ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

ஹமாஸ் அமைப்பின் கடந்த காலமும் எதிர்காலமும்


அரபு நாட்­டினர் எவ­ரையும் உறுப்­பி­ன­ராகக் கொள்­ளாத "பலஸ்­தீ­னத்­திற்­கான சிறப்பு ஆணைக்­கு­ழுவின்" (UNSCOP) பரிந்­து­ரையின் படி ஐ.நா. தீர்­மானம் 181 நிறை­வேற்­றப்­பட்­டது. இத்­தீர்­மா­னத்தின் மூலம் பலஸ்­தீனம் இரு நாடு­க­ளாகப் பிரிப்­ப­தாக முடிவு செய்­யப்­பட்­டது. அதன்­படி யூதர்கள் இஸ்­ரேலை தனி நாடாகப் பிர­க­டனப்படுத்­தினர். அப்­போது பலஸ்­தீ­னத்தின் 85 சத­வீத நிலம் அரபு பலஸ்­தீ­னி­யர்­க­ளி­டமும் 7 சத­வீத நிலம் யூதர்­க­ளி­டமும் இருந்­தது.



அப்­போது சியோ­னி­ச­வா­திகள் யூதர்­க­ளுக்­கென ஒரு சிறு நிலப்­ப­ரப்பில் ஓர் அரசு உரு­வானால் தம்மால் முழுப் பலஸ்­தீ­னத்­தையும் ஆள முடியும் என உறு­தி­யாக நம்­பினர். தீர்­மானம் 181ஐ அரபு நாடுகள் கடு­மை­யாக எதிர்த்­தன. தமது எதிர்ப்பைப் பொருட்­ப­டுத்­தாமல் இஸ்ரேல் என்னும் நாடு ஒருதலைப்­பட்­ச­மாக யூதர்­களால் பிர­க­டனப் படுத்­தப்­பட்­டது என்­றனர் அரபு மக்கள்.

இஸ்­ரே­லி­யர்­களை அவர்­களின் இன அடை­யா­ளத்தை வைத்து 'யூதர்கள்' என்றும் மொழியை வைத்து "ஹீப்­ருக்கள்" என்றும் அழைப்பர். இஸ்­ரே­லி­யர்கள் தாம் உரோ­மர்­க­ளிடம் இழந்த அரசை மீள அமைக்க வேண்டும் என்ற நீண்­ட­க­னவை உண்­மை­யாக்கும் யூததேசி­ய­வா­தத்தை "சியோ­னிசம்" என்பர். சியோ­னி­ச­வா­திகள் ஐ.நாவின் தீர்­மா­னத்தை ஒட்டி தமக்­கென ஒரு நாட்டை பலஸ்­தீ­னத்தில் உரு­வாக்­கி­னார்கள். இதை அர­புக்கள் ஏற்­க­வில்லை. சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்தான் ஆகிய நாடு­களும் பலஸ்­தீன தேசி­ய­வாத அமைப்­புக்­க­ளான புனிதப் போர்ப்­ப­டையும் அரபு விடு­தலைப் படையும் இணைந்து பலஸ்­தீனப் பிர­தே­சத்தின் மீது படை எடுத்­தன. இதனால் பலஸ்­தீனப் பிர­தேசம் இஸ்ரேல், மேற்­குக்­கரை, காஸா என மூன்று பிரி­வு­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டன. பலஸ்­தீனத் தேசி­ய­வாதம் பின்னர் தீவி­ர­ம­டைந்­தது. 1964ஆம் ஆண்டு பலஸ்­தீ­னிய விடு­தலை இயக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

எல்லை இல்லா எல்லை தாண்­டுதல்

பலஸ்­தீ­னியத் தேசி­ய­வா­தி­க­ளுக்கு எதி­ராக இஸ்ரேல், தேசிய எல்­லை­களைத் தாண்டி பல தாக்­கு­தல்­களை தொடர்ச்­சி­யாக செய்து வரு­கின்­றது. முத­லா­வது எல்லை தாண்­டிய தாக்­குதல் பலஸ்­தீ­னிய விடு­தலை இயக்­கத்­திற்கு எதி­ராக ஜோர்­தானில் 1968ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்­டது. 1978, 1982, 1992, 1993, 2006 ஆகிய ஆண்­டு­களில் இஸ்­ரே­லியப் படைகள் எல்லை தாண்டி லெப­னா­னிற்குள் சென்று பலஸ்­தீன விடு­தலை இயக்கம், ஹிஸ்­புல்லா இயக்கம் ஆகி­ய­வற்­றிற்கு எதி­ராகத் தாக்­குதல் மேற்­கொண்­டது. அது மட்­டு­மல்ல ஈரான், எகிப்து, சிரியா ஆகிய நாடுகள் யூரே­னியப் பதப்­ப­டுத்தல் செய்ய ஆரம்­பிக்கும் போதெல்லாம் இஸ்­ரே­லிய விமா­னங்கள் எல்லை தாண்டிச் சென்று தாக்­குதல் நடத்­தின. சிரிய உள் நாட்டுப் போர் 2011ஆம் ஆண்டு ஆரம்­பித்த பின்னர் இரு தட­வை­க­ளுக்கு மேல் இஸ்­ரே­லிய விமா­னங்கள் சிரி­யா­விற்குள் அத்து மீறிப் புகுந்து ஹிஸ்­புல்லா அமைப்­பினர் லெப­னா­னிற்குள் படைக்­க­லன்­களை எடுத்துச் செல்­வதைத் தடுத்­தனர்.

கார்ட்டூம் தீர்­மா­னமும் காம்­டேவிட் ஒப்­பந்த துரோ­கமும்.

இஸ்­ரே­லுடன் 1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரில் பலத்த தோல்­வியை அரபு நாடுகள் சந்­தித்­தன. 1967 ஆகஸ்ட் மாத இறு­தியில் சூடா­னியத் தலை­நகர் கார்ட்­டூமில் கூடிய அரபு லீக் நாடுகள் செப்ெ­டம்பர் முதலாம் திகதி ஒரு தீர்­மா­னத்தை நிறை­வேற்­றின. அதில் மூன்று "இல்லை"கள் இருந்­தன. 1. இஸ்­ரே­லுடன் சமா­தானம் இல்லை. 2. இஸ்­ரேலை அங்­கீ­க­ரிப்­ப­தில்லை. 3. இஸ்­ரே­லுடன் பேச்சு வார்த்தை இல்லை. ஆனால் எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத் இந்தத் தீர்­மா­னத்தை மீறி 1979ஆம் ஆண்டு அமெ­ரிக்க அனு­ச­ர­ணை­யுடன் அமெ­ரிக்க நகர் காம்ப் டேவிட்டில் இஸ்­ரே­லுடன் ஒரு உடன்­ப­டிக்­கையைச் செய்து கொண்டார். இதற்­கான கையூட்­டாக அவ­ருக்கு நோபல் பரிசு வழங்­கப்­பட்­டது என்ற குற்றச் சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. இது அவர் பலஸ்­தீ­னிய மக்­க­ளுக்குச் செய்த பெரும் துரோ­க­மாகும். இந்த உடன்­ப­டிக்­கையின் பின்னர் எகிப்­திய படைத்­து­றைக்கு அமெ­ரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பெறு­ம­தி­யான உத­வி­களை வழங்கி வரு­கின்­றது. இந்த உடன்­ப­டிக்­கையின் பின்னர் எகிப்து, அரபு - – இஸ்­ரே­லிய மோதல், பலஸ்­தீ­னிய – இஸ்ரேல் மோத­லாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. எகிப்து இந்த மோதலில் ஒரு நடு நிலை நாடா­கி­யது.

ஹமாஸின் தோற்றம்

பலஸ்­தீ­னிய விடு­தலை இயக்­கத்தின் தீவிரத் தன்மை குறையத் தொடங்­கிய சூழ்­நி­லையில், இஸ்ரேல் மேற்குக் கரையில் தொடர்ச்­சி­யாக நில அப­க­ரிப்பும் யூதக் குடி­யேற்­றமும் செய்து கொண்­டி­ருக்கும் சூழலில், இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­பிற்கு எதி ­ராக பலஸ்­தீ­னியர் இண்­டிஃ­பாடா என்னும் மக்கள் பேரெ­ழுச்­சியை நடத்தத் தொடங்­கிய வேளையில் ஹமாஸ் அமைப்பு 1987ஆம் ஆண்டு உரு­வா­னது. வன்­முறை கூடாது படைக்­கலன் ஏந்தக் கூடாது என்ற கொள்­கை­க­ளை­யு­டை­யது இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அமைப்பு. அதன் அர­சியல் பிரிவு இஸ்­லா­மிய நிலையம் என்னும் பெயரில் இருந்து காஸா­விலும் மேற்குக் கரை­யிலும் 1973ஆம் ஆண்­டி­லி­ருந்து சமூக நலப்­பணி செய்து கொண்­டி­ருந்­தது. பலஸ்­தீன விடு­தலை இயக்­க­த்தை வலு­வி­ழக்கச் செய்ய சகோ­த­ரத்­துவ அமைப்பின் இஸ்­லா­மிய நிலை­யத்­திற்கு இஸ்ரேல் சாத­க­மாக நடந்து கொண்­டது. இதில் முக்­கிய மாகச் செயற்­பட்­டவர் ஷேக் அஹ்மட் யாஸீன். அவரே 1987இல் ஹமாஸ் என்னும் தீவி­ர­வாத அமைப்பை ஆரம்­பித்தார். பலஸ்­தீன தேசி­ய­வாதம், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம், தீவி­ர­வாதம் ஆகி­யவை ஹமாஸ் அமைப்பின் கொள்­கை­க­ளா­கின. ஒரு புறம் இஸ்­ரே­லியப் படை­யி­ன­ருக்கும் பலஸ்­தீ­னி­யர்­களின் நிலங்­களை அப­க­ரித்துக் குடி­யே­றிய யூதர்­க­ளுக்கு எதி­ரான தீவி­ர­வாதத் தாக்­கு­தலும் மறு­புறம் சமூக நலப்­ப­ணிகள் பல­வற்றைச் சிறப்­பாகச் செய்­வதும் ஹமாஸ் அமைப்பின் தலை­யாய பணி­க­ளாக இன்­று­வரை இருக்­கின்­றன. ஹமாஸ் ஒரு ஸுன்னி முஸ்லிம் அமைப்பு எனப்­ப­டு­கின்­றது. 1983ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்­பினர் தமது முத­லா­வது தற்­கொலைத் தாக்­கு­தலை மேற்­கொண்­டனர்.

ஹமாஸின் தலைமை

ஹமாஸ் அமைப்­பிற்கு ஒரு தலைவர் இல்லை எனச் சொல்­லப்­ப­டு­கின்­றது. அது ஷூரா சபை என்னும் கூட்டுத் தலை­மையால் இயக்­கப்­ப­டு­கின்­றது. 2004ஆம் ஆண்­டி­லி­ருந்து ஹமாஸில் முன்­னணித் தலை­வ­ராக இருப்­பவர் கட்டார் நாட்டில் இருந்து செயற்­படும் கலீட் மேஷால் என்­ப­வ­ராகும். ஹமாஸின் படைத் துறைக்குப் பொறுப்­பாக அஹமட் ஜபாரி இருக்­கின்றார். ஹமாஸ் காஸா நிலப்­ப­ரப்பில் நடத்தும் அரசின் தலைமை அமைச்­ச­ராக இஸ்­மயில் ஹனியா செயற்­ப­டு­கின்றார்.

ஹமாஸின் படை­வ­லுவும் பொரு­ளா­தா­ரமும்

ஹமாஸ் அமைப்­பி­ன­ரிடம் குறு­கிய மற்றும் நீண்ட தூரம் பாயக் கூடிய எறி­க­ணைகள் பல இருக்­கின்­றன. ஈரா­னிடம் இருந்து ஹமாஸ் அமைப்­பினர் இந்த எறி­க­ணை­களைப் பெற்­றனர். அத்­துடன் காஸா நிலப்­ப­ரப்பில் நிலத்தின் கீழ் மிக நீண்ட சுரங்கப் பாதை வலைப்­பின்­னல்கள் இருக்­கின்­றன. இதனால் அவர்கள் தமது படைக்­க­லன்­க­ளையும் வியா­பாரப் பொருட்­க­ளையும் பாது­காப்­பாக நகர்த்தக் கூடிய நிலையில் இருக்­கின்­றனர். இந்தச் சுரங்கப் பாதை இருக்கும் வரை ஹமாஸ் பல­மாக இருக்கும். இதனால் இஸ்­ரே­லியர் இச் சுரங்கப் பாதைகள் தமக்கு ஆபத்து விளை­விக்கக் கூடி­யவை என நினைக்­கின்­றனர். இவற்றை அழிக்கும் நோக்­குடன் இஸ்­ரே­லியப் படை­யினர் டாங்­கி­க­ளு­டனும் புல்­டோ­சர்­க­ளு­டனும் பார ஊர்­தி­க­ளு­டனும் காஸா நிலப்­ப­ரப்­பினுள் தரை நகர்வை தற்­போது மேற் கொள்­கின்­றனர். நிலக் கீழ் சுரங்கப் பாதை­யூ­டாகக் கடத்தும் பெருட்கள் மூலம் ஹமாஸ் அமைப்­பினர் ஆண்டு ஒன்­றிற்கு 750 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வரு­மா­ன­மாகப் பெறு­கின்­றனர். 2005ஆம் ஆண்டு பலஸ்­தீன அதி­கார சபைக்­கான தேர்­தலில் வென்­றதன் மூலம் அந்த சபைக்­கான நிதியும் ஹமாஸின் கைக்கு வந்­தது. ஆனால் ஐக்­கிய அமெ­ரிக்கா. ஐரோப்­பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவிகள் ஹமாஸின் கைகளுக்குப் போவதில்லை. பல வெளிநாடுகளில் வாழும் பலஸ் தீனியர்கள், அரபு நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் ஹமாஸிற்கு நிதியுதவி செய்கின்றனர். ஈரானிய அரசும் ஹமாஸிற்கு பெரும் நிதி உதவி செய்து வந்தது. 2011ஆம் ஆண்டு உருவான சிரிய உள்நாட்டுப் போரில் ஹமாஸ் ஸுன்னி முஸ்லிம் கிளர்ச்சிக்காரர்களுக்கும், ஈரான் ஷியா முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்ட படியால் ஈரான் ஹமாஸிற்கான தனது நிதியுதவியை நிறுத்திக் கொண்டது. ஹமாஸ் அமைப்பு அது உருவான நாளில் இருந்து 400 இஸ்ரேலியர்களையும் 25 அமெரிக்கர்களையும் கொன்றுள்ளது. இது வரை இஸ்ரேல் மீது 8,000 எறி கணைகளை வீசியுள்ளது.

வேல் தர்மா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல