சனி, 18 மார்ச், 2017

இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்து உள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன் மாரடைப்பால் மரணம்

உலக நாயகன் கமல் ஹாஸனின் இரண்டாவது சகோதரர் சந்திர ஹாஸன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

3 மணி நேரமாக காருக்குள் உயிரோடு எரிந்து கருகிய அஸ்வின், இலங்கை மனைவி நிவேதா.. அதிர்ச்சித் தகவல்கள்!

கார் ரேஸில் சர்வதேச சாம்பியன் பட்டம், தேசிய அளவில் பட்டம் வென்ற வீரர் அஸ்வின் சுந்தர் தனது மனைவியுடன் விபத்தில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், இன்று நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல