புதன், 8 டிசம்பர், 2010

பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண்

இளம்பெண்கள் பெரும்பாலும், அழகான ஆண்களை திருமணம் செய்து கொள்ளவே விரும்புவர். ஆனால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமலதா என்ற இளம்பெண், பாம்பை திருமணம் செய்துள்ளார்.

மஹிந்தா விமானத்தை திசை திருப்பினாரா? - வெளிவருகிறது புதிய தகவல்கள்

இலண்டன் விஜயத்தின் போது எதிர்பாராத விதமாகச் சந்தித்த நெருக்கடிகளை அடுத்து அவசரமாக கொழும்பு புறப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானம் ஒன் றையே கொழும்புக்குத் திசைதிருப்பி வந்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

டி.வி., பார்த்தவர்களுக்கு சிறைத்தண்டனை

டி.வியில் நாடகம் பார்த்த குற்றத்திற்காக ஆயிரம் பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வடகொரியாவும், தென்கொரியாவும் எப்போமே ஒருவருக்கொருவர் எதிரிகளாக பாவித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருநாட்டுக்கும் பொதுவான கடல் எல்லையில் உள்ள தீவு ஒன்றிற்காக போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியமக்கள் திருட்டுத்தனமாக தென்கொரியாவுக்கு சொந்தமான டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தென்கொரிய டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்த்த சுமார் ஆயிரம் பேரை கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது வடகொரிய நாடு.

"விக்கி'-விக்கினேஸ்வரப் பெருமான் தமிழர் வினை தீர்க்க"லீக்' ஆக்கிறான்

விநாயகனுக்கு விக்கினேஸ்வரன் என்று பெயருண்டு. விக்கினங்களைத் தீர்ப்பவன் என்று அது பொருள்படும். (விக்கி+ ஈஸ்வரன்) தன்னை நம்பினோரின் வினை தீர்ப்பவன் அவன். எப்படி வினை தீர்ப்பான்? தன்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு தீங்கிழைத்தோரை தண்டிப்பதன் ஊடாக அந்த வினை களையப்படும்.

தான்சானியாவின் விடுதலை நாள்

தான்சானியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ ஜனநாயகக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது.

இலங்கை யுத்தக் குற்றங்களில் இந்தியாவுக்கும் பாரிய பொறுப்பு! - அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு வகிப்பதாக அமெரிக்க இராஜாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. புதிதாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தகவல்கள் இவற்றை உறுதி செய்துள்ளன.

வட கொரியாவிலிருந்து இலங்கைக்கு ஆயுதம்

அதிரடி பாதுகாப்புத் தகவல்களை கசிய விட்டு வருகின்ற விக்கிலீக்ஸ் இணையத்தளம் தற்போது இலங்கை தொடர்பில் மற்றுமொரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

நடிகை நதீ சந்திரசேகர குற்றமற்றவர்

ஐக்கிய அமெரிக்க விசாவை பெறுவதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்தார் என குற்றஞ்சாட்டி 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டு வந்த பிரபல தொலைக்காட்சி நாடக நடிகை நதீ சந்திரசேகர குற்றம் அற்றவர் என இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இனம்காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் 50 இலங்கையர்கள் சுற்றிவளைப்பு

சட்டவிரோத இலங்கை குடியேற்றவாசிகள் 50 பேர் பாங்கொக்கில், தாய்லாந்து பொலிஸாரால் சுற்றிவளைக்கபட்டுள்ளனர். இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டவர்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாங்கென் பிரதேசத்தில் பகோல் ஜோதின் வீதியில் சோய் பேர்ம்சின் பகுதியில் வாடகை அறைகளில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் இவர்கள் குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைக்களுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல