து வரும் சிறுவர் பிரச்­சி­னைகள்

உல­க­ளா­விய ரீதியில் சிறு­வர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் நாளுக்­குநாள் அதி­க­ரித்த வண்­ண­மாக உள்­ளன. சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்தின் அதி­க­ரித்த தன்­மை­யா­னது ஒழுக்­க­முள்ள சமூக உரு­வாக்­கத்­துக்கு சவா­லாக விளங்­கு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும். சிறு­வர் உரி­மை­களை பேணும் பொருட்டு பல்­வேறு ஆவ­ணங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள போதும் அவை அனைத்தும் ஏட்­ட­ளவில் முடங்கிக் கிடப்­ப­த­னையே பெரும்­பாலும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. சட்­டங்­களை நடை­முறைப்­ப­டுத்தும் அதி­கா­ரி­களின் வலு­வற்ற போக்­குகள் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களை உக்­கி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது என்ற குற்­றச்­சாட்­டு­களும் இல்­லா­ம­லில்லை.

மின்­னு­யர்த்­தியில் தனித்து விடப்­பட்ட பால­கனை மாடி­யி­லி­ருந்து வீசிய சிறுமி (படங்கள் இணைப்பு)

தாயால் தவ­று­த­லாக மின் உயர்த்தி உப­க­ர­ணத்தில் தனித்து விடப்­பட்ட பால­கனை 10 வயது சிறு­மி­யொ­ருவர் அடித்து, உதைத்து மாடி­யி­லி­ருந்து தூக்கி வீசி படு­கொலை செய்த விப­ரீத சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. தென் மேற்கு சீனாவில் சொங்கிங் நகரைச் சேர்ந்த மேற்­படி தாயார் யுவன்­யுவான் என்ற தனது 2 வய­துக்கும் குறை­வான வய­து­டைய பால­கனை சம்­பவ தினம் தள்ளு வண்­டியில் வைத்து மின்­னு­யர்த்தி உப­க­ர­ணத்தில் அழைத்துச் சென்­றுள்ளார்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாயு தொல்லையை சமாளிக்க சில எளிய வழிகள்!!!

கர்ப்ப காலங்களில் வாயு பிரச்சனை வருவது என்பது கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாகும். எண்ணம், சுவை, உடல் மற்றும் மன ரீதியில் என பல்வேறு மாற்றங்களை நீங்கள் கர்ப்ப காலங்களில் சந்திக்க நேரிடும். மற்றவர்கள் சாதரணமாக செய்யக் கூடிய விஷயங்களை கர்ப்பிணிகளால் செய்ய முடியாது மற்றும் அவர்கள் கர்ப்பத்திற்கு முன்னர் செய்த சாதாரண வேலைகள் கூட இப்பொழுது கடினமாகத் தோன்றும். கர்ப்பிணிகளுக்கு வாயு பிரச்சனை வருவதற்கு இதுதான் முதன்மையான காரணமாகும்.

கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது ...

ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது. ஒரு பெண்ணின் வயது அவள் கர்ப்பம் அடைவதற்கு முக்கியகாரணமாக இருக்கின்றது. ஆகவே, கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை கண்டறிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

நெல்சன் மண்டேலாவின் காதல்களும் திருமணங்களும்!

நெல்சன் மண்டேலா ஒரு போராளி என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு அவர் பெண்களைக் கவர்ந்த நாயகன் என்பது உண்மை. அவரது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை பயணத்தின் பல்வேறு கட்டங்களில் 3 மனைவிகளுடன் பயணித்துள்ளார். இதற்கிடையே ஒரு மண்டேலாவின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கப்பட்ட நிகழ்வும் அவர் வாழ்வில் உண்டு.

21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் தலைவரை உலகம் இழந்துவிட்டது

இனி எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், எத்தனை யுகங்கள் கடந்தாலும் இந்நூற்றாண்டின் 2013ஆவது ஆண்டை காலம் சபித்துக்கொண்டே இருக்கும். காரணம் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் தலைவர், விடுதலைத் தீரத்தோடு தன் மக்களை மீட்டெடுத்த மாமனிதர் நெல்சன் மண்டேலா இயற்கை எய்திய ஆண்டு என்பதால்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல