திங்கள், 10 டிசம்பர், 2012

மீண்டும் தலையெடுத்திருக்கும் பயங்கரவாத தடைச்சட்டமும் அதற்கு ஆதரவளித்த தமிழர்களும்!

போரில் இறந்து போன தங்கள் உறவுகளுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ததற்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவத்தினராலும் பொலிஸாரும் தாக்கப்பட்டது மட்டுமன்றி இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் உட்பட இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் இந்த வாரத்தில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் ஊர்வலம் நடத்துவதும் பொலிஸார் அவர்களை கைது செய்வதும் விசாரணை நடத்துவதும் நாம் கேள்விப்படுகின்ற விடயங்கள்தான்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மலாலாவை பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சந்தித்தார்

பாகிஸ்தான் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடிய மாணவி மலாலா தாலிபன்களால் சுடப்பட்டார். தலை மற்றும் முகத்தில் குண்டு பாய்ந்ததால் படுகாயமடைந்த 14 வயது மாணவியான மலாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

உயிரே உனது விலை என்ன?

அவுஸ்திரேலியாவில் நுரையீரல் புற்று நோய்க்கு மருந்து செய்ய 60000 டாலர் தேவை. ஒருவர் இந்த நாட்டு பிரசையாகவோ நிரந்தர வதிவிடம் பெற்றவராக இருந்தால் ஒரு சதம் செலவு செய்யாமல் அரசாங்கம் வைத்தியம் செய்யும்.இது உறவினர் ஒருவருக்கு ஏற்பட்டதால் அனுபவமாக பெற்ற உண்மை. மற்ற நோய்களோடு ஒப்பிடும்போது தொடர்ச்சியாக கீமோ திரப்பி வைத்தியம் செய்யவேண்டியதால் இதன் செலவு அதிகமாகிறது.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் உயிர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்கப்படவில்லை. இதுவே இந்த போராட்டத்தின் தோல்வியின் மூலவேர் என்ற எனது கருத்து.

பார்வையிழந்த இந்த பெண்ணுக்கு உதவி தேவை -உதவி செய்ய விரும்புவோர் உதவலாம்

காதலிக்க மறுத்த காரணத்தால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வை இழந்த பெண் எஞ்சினியர் மருத்துவ செலவுக்கு வழியின்றி தவிக்கிறார். அவருக்கு உதவி செய்து உயிரை காப்பாற்ற உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏமாற்று அழைப்பு: "செவிலி மரணம் எதிர்பாராத துயரம்"

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்மின் மனைவி கேத்தரின் தங்கியிருந்த மருத்துவமனைக்கு மஹாராணியும் இளவரசர் சார்ல்ஸும் பேசுவதுபோல நடித்து செய்யப்பட்டிருந்த தொலைபேசி அழைப்பின் ஒலிப்பதிவை ஒலிபரப்பிய வானொலி நிலையம், இந்த அழைப்புக்கு பதிலளித்த நர்ஸ் தனது உயிரை மாய்த்துக்கொள்வார் என்பது யாருமே எதிர்பார்க்க முடியாத ஒரு நிகழ்வு என்று கூறியுள்ளது.

சாவை நம்பினால் பகையை விடலாமே!


உலக அழிவு பற்றிய ஒரு செய்தி பரவி உலக நாடுகள் பல வற்றிலும் மக்கள் பதற்றத்துக்குள்ளாகியிருப்பது கொஞ்சம் புதுமையானதுதான். இம்மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (21.12.2012) அன்று உலகம் அழியப்போகிறது என்று மாயன் இன மக்களின் கலண்டரில் சொல்லப்பட்டிருப்பதைக் கணிசமான உலக மக்கள் நம்புவதே இந்தப் பீதிக்குக் காரணம். தென்அமெரிக்காவின் பெருமற்றும் பிரேசில் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் இந்த மாயன் இன மக்கள்.

சிறிலங்காவை அச்சுறுத்தும் மர்ம பொருள் என்ன?

அண்மைக்காலமாக சிறிலங்காவில் மர்மப் பொருளொன்று பெரும் பிரகாசத்துடன் தோன்றி அச்சுறுத்தி வருகிறது. குறித்த மர்ம பொருளை நாட்டின் பல பகுதிகளிலும் பார்வையிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாய்களுக்கு பல் துலக்கி ஹாங்காங்கில் உலக சாதனை

ஹாங்காங்கில் ஒரே நேரத்தில், 300 நாய்களுக்கு பல் துலக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.நாய்களின் காப்பகத்துக்கு நிதி திரட்டவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும், ஹாங்காங்கில் நேற்று, செல்ல பிராணிகளுக்கு பல்துலக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல