வியாழன், 28 அக்டோபர், 2010

பெனாசீர்பூட்டோவை தலிபான்களே கொலை செய்தனர்: புலனாய்வுக் குழு

நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். அதே ஆண்டு டிசம்பர் 27ம் திகதி அவர் ராவல்பிண்டி நகரில் திறந்தவேனில் நின்றபடி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவரை ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அதைத் தொடர்ந்து மனித வெடிகுண்டு தாக்குதலும் நடந்தது. இதில் பெனாசீர் பலியானார். மேலும் 24 பேரும் உயிரிழந்தனர்.

ஈரானிடம் பணமூட்டை வாங்கினேன் ஆப்கான் அதிபர் ஒப்புதல்

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் அல் கர்சாய், அமெரிக்காவிடம் நட்பு கொண்டவர். ஆனால், அவர் அமெரிக்காவின் எதிரியான ஈரானியிடம் தனது உதவியாளர் உமர் தவுத்சை மூலம் பை நிறைய பணம் வாங்கியதாக தகவல் வெளியானது. இதுபற்றி பேட்டி அளித்த ஹமீத் அல் கர்சாய், பணம் வாங்கியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார்.

அமைச்சர் டக்ளஸ் குறித்து நவம்பர் 2ல் தீர்ப்பு

அமை‌ச்ச‌ர் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா தொடர்பான வழ‌க்‌கி‌ன் தீர்ப்பு எதிர்வரும் நவ‌ம்ப‌ர் மாதம் 2ஆ‌ம் திகதி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ில் வழ‌ங்ககப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. செ‌ன்னை‌யி‌ல் 24 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு நட‌ந்த கொலை வழ‌க்‌கி‌‌ல் அமைச்சர் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா ‌‌மீது கு‌ற்ற‌ச்சா‌ட்டு ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த வழ‌க்கு செ‌ன்னை ‌எழு‌ம்பூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

காருக்குள் குழந்தையை தவிக்கவிட்ட தந்தை

அமெரிக்காவில் குடி போதையில் 3 வயது குழந்தையை 25 மணி நேரம் காருக்குள் தவிக்கவிட்டு சென்ற தந்தை கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் அடித்ததால் 10 மாணவிகள் மயக்கம்

கம்போடியா நாட்டின் புனோவ் நகரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் ஆண்டு தொடக்க விழாவுக்கான ஒத்திகை நடைபெற்றது. அப்போது, அடுத்தடுத்து 10 மாணவிகள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அவர்கள் அனைவருமே 14 முதல் 18 வயது வரையிலான மாணவிகள் ஆவார்கள். இதையடுத்து, 10 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது ....

வீடுகளில் உள்ள மற்றும் அலுவலகங்களில் உள்ள கணினிகளை இயக்கும் இன்றியமையாத இயக்கு தளங்களில் ஒன்று. இதன் பெயரின் பின்னே ஒட்டியுள்ள XP எனும் ஆங்கில எழுத்துக்களானது பட்டறிவு என்னும் பொருள் படும் Experience என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். விண்டோஸ் எக்ஸ்பியானது விண்டோஸ் 2000 உடன் விண்டோஸ் மில்லேனியம் பதிப்பின் வசதிகளும் ஒருங்கிணைத்து முதன் முதலாக வீட்டுப் பயன்பாடுக்கு என விண்டோஸ் எண்டி கருனியில் இருந்து உருவாக்கப்பட்ட இயக்குதளமாக உள்ளது.

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

மாரடைப்பு என்றால் என்ன?

அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா.

விநோத சவப்பெட்டிகள் (படங்கள் இணைப்பு)

ஆபிரிக்க நாடான கானாவிலுள்ள சவப்பெட்டிகள் செய்பவர்கள் பாதணிகள், கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல்வேறு வடிவங்களில் சவப் பெட்டிகளை உருவாக்கி சந்தைப்படுத்தியதன் மூலம் சர்வதேச பிரபலத்தை பெற்றுள்ளனர்.

கற்பழித்து கொலை செய்த பெண்ணை காட்டிற்குள் வீச கொண்டுசெல்லும் காட்சி

இந்தியா அஸாம் பகுதியில் இந்திய ராணுவத்தினர் சிலர் கூட்டாகச்சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டு அப்பெண்ணின் உடலை காட்டிற்குள் வீசுவதற்காக கொண்டு செல்லப்படும்போது எடுக்கப்பட்ட படம்தான் இது என்று சொல்லப்படுகிறது. இப்படத்தினை ஒரு இந்திய ராணுவ வீரர் வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளார். தனது மனட்சாட்சி தன்னை உறுத்திக் கொண்டிருந்த்மையால்தான் தான் இதனை வெளியிட நேர்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

3 வயது மகளை கத்தியால் குத்திக்கொன்று சடலத்தின் மீது அமிலத்தை ஊற்றியதாய்

தனது 3 வயது மகளை பல தடவைகள் கத்தியால் குத்தி அவளது உடலில் அமிலத்தை ஊற்றி பிரிந்தழிகைக்கு உட்படுத்திய தாயொருவர் தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை பிரித்தானிய பர்மிங்ஹம் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

திருமணக்கோலத்தில் போலி மணமகள் கைது

போலி திருமண வைபவத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் 21 வயது மணமகளை பொலிஸார் மணக்கோலத்தில் கைது செய்த சம்பவம் பிரித்தானியாவில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

3 வயது சிறுமி மீது தீராத காதல் கொண்டு திருமண நிச்சயதார்த்தம் செய்த 5 வயது சிறுவன்

3 வயது சிறுமியின் மீது காதல் கொண்ட 5 வயது சிறுவன் ஒருவன், பெரியவர்களின் சம்மதத்தை பெற்று திருமண நிச்சயதார்த்தம் கொண்ட விசித்திர சம்பவம் சிரியாவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் நேற்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளனர்!

யாழ் நகரப் பகுதிகளிலும் யாழ் மாவட்டப் பகுதிகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 20க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் நேற்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளனர்.

அழகான இலங்கை, குப்பை கூலங்களினால் அவலட்சணமாக காட்சியளிக்கிறது - ஜப்பானிய உல்லாச பயணி கருத்து

இலங்கை ஒரு அழகான நாடு. ஆனால் குப்பைக் கூளங்கள், அழகான நாட்டை அவலட்சணப்படுத்திக் கொண்டிருப்பதாக ஜப்பானிய நாட்டின் உல்லாசப் பயணிகளுள் ஒருவரான சசுக்கி மத்தசிங்வ கருத்துத் தெரிவித்தார்.

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 91 வது இடம்

ஊழல் குறைந்த நாடுகள் தொடர்பான புதிய பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஜேர்மனியின் பேர்லினைத் தளமாகக் கொண்ட ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு, ஊழல் தொடர்பான இவ்வருடத்திற்கான வருடாந்த அறிக்கையை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கையிலேயே இவர்களுக்கு 91 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

சந்திரிகா கொலை முயற்சி வழக்கில் பிரதான குற்றவாளிக்கு 30 வருட கடூழியச்சிறை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய சதிமுயற்சி செய்த குற்றச்சாட்டில் பிரதான குற்றவாளியாகக் காணப்பட்ட வவுனியா நாவல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் இலங்கேஸ்வரனுக்கு 30 வருட கடூழியச் சிறைத்தண்டனையை கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை வழங்கியுள்ளது.

அங்கோலா நாட்டவரின் அகண்ட வாய் (படங்கள், காணொளி இணைப்பு)

அங்கோலா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ டொமின்கோ ஜொஹாகுயிம் எனும் 20 வயது நபர் உலகின் மிக அகலமான வாயைக் கொண்டவராக கருதப்படுகின்றார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல