இன்று தினமும் நமது கைக்குள் சுத்தும் சக்கரம் எது என்று கேட்டால் அது மவுஸில் உள்ள Scroll வீல் தான். அநேகமாக அனைத்து கம்ப்யூட்டர்களுமே, மவுஸ் தரக்கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன.
வியாழன், 10 அக்டோபர், 2013
லினக்ஸ் பற்றி நீங்கள் அறியாதவை...
இன்று விண்டோஸை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தாலும் லினக்ஸ் என்ற ஒன்றையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடக்கத்தில் தொழில் நுட்ப ஆய்வாளர்கள் மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக லினக்ஸ் இருந்து வந்தது. பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக லினக்ஸ் உருவானது. அதற்கான சில காரணங்களை இங்கு காணலாம்.
இது தொடக்கத்தில் தொழில் நுட்ப ஆய்வாளர்கள் மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக லினக்ஸ் இருந்து வந்தது. பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக லினக்ஸ் உருவானது. அதற்கான சில காரணங்களை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Linux)
தாம்பத்ய உறவால் விளையும் நன்மைகளின் பட்டியல்!
தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும்,புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட தாம்பத்ய உறவு குறைக்கிறது என்றும் சமீப கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .தற்போது தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றனர. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.
Labels:
பாலியல்
வெட்கபட வைக்கும் புள்ளி விவரம்!
உலகிலேயே அதிகக் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பது குறித்து வருத்தம் மட்டுமல்ல வெட்கமும் பட வேண்டும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கும் கீழே 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஏறத்தாழ 5 லட்சம் பேர்! இதில் முதன்மைத் தொழிலாளர்கள் 50.78 லட்சம் பேர். குறுந்தொழிலில் ஈடுபடுவோர் 60.89 லட்சம்.
Labels:
உலகப்பார்வை,
பலதும் பத்தும்
‘எலும்புத்துண்டு அரசியல்’ என்றவர்கள் இப்போது நமது பாதையில்! வாழ்த்துக்கள்!! -ஈ.பி.டி.பி.
இலங்கை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பொதுச் செயலாளராக கொண்ட ஈ.பி.டி.பி., “மத்திய (இலங்கை) அரசுடன் நட்புடன் கூடிய எமது அரசியலை ‘எலும்புத்துண்டு அரசியல்’ என்றும் தூற்றினர். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும், அதே பாதைக்கு வந்துள்ளார்கள். வாழ்த்துக்கள்” என்றும் கூறியுள்ளது.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
அமெரிக்க அதிரடிப் படை DELTA FORCE வீதியில் நடத்திய ஒரு அதிகாலை ஆள் கடத்தல்!
அமெரிக்காவால் நீண்ட காலமாக தேடப்பட்டு, ‘தலைக்கு 5 மில்லியன் டாலர்’ பரிசு அறிவிக்கப்பட்டிருந்த தீவிரவாத சந்தேக நபர் அல்-லிப்பி, அதிரடி நடவடிக்கை ஒன்றில் கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படை ‘டெல்ட்டா ஃபோர்ஸ்’ (Delta Force) கொமாண்டோக்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, கார் ஒன்றில் இருந்த அல்-லிப்பியை ‘கடத்தி’ சென்றனர்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
உலகப்பார்வை
முஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்
நண்பர்களே இஸ்லாமிய நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
புரட்சிகர பெண் விடுதலை எல்லாம் ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியமாகும். ஆசிய கண்டத்தை சேர்ந்த, அதிலும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பெண்கள் எழுச்சியுற மாட்டார்கள். அவர்கள் பழமைவாதத்தில் ஊறியவர்கள் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் பகுதியாகவிருந்த உஸ்பெகிஸ்தானில் நடந்த பெண் உரிமைப்போர் பற்றி எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறார்கள்? இதுவரை உலகில் எந்தப் பகுதியிலும், பெருந்தொகையான பெண்கள் தமது உயிரைக் கொடுத்து போராடிய வரலாறு, உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. 1927 க்கும் 1929 க்கும் இடைப்பட்ட இரண்டு வருடங்களில் மட்டும், சுமார் இரண்டாயிரம் பெண்கள், இந்த உரிமைப் போரில் கொல்லப் பட்டார்கள்!
Labels:
இஸ்லாம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

















