வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ஆபீஸ் 2007

ஆபீஸ் 2007 தொகுப்பின் பார்மட்களை 2003 பார்மட்டுக்கு, அது வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் என எதுவாக இருந்தாலும், ஆன்லைனிலேயே மாற்றங்களை மேற்கொள்ள உதவும் ஒரு சிறந்த தளம் www.zamzar.com. இதில் பைலை அப்லோட் செய்வது மிக எளிதாகவும், வேகமாகவும் நடைபெறுகிறது.

அன் இன்ஸ்டால்

சில புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்கையில், டி.எல்.எல். பைல் எனச் சிலவற்றைக் காட்டி, இதனை நீக்கவா? வேறு சில புரோகிராம்கள் இதனைப் பயன்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. இதனை நீக்கலாமா? எப்படி நீக்கப்படும் புரோகிராம்களுக்கு மட்டுமே இவை சார்ந்தவை என்று அறிவது?

டிஜிட்டல் கேமரா

டிஜிட்டல் கேமராவிலிருந்து படங்களை கம்ப்யூட்டரில், போல்டர் ஒன்றுக்கு மாற்றி, பின்னர் அவற்றை சிடி ஒன்றில் எழுதிய பின்னர் போல்டரில் உள்ள படங்களை அழித்த பின்னர் போல்டரை அழிக்க முயற்சிக்கையில், போல்டரில் பைல்கள் உள்ளது எனவும், போல்டரை நீக்க முடியாது எனவும் செய்தி கிடைக்கிறது. உண்மையில் போல்டரில் எந்த போட்டோ பைலும் இல்லை. கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து அழிக்க முயற்சித்தாலும் அழிய மறுக்கிறது. அதன் காரணம் என்ன?

பைல்களின் வகைகள்

.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! தெரிந்து கொள்ளுங்கள்!

1. உங்கள் வங்கிக் கணக்கினைச் சரி செய்கிறோம். உங்கள் அக்கவுண்ட் எண் என்ன? இன்டர்நெட் பேங்கிங் யூசர் நேம் என்ன? இவற்றைச் சோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு இந்த லிங்க்கில் கிளிக் செய்து கொள்ளுங்கள் என்று ஐ.சி.ஐ.சி.ஐ./ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளிடமிருந்து வருவது போல் இமெயில் வந்தால், உடனே அழித்து விடுங்கள். குப்பைத் தொட்டியிலும் வைக்காதீர்கள். ஏனென்றால், பெரிய வங்கிகள் இது போல் மெயில்களை அனுப்புவதில்லை. அவற்றின் பெயரில் மெயில் அனுப்பி, லிங்க் கொடுத்துப் பின், நாம் கிளிக் செய்கையில் ஏதேனும் ஒரு வைரஸ் புரோகிராமினை இறக்கும் நாசகாரர்களின் முயற்சி இது. எனவே அவசரப்பட்டு இந்த மெயில்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள்.

விண்டோஸ் 7 தொடக்க ஒலியை நிறுத்த

விண்டோஸ் எக்ஸ்பிக்குப் பின்னர் மக்கள் பரவலாக ஏற்றுக் கொண்டு பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 7 மாறி வருகிறது. இருப்பினும் சில விஷயங்கள் பல பயனாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அதில் ஒன்று இதன் தொடக்கத்தில் ஒலிக்கும் ட்யூனாகும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தொடங்குகையில், ஒரு வித சிக்னேச்சர் ட்யூன் என்று சொல்லப்படும் தொடக்க ஒலியைக் கொண்டிருப்பது வழக்கமாகும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு, விஸ்டாவின் தொடக்க ஒலியே தரப் பட்டுள்ளது. முதலில் இதனை மக்கள் விரும்பினாலும், பின்னர் இந்த ஒலியானது அவ்வளவாக வரவேற்கப்படவில்லை. எனவே இதனை நிறுத்த முடியுமா எனப் பலரும் அதற்கான வழியைத் தேடி வருகின்றனர். அவர்களுக்காக கீழே வழி தரப்பட்டுள்ளது.

ட்ரைவர் புரோகிராம் பேக் அப்

சில வேளைகளில் உங்கள் பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அப்போது விண்டோஸ் சிஸ்டத்தில் மாறா நிலையில் (by default) இல்லாத சில ட்ரைவர் புரோகிராம்களும் தேவையாயிருக்கும். நம்மிடம் ஒரு காலத்தில் தரப்பட்ட ட்ரைவர் சிடிக்கள் காணாமல் போயிருக்கும். அல்லது இடம் மாறி, தேடினாலும் கிடைக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்திலிருந்து தான் அவற்றை டவுண்லோட் செய்து, பயன்படுத்த வேண்டும். அவற்றில் சில நமக்குப் பயன்படுத்தும் நிலையில் கிடைக்காது. சில இயங்காது. இந்தச் சூழ்நிலை நம்மில் பலருக்குப் பல வேளைகளில் ஏற்பட்டிருக்கும்.

விண்டோஸ் 7 ட்யூனிங்

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைக்கும் சில ட்ரிக்ஸ்களை அறியாமல் இருப்பீர்கள். தெரிந்தாலும் அவற்றை எப்படி இயக்குவது எனத் தெரியாமல் இருப்பீர்கள். இங்கு சிலவற்றைப் பார்க்கலாம்.

வேர்ட் பார்மட்டிங் மாற்ற

வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக, அடிக்கோடு, சாய்வு மற்றும் வேறு சில பார்மட்களில் அவற்றை அமைத்திருப்போம். அமைத்த பின்னர், இந்த பார்மட்டிங் தேவை இல்லை என எண்ணினால், இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல