ஞாயிறு, 21 டிசம்பர், 2014

சொத்துக்களை விற்று, வங்கிக் கடன் வாங்கி ஐஎஸ்ஐஎஸ் சேர முயன்ற இளைஞர்கள்... மலேசியாவில்!

கோலாலம்பூர்: சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட மலேசியாவிலிருந்து செல்லும் சிலர் அதற்காக வங்கிக் கடன் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

லிங்கா நஷ்டம்: ரஜினியிடம் புகார் தரப் போகிறோம், பாதுகாப்பு தேவை - கமிஷனரிடம் விநியோகஸ்தர்கள் மனு

சென்னை: லிங்கா படம் சரியாக ஓடாததால் திங்கட்கிழமை ரஜினியை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அப்போது எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திரைப்பட விநியோகஸ்தர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திரைப்பட விநியோகஸ்தர்கள் சனிக்கிழமை மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

துப்பாக்கி முனையில் துடிதுடித்து உயிரிழந்த இளந்தளிர்கள்

அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகர உண­வ­கத்தில் 50 பேர் பணயக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்டு தடுத்­ து­வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கடும் போ ராட்­டத்தின் மத்­தியில் இரண்டு உயி­ரி­ழப்­புக்­க­ளுடன் 16 மணி­நேர போராட்­டத்தின் பின் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட நாட­கத்­தினால் உல­கமே அதிர்ச்­சியில் உறைந்து போயி­ருந்­தது. அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து உலக மக்கள் விடு­ப­டு­வ­தற்கு முன்னர் பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்ள மற்­று­மொரு துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் 132க்கும் மேற்­பட்ட இளம் மாண­வர்கள் உட்­பட 145 பேர் கொடூ­ர­மாகப் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருப்­பது உல­கத்­தையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது.

உழைப்புக்காகச்சென்று உயிரிழந்த ஓர் அப்பாவி யாழ். இளைஞன்

"நொச்­சி­யா­கம பிர­தே­சத்தை அண்­மித்­த­வேளை மேற்­படி இளை­ஞ­னான துசாந்­தனை, டயர்­களை கழற்றப் பயன்­படுத்­தப்­படும் இரும்­பி­லான வீல் பிற­ச­ரினால் தாக்­கி­ய­தா­கவும் இதனால் அவன் மயக்­க­ம­டைந்து விட்­ட­தா­கவும் பின்னர் தூக்­கிச்­சென்று காட்­டினுள் வீசி­ய­தா­கவும் சாரதி கூறினான்"

கொ ள்ளை, வழிப்­பறி, கொலை என்­பன இன்று நாட்டில் சர்­வ­சா­தா­ர­ண­மாக மாறி விட்­டன. பணத்­துக்­கா­கவும் இதர சிறிய தேவை­க­ளுக்­கா­கவும் கூட ஈவி­ரக்­க­மின்றி கொலைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

குடும்ப வறுமை கார­ண­மா­கவும், பொரு ளா­தாரக் கஷ்­டங்­களின் நிமித்­தமும் இளம் வய­தினர் ஏதா­வது கிடைக்கும் ஒரு தொழிலை செய்து குடும்­பத்தைக் காக்கும் நோக்­குடன் புறப்­ப­டு­கின்­றனர். அதே­வேளை, பணத்­தாசை பிடித்த சில கழு­கு­க­ளுக்கு அவர்கள் இரை­யா­கவும் நேரு­கின்­றது. அப்­படி ஒரு சம்­பவம் தான் அண்­மையில் வட பகு­திக்கு பொருட்­களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒரு­வ­னுக்கும் நேர்ந்­தது.

நீதி கிடைக்கும் வரை ஓயாது தேடி­ய­வர்­களின் வீர வர­லாறு ஒன்று

முயற்­சிகள் ஏது­மின்றி முடங்கி மௌன­மாக நீட்­டிக்­கி­டக்கும் எந்த இனத்­துக்கும் வலி­ய­வந்து நீதி­தே­வதை வரங்கள் ஏதும்­தரப் போவ­தில்லை. உலகில் நடத்­தி­மு­டிக்­கப்­பட்ட இனப்­ப­டு­கொ­லைகள் இனச்­சுத்­தி­க­ரிப்­புகள் அனைத்துக்கும் உரிய நீதி கிடைத்­தி­ருக்­கி­ற­தா­என்றால் இல்லை.

மலை­ய­கத்­திற்கு தேவை தனி மனித முன்­னேற்­ற­மல்ல சமூக விடு­த­லையே

எவ்­வ­ளவு மோச­மான சமூகப் பகு­தி­யி­ன­ராக இருந்­தாலும் மிகக் குறைந்த வீதத்தில் ஒரு குறிப்­பிட்ட அள­வானோர் கல்வி கற்று உயர் தொழில் பெற்று அல்­லது வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு நல்ல வாழ்க்கை வாழ்­வ­தையும் செல்­வந்­தர்­களாய் வாழ்­வ­தையும் காண்­கிறோம். இப்­படி முன்­னே­றி­ய­வர்கள் பாராட்­டப்­பட வேண்­டி­ய­வர்­க­ளா­வார்கள். இவ்­வாறு விதி விலக்­காக சிலர் முன்­னே­று­வது இச்­ச­மூக அமைப்பின் நிய­தி­யே­யாகும்.

'காணி, தனி வீடு கொடுத்தால் வெளி­யா­ருக்கு விற்று விடு­வார்­களா?'

மலை­யக மக்­க­ளி­டையே 7 பேர்ச் சஸ் காணி மற்றும் தனித்­தனி வீடுகள் அமைத்­துக்­கொ­டுக்­க ப்­பட வேண்டும் என்ற கோஷம் வலுப்­பெற்­றுள்­ளது. மக்கள் சுய­மாக சிந்­திக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர் என்­ப­தற்கு இந் தக் கோஷம் முன்­னு­தா­ர­ண­மாகும். இனி­மேலும் மலை­யக மக்­களை ஏமாற்ற முடி­யாது என்­ப­தற்கு இது ஒரு எச்­ச­ரிக்­கை­யா­கவும் அமை­கி­றது.

முழங்கைகளில் உள்ள கருமையை நீக்க .....

பலர் உடலை அழகாக வைத்துக் கொள்ள நிறைய முயற்சிகளை எடுப்பார்கள். அதில் அழகைப் பராமரிக்கிறேன் என்று பெரும்பாலானோர் செய்வது அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழிப்பது தான். அப்படி செலவு செய்து என்ன பயன்? முகம், கை, கால் மட்டும் அழகாக வெள்ளையாக இருந்தால் போதுமா, முழங்கை அழகாக இருக்க வேண்டாமா? பிறகென்ன அழகு என்று பலர் நினைக்கும் போது, முகம், கை, கால்களை மட்டும் நினைத்து, அதற்கு மட்டும் அதிக பராமரிப்புக்களை கொடுக்கிறார்கள்.

உதவி கோரு­கிறார்

கொழும்பு–-15 மட்டக்­ குளி எனும் முக­வரி யைச் சேர்ந்த திரு மதி எஸ்.ஞான­வ­டிவு பரம்­சோதி இரு­தய கோளாறால் நோய்­வாய்ப்­பட்டு அவ­தி­யு­று­ கிறார். இவரை சத்­தி­ர­ சி­கிச்சை மூலம் குணப்­ப­டுத்த வைத்­திய செல­வாக 3,25,000 ரூபா தேவைப்படுவதால் இவ­ர­து­ கு­டும்­பத்­தினர் பரோ­ப­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து உதவி கோரு­கின்­ற னர். நிதி உத­வி­களை மக்கள் வங்கி (Queens Branch) 033-2-001-3-1796617க்கு வைப்பு செய்ய லாம்.
Share |
Image Hosted by ImageShack.us

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல