சனி, 22 ஜனவரி, 2011

சாலையில் சிதறிக்கிடந்த நாணயங்கள்

மலேசியாவில் நாணயங்களை தயாரிக்கும் இடத்தில் இருந்து நாணயங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கோலாலம்பூர் நகருக்கு சென்றது.

வழியில் 7 இடத்தில் லாரி கவிழ்ந்ததால், நாணயங்கள் சாலையில் சிதறி கிடந்தன. அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் இதைப்பார்த்து விட்டு நாணயங்களை ஆளாளுக்கு அள்ளிக்கொண்டு சென்றனர்.

விலைமகளுக்கு பிரதமர் கொடுத்த உறுதிமொழி

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு 74 வயது ஆகிறது. அவருக்கு வயது ஏறினாலும், அவர் ஆசைக்கு வயது ஆகவில்லை. அவர் இன்னும் இளைஞனைப்போல காதல் லீலைகள் செய்து வருகிறார். விலை மகளிரை அழைத்து விருந்து கொடுத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து வருகிறார்.

திடீரென ஏற்பட்ட பெரும்பள்ளம் காரணமாக வீட்டை காலி செய்த சீனர்

சீனாவை சேர்ந்தவர் ஜாங்க் பெங்க்ராங். 58 வயதான இவர் தன் குடும்பத்துடன் சிச்சுவான் மாநிலம் லெஷான் நகரில் வசித்து வந்தார். இரவு அவர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நள்ளிரவு 2 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டது. இதை தொடர்ந்து அவர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டுக்கு பின்னால் திடீர் என்று பெரும்பள்ளம் ஏற்பட்டு இருந்தது. தொடக்கத்தில் 10அடி அகலம் தான் இருந்தது. 24 மணிநேரத்துக்குள் அதன் அகலம் 70 அடிக்கு அதிகரித்தது.

தாய்வானில் பட்டாசுக்கு மாற்று யோசனை

சீனப் பட்டாசு
சீனப் புதுவருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தாய்வான் தலைநகர் தய்பெய்யில், மக்கள் நிஜப் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவற்றுக்கு பதிலாக பட்டாசு சத்த ஒலிப்பதிவை அவர்கள் ஒலிக்கச் செய்துகொள்ளலாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பட்டாசு வெடிப்பதால் திருஷ்டி கழியும் துரதிருஷ்டம் விலகும் என்று நம்பும் சீனர்கள் தமது புத்தாண்டை பட்டாசு கொளுத்தி வரவேற்பதென்பது அவர்களின் நூற்றாண்டுகள் கால பாரம்பரியம் ஆகும்.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால், பணயக்கைதிகளை கொன்று விடுவோம்

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில் வேலை செய்து வந்த 5 பிரெஞ்சு நாட்டினர் உள்பட 7 வெளிநாட்டினர் கடத்தப்பட்டனர். அவர்களை வடக்கு ஆப்பிரிக்கா பிரிவான அல்கொய்தா தீவிரவாதிகள் தான் கடத்தினார்கள். இந்த நிலையில் அவர்களை விடுவிப்பது தொடர்பாக அல்கொய்தா தலைவர் பின்லேடன் ஒரு ஆடியோ டேப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த டேப்பை அல்ஜசீரா டி.வி.சேனல் ஒளிபரப்பியது. அதில் பின்லேடன் கூறிஇருப்பதாவது:-

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்

இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக வழக்கறிஞர் அங்கயற்கன்னி விடுவிப்பு

இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை பற்றி ஆராய்ந்து, பின்னர் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து உதவிகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காகதான் இலங்கை விஜயம் மேற்கொண்டதாக பிபிசியிடம் பேசிய இந்திய சட்டத்தரணி அங்கயற்கன்னி கூறினார்.

இந்திய சட்டத்தரணி இலங்கையில் கைதா?

சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணி கயல்விழி என்ற அங்கையற்கண்ணி இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது என இந்திய தினத்தந்தி ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல