வேர்ட் நமக்கு தரும் வசதிகளில், ஆட்டோ கரெக்ட் எனப்படும், தாமாக எழுத்துப் பிழைகளைத் திருத்தும் வசதி மிகவும் பயன் தரும் ஓர் அம்சமாகும். இதனால், தட்டச்சு செய்வதில் நம்மால் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன. எனவே, புதிய பிழைதிருத்தங்கள் செய்வது, நாம் அடிக்கடி பயன்படுத்தும், சில தனிப்பட்ட சொற்களை இதில் அமைப்பது, மொத்த சொற்களையும் பேக் அப் செய்து வைப்பது போன்ற பணிகளை நாம் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.
நாம் அனைவருமே, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிரிவில் அடிக்கடி டாகுமெண்ட்களைக் கையாள்பவர்களாக இருப்போம். கம்ப்யூட்டர் அறிவியல், மருத்துவம், சோதிடம், விளையாட்டு எனப் பல துறைகளில் ஏதேனும் ஒன்று குறித்து நாம் எழுதி வருவோம்.
இந்த துறைகளில் உள்ள சில சிறப்பு சொற்கள், நிச்சயமாய் பொதுவான ஆட்டோ கரெக்ட் பட்டியலில் இருக்காது. இவற்றில் பிழைகளைத் தவிர்க்க, அந்த சொற்களை இந்த பட்டியலில் நாமாக இணைக்கலாம்.
எப்படி பிழைகள் நேரிடும் என்பது, இந்த துறை சார்ந்த டாகுமெண்ட்களை உருவாக்குகையில் நாம் அறிந்தி ருப்போம். எனவே அவற்றைப் பட்டியலிட்டு, அவற்றிற்கான சரியான எழுத்துப் பிழை இல்லாத சொல் என்ன என்பதனை இந்த பட்டியலில் போட்டு வைக்க வேண்டும்.
இவ்வாறு போட்டு வைத்த சொற்களையும் சேர்த்து, மொத்த ஆட்டோ கரெக்ட் பட்டியலையும், இதனை அப்டேட் செய்திடுகையில் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வதும் நல்லது. ஏனென்றால், நாம் போட்டு வைத்த சொற்கள் மற்ற கம்ப்யூட்டர்களில் உள்ள வேர்ட் புரோகிராமில் கிடைக்காதே.
மேலும் இது போல பேக் அப் எடுத்து வைப்பது, வேறு வகையிலும் நமக்குப் பலனளிக்கும். ஹார்ட் டிஸ்க்கினை நாம் பார்மட் செய்தாலோ, அல்லது வேறு ஒரு கம்ப்யூட்டருக்கு நம் செயல்பாட்டினை மாற்றிக் கொண்டாலோ, இந்த பேக் அப் ஆட்டோ கரெக்ட் பைல் நமக்கு உதவும்.
இங்கு எப்படி இதனை பேக் அப் செய்திடலாம் என்று பார்ப்போம்.
ஆட்டோ கரெக்ட் பிரிவில் உள்ள தகவல்களை வேர்ட் தொகுப்பு மட்டும் பயன்படுத்துவதில்லை. எம்.எஸ். ஆபீஸில் உள்ள எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் போன்ற மற்ற அப்ளிகேஷன்களும் பயன்படுத்துகின்றன என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இதனால், அந்த தொகுப்புகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய சொற்களையும், ஆட்டோ கரெக்ட் பிரிவினை அப்டேட் செய்திடும்போது நினைவில் கொள்ள வேண்டும்.
அவற்றையும் சேர்த்தே பேக் அப் எடுக்க வேண்டும். ஆபீஸ் தொகுப்புகள் அனைத்தும் பயன்படுத்தும் இந்த AutoCorrect தகவல்கள் ACL என்ற எக்ஸ்டன்ஷன் பெயர் கொண்ட பைல் ஒன்றில் இடம் பெறுகின்றன.
எனவே, பேக் அப் எடுக்க, காப்பி எடுக்க விரும்பினால், விண்டோஸ் சர்ச் டூல் மூலம், இந்த பைல் இருக்கும் டைரக்டரி மற்றும் போல்டரைக் கண்டறிந்து, இந்த பைலின் காப்பி ஒன்றை தனியே வேறு ஒரு டைரக்டரியில் வைக்கவும். அல்லது ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றில் பதிந்து வைக்கவும்.
அனைத்தும் பகிர்ந்து கொள்ளும் ஆட்டோ கரெக்ட் தகவல்கள் தவிர, வேர்ட் புரோகிராம் மட்டும் பயன்படுத்தும் ஆட்டோ கரெக்ட் தகவல்கள் அடங்கிய பைல் ஒன்றும் இருக்கும்.
இந்த தகவல்கள் அனைத்தும் டெம்ப்ளேட்டில் பதியப்பட்டிருக்கும். பொதுவாக, இவை நார்மல் டெம்ப்ளேட்டில் (Normal template) இடம் பெறும்.
இவற்றை மற்ற டெம்ப்ளேட்டுகளிலும் பதிக்கலாம்.
இந்த ஆட்டோ கரெக்ட் தகவல்களை காப்பி எடுக்க வேண்டும் எனில், DOTX அல்லது DOTM எக்ஸ்டன்ஷன்கள் கொண்ட பைல்களைக் காப்பி எடுத்து வைக்கவும்.
சில ஆட்டோ கரெக்ட் செட்டிங்ஸ் இயக்கம் அல்லது இயக்கமின்மை (on/off) என்ற முறையில் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக, வேர்ட் வார நாட்களைக் குறிக்கும் சொற்களின் முதல் எழுத்தினைப் பெரிய எழுத்தாக அமைப்பதற்கான எண்ட்ரி விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் பதியப்பட்டிருக்கும். இவற்றைக் காப்பி எடுக்க வேண்டும் என்றால், ரெஜிஸ்ட்ரியில் அந்த பகுதியை மட்டுமாவது காப்பி எடுத்து வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக