செவ்வாய், 13 மே, 2014

தமிழர்களால் மறக்க முடியாத குமுதினிப் படகு படுகொலைகள்!

குமுதினிதெற்கே பவளப் பாறைகளை அடித்தளமாகக் கொண்ட மாவலிதுறை நெடுந்தீவு கிழக்கில் இருந்தது. அங்கிருந்து நயினாதீவின் கிழக்கு கரை நோக்கி பயணித்து புங்குடுதீவின் கரையில் குறிகட்டுவான் துறைமுகத்தில் பயணிகளையும் பண்டங்களையும் கரை சேர்ப்பதும் அதேபோல் மீண்டும் மக்களையும் பொருட்களையும் நெடுந்தீவிற்கு எடுத்துப் போவதும் குமுதினிப் படகின் நாளாந்த கடமை.

கொன்றவனுக்கும் வீரவணக்கம்… கொல்லப்பட்டவனுக்கும் வீரவணக்கம்… யமனுக்கே இடியப்பம் தீத்தும் தமிழன்!

முகப்புத்தகத்தில் ஒரு தகவலைப் பார்த்தன். ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கு வலைத்தளங்களில் பலர் வீர வணக்கமும் அஞ்சலியும் செலுத்தியிருந்தார்கள். இதை அவர் சார்ந்த அமைப்பு, அவரை நேசிப்பவர்கள் செய்திருந்தார்கள். ஆனால் தங்களைத் தீவிர தமிழ்த்தேசியவாதிகளாகவும் விடுதலைப்புலிகளையும் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மற்றவனையெல்லாம் துரோகிகள் ஆக்கியவர்களும் சிறீ சபாரத்தினத்திற்கு அஞ்சலி செலுத்தியது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல