ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சுவிஸ் நாட்டிலேயே மிகப் பெரிய வழக்கு!! : போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்கு 15 மில்லியன் பணம் வசூலித்த 12 தமிழர்கள் நீதிமன்றத்தில் !!

• தமிழர்களை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்குப் 15 மில்லியன் சுவிஸ் பிறாங் பணம் வசூலிப்பு

• சுவிஸ் நாட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) கமிட்டியின் 12பேர் சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

• சுவிஸ் நாட்டின் மிகப் பெரும் விசாரணையாக இது இருக்குமென கருதப்படுகிறது.

'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம்

நடிகர் தவக்களை மாரடைப்பால் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று மரணம் அடைந்தார்.

புலம்பெயர் புலிகளால் 14 இலட்சம் ரூபாய் பணம்கொடுத்து சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்ட முயற்சி முறியடிப்பு!! (பாகம-2)

பகுதி - 2

விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் உறுதியாக நிறுவப்பட்டுள்ளது, மூன்று வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள், சிவபரன் என்கிற நெடியவன் தலைமையிலான புலம்பெயர் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என நம்பப்படுபவர்கள், சதித்திட்டம் மேற்கொண்டு, நிதி வழங்கி மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள ஐந்து முன்னாள் புலி உறுப்பினர்களை யாழ்ப்பாண மாவட்ட ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டி அதை நடைமுறைப்படுத்த தூண்டிவிட்டுள்ளார்கள் என்று. இது சுமந்திரனின் கொலை முயற்சி ஒரு நாடகம் என விளக்கி வருபவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது. அதேவேளை தீர்மானமான ஒரு சதித்திட்டத்தின் இருத்தல் மற்றும் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தயாரெடுப்புகள் என்பன தீர்க்கமாக நிரூபிக்கப்பட்டுள்ளன, இதில் உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது, சுமந்திரனின் படுகொலை முயற்சி, எல்.ரீ.ரீ.ஈ யிற்கு புத்துயிர் அளிக்கும் பெரிய சதியின் ஒரு பகுதியா அல்லது வெறுமனே சுமந்திரனை மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தனியான ஒரு சதியா என்பதுதான்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல