புதன், 27 அக்டோபர், 2010

மன்னர் மரணம்

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ராஸ் அல் காய்மா என்ற நாட்டின் மன்னர் ஷேக் சகர் பின் முகமது அலி காசிமி நேற்று காலமானார். அவருக்கு வயது 92. உலகிலேயே மிகவும் அதிக வயது மன்னராக அவர் கருதப்பட்டு வந்தார். 1948-ம் ஆண்டு, தன் மாமனாரை கவிழ்த்து விட்டு பதவிக்கு வந்த அவர், கடந்த 62 ஆண்டுகளாக மன்னர் பதவியில் இருந்துள்ளார்.

அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால், சில மாதங்களாக, மன்னரின் பொறுப்புகளை அவருடைய மகனான பட்டத்து இளவரசர் கவனித்து வந்தார்.

சதாமின் கூட்டாளியை தூக்கில் போட வத்திக்கான் எதிர்ப்பு

ஈராக்கில் சதாம் ஹூசெயின் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த தாரிக் அஸிஸ், பதவியிலிருந்தபோது சியா பிரிவினரை கொன்று குவித்ததற்காக, அவருக்கு ஈராக் நீதிமன்றம் நேற்று முன்தினம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பிற்கு, வத்திக்கான் பாப்பரசரின் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இரகசியமாக கர்ப்பம் தரித்து பெற்ற குழந்தைகளை கொன்று பிரத்தியேக அறையில் மறைத்து வைத்த பெண்

திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்பு மூலம் இரகசியமாக கருத்தரித்து பிரசவித்த குழந்தைகளைக் கொன்று, அவற்றின் சடலங்களை தனது பிரத்தியேக அறையிலுள்ள குளிர்சாதனப் பெட்டியிலும் கொங்கிரீட் தளத்தின் கீழும் மறைத்து வைத்த பெண்ணொருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை அமெரிக்க பென்சில்வேனிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இத்தாலிய நகரில் குட்டைப் பாவாடை அணிவதற்கு தடை விதிக்க திட்டம்

இத்தாலிய கடற்கரைப் பிராந்திய நகரொன்று கட்டைப் பாவாடை அணிவதற்கு தடை விதிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
பொது இடத்தில் பண்பாட்டு நியமத்தராதரங்களைப் பேணும் முகமாகவே கஸ்டெல் லாமரே டி ஸ்ரபியா என்ற மேற்படி நகரின் மேயர் லுயிலி பொப்பியோ இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

இருளில் நிர்வாணக் கோலத்தில் வந்த கணவனை பிசாசு என நினைத்து அலறிய மனைவி

நபரொருவரை தவறுதலாக பிசாசு எனக் கருதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மூன்றாம் மாடியிலிருந்து குதித்த சம்பவம் பிரான்ஸின் லா வியர்யர் நகரில் இடம் பெற்றுள்ளது.

102 சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர்

பிரித்தானியாவின் மிகவும் மோசமான பாலியல் குற்றவாளியாக கருதப்படும் வாடகைக் கார் சாரதியான ஜோன் வொர்போய்ஸ் என்ற நபர், 102 பெண்களை பாலியல் வல்லுறவுக் குட்படுத்தியுள்ளமை பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மன்னிப்புக்காக மன்றாடும் ஒரு ஜீவன்

அப்பாவியான எனது மகள் அனுபவித்த கொடுமைகள் போதும் மனிதாபிமானத்தின் பேரால் பொது மன்னிப்பு வழங்குங்கள்

எனது மகள் அப்பாவி. குடும்பத்தின் பொருளாதாரக் கஷ்டம் காரணமாகவே அவளை சவூதிக்கு அனுப்பவேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டது. பச்சிளம் குழந்தையொன்றின் உயிரைப் பறிக்குமளவுக்கு அவள் இரக்கமில்லாதவளில்லை என்று சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இல ங்கை யுவதியான ரிஸானா நபீக்கின் தாயாரான செய்யது அபூபக்கர் ரஸீனா தெரிவித்தார். முஸ்லிம் நாடென்ற நம்பிக்கையில்தான் ரிஸானாவை சவூதிக்கு அனுப்பிவைத்தோம். இன்று வரை ஐந்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் படாதபாடுபட்டு விட்டாள். அவள் அனுபவித்த கொடுமைகள் போதும்; மேலும் தண்டனை வழங்காமல் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் எனது பிள்ளைக்கு மறுவாழ்வளிக்குமாறு அனைத்து தரப்பினடம் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரிஷானாவுக்கு மறுஜென்மம் கிடைக்க பிரார்த்திப்போம்

ரியாத்தில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய ரிஷானா பீக்குக்கு மரணதண்டனை, ரியாத் உயர் நீதிமன்றத்தில் உறுதி சய்யப்பட்டுள்ளமை இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பச்சிளம் குழந்தை ஒன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரிஷானா நபீக் மீது தவாமி மேல் நீதி மன்றம் 2007 ஆம் ஆண்டு மரண தண்டனையை வழங்கியிருந்தது.இதனை ரியாத் உயர் நீதிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்துள்ளது.

தலை துண்டிக்கப்படப்போகும் தமிழ்ப்பெண்ணை காப்பாற்ற அனைவரும் உதவுங்கள்

ரிஷானா மீது கருணை காட்டுமாறு சவூதி மன்னருக்கு கருணை மனு அனுப்பும்படி ஆசிய மனித உரிமைக்குழு அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ள இலங்கை பணிப்பெண் ரிஷானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸிஸ் அல் சவுட்டுக்கும், சவூதி அரேபியா உள்துறை அமைச்சருக்கும் கடிதமூலமோ அல்லது தொலைநகல் மூலமோ உங்களின் கருணை மனுவை அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல