செவ்வாய், 5 ஜூலை, 2016

எளிய ஆங்கிலத்தில் மாற்றி எழுத ஒரு இணைய தளம்

ஒரு மொழியில் எழுதுகையில், எழுதப்படுவது அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் வகையில் எளிமையாகஎழுதலாம். அடிக்கடி பயன்படுத்தாத, அல்லது சற்று நேரம் எடுத்துப் புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களைக்
கொண்டும் எழுதலாம். எடுத்துக் காட்டாக, தமிழில் 'ஜன்னல்' என்பதை ஜன்னல் என்று எழுதினால், வழக்குமொழிச் சொல் எனப் பலரும் புரிந்து கொள்வார்கள். 'சாளரம்' என்று எழுதினால், “இதென்ன புலவர் தமிழாக
உள்ளதே” எனச் சிலர் புரிந்து கொள்ளலாம்.

விண்டோஸ் 10 சிஸ்டத்தில் எழுத்துருக்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்க முறைமைகள், சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்களை ஏற்றுச் செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. சில பதிப்பாளர்கள், இந்த இயக்க முறைமையில் இயங்கும் வகையில், எழுத்துருக்களை உருவாக்கிப் பயன்படுத்துகின்றனர். நம் டாகுமெண்ட்கள் சிறப்பாக அமைய வேண்டுமென்றால், நம் கலைப் படைப்புகள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றால், பிற நிறுவனங்கள் தரும் இந்த எழுத்துருக்களையும் பயன்படுத்த வேண்டியதுள்ளது. இவற்றை எப்படி, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பதிந்து பயன்படுத்தலாம் மற்றும் தேவைப்படாத போது நீக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

அடுத்த ஆண்ட்ராய்ட் மொபைல் சிஸ்டம் 'நகெட்'

மொபைல் போனில் இயங்கும் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்புகளை வெளியிடுகையில், கூகுள் அதற்கு ஏதேனும் ஓர் இனிப்பு பண்டத்தின் பெயரை வைப்பது வழக்கம். வர இருக்கும் புதிய சிஸ்டத்தின் பெயரை, சென்ற ஜுன் 30ல் கூகுள் அறிவித்தது. அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, இதன் பெயர் Android Nougat என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில், உணவிற்குப் பின் சுவைக்க எடுத்துக் கொள்ளப்படும் ஓர் இனிப்பாகும். இதனைச் சிலர் “நூகா” என்றும், சிலர் “நகட்” என்றும் ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இங்கு பெரும்பாலும் 'நகெட்' என்றே அழைக்கப்படுகிறது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல