ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

பூப்புனித நீராட்டு விழா

பெண்ணை அடிமைப்படுத்தும் சடங்குகள் தேவைதானா?

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து பெண்ணானால் அதனைக் கருவிலேயே அழிக்கும் முயற்சிகள் இலங்கையில் இல்லை. ஆனால் கருவிலேயே பெண் குழந்தையை அழிப்பது மீறிப் பிறந்துவிடும் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்வது எல்லாம் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இன்றும் பரவலாக வழக்கில் உள்ள நடைமுறைகள்.

கரடியனாறு அனர்த்தம்

போர் முடிவடைந்து ஒன்றரை வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்த நிலையில் மீண்டுமொரு போர்க்காலக் கொடூர நிகழ்வுகளையொத்த சம்பவத்தைக் கிழக்கு மாகாண மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்கொண்டனர். கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தும் பேரழிவுகளும் அந்த மக்களுக்குப் போரின் அழிவுகளை மீண்டுமொரு தடவை நினைவூட்டியதாக இருந்தது. போர்க் காலங்களில் நடந்துகொண்டது போலவே தற்போதும் மக்கள் பாதுகாப்பில் எவ்வித அக்கறையும் காட்டாததன் விளைவே இந்த கரடியனாறு பொலிஸ் நிலைய டைனமைற் வெடிவிபத்தும் அதனால் ஏற்பட்ட பேரழிவுகளும் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் குற்றச்சாட்டுகள் வெளிக்கிளம்பியுள்ளன. சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கவனக் குறைவாக எடுத்துச் செல்லப்பட்டமையே இந்த வெடிவிபத்துக்குக் காரணமென கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலகவும் தெரிவித்துள்ளார்.

“நான் தங்கதுரையின் மகன்!” கரிகாலன்

தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்… ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் இந்த மூன்று பெயர்களையும் யாரால் மறக்க முடியும்? சிங்கள இனவெறியின் கோர அடையாளங்களாக மூன்று உயிர்களும் வரலாற்றில் பதிந்துவிட்டன. மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட, தங்க துரையின் குடும்பம் தமிழ்நாட்டில் வசித்தது. அந்த தங்கதுரையின் மகன் கரிகாலனுக்குக் கடந்த வாரம் சென்னையில் திருமணம்!

நெடுஞ்சாலையில் தவழ்ந்த குழந்தை (வீடியோ இணைப்பு)

துருக்கியில் உள்ள அன்டால்யா (Antalya) நகரில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரம் ஒரு பெண் தனது ஒரு வயது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு பிச்சை எடுக்க சென்று விட்டாள்.

பொதுமக்கள் முன்னிலையில் மோதிக்கொண்ட எம்பிக்கள் (படங்கள் இணைப்பு)

தாய்லாந்தில் இரண்டு எம்பிக்கள் பொது மக்கள் முன்னிலையில் மோதிக்கொண்டு பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல