செவ்வாய், 3 பிப்ரவரி, 2015
கருத்தடை சத்திர சிகிச்சையின் பின்னரும் கருத்தரிக்க் முடியுமா??
குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் பல இருந்தாலும் நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு முறையாக சொல்லக்கூடியது கருத்தடை சத்திர சிகிச்சையே ஆகும். கருத்தடை சத்திர சிகிச்சை முறையானது பெண்களின் பலோப்பியன் குழாய்கள் கட்டுப்போடப்பட்டு வெட்டப்படுவதன் மூலம் செய்யப்படுகின்றது. இதனை LRT சத்திர சிகிச்சையென அழைப்பார்கள். இவ்வாறான நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு முறையின் பின்னர் பெண் ஒருவர் தற்செயலாக கூட மீண்டும் கருத்தரிக்க முடியுமா? அவ்வாறு கருத்தரிக்கும் போது கருவானது கர்ப்பப்பையினுள் வளருமா? அல்லது கர்ப்பப்பைக்கு வெளியே பலோப்பியன் குழாயில் தங்குமா என அறிய வேண்டும். இதற்கு விளக்கம் தர நான் அண்மையில் கண்ட உண்மை சம்பவத்தை தருகின்றேன்.
Labels:
பெண்கள் பக்கம்
நாமல் ராஜபக்ஸவின் இன்றைய நிலை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவின் தற்போதைய நிலையை காட்டக் கூடிய புகைப்படங்கள் இவை.

Labels:
படங்கள்
எப்.எஸ்.பி தலைவர் குமார் குணரட்னம் இந்திய இராணுவத்துக்கு எதிராக கெரில்லாப் போரை நடத்தியவர் பாகம் - 2
“அநேகமான இராணுவ அதிகாரிகள் குமாரை விரும்பியதுடன் அவர்மீது அனுதாபமும் காட்டினார்கள். அவரை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக இராணுவம் அவரை கந்தளாயில் உள்ள உத்தியோகத்தர்கள் விடுதியில் விட்டிருந்தார்கள். மூத்த அதிகாரிகளுக்கு ஒரு தனிப்பட்ட உதவியாளனைப் போல அவர் பணியாற்றினார். கைது செய்யப்பட்ட ஜேவிபி சந்தேக நபர்களை எவ்வாறு கையாள்வது என்று இராணுவ உத்தயோகத்தர்களுக்கு குமார் ஆலோசனை வழங்கினார். இராணுவத்தினருடன் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பு உறவையும் கூட அவர் ஏற்படுத்திக் கொண்டார். மார்ச் 1990ல் இந்திய இராணுவம் சென்றதின் பின்னர் ஜூன் 1990ல் எல்.ரீ.ரீ.ஈ உடன் போர் வெடித்தது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
டி.பி.எஸ் ஜெயராஜ்
எப்.எஸ்.பி தலைவர் குமார் குணரட்னம் இந்திய இராணுவத்துக்கு எதிராக கெரில்லாப் போரை நடத்தியவர் பாகம் - 1
குமார் குணரட்னம் அல்லது குமார மாத்தையா மற்றும் நோயல் முதலிகே என்றும் அழைக்கப்படும்; முன்னணி சோஷலிசக் கட்சியின்(எப்.எஸ்.பி) அரசியற் குழுவின் முன்னணி உறுப்பினரைப் பற்றிய ஊகங்கள் இந்த நாட்களில் செய்திகளில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தற்சமயம் ஒருமாத கால சுற்றுலா விசாவில் ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும்; குமாரின்(அவரது முழுப் பெயர் பிரேம்குமார் குணரட்னம்) விசாவுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படாது மற்றும் அவர் நாட்டில் இருந்து வெளியேறியாக வேண்டும் அல்லது நாடுகடத்தப்படலாம். தற்சமயம் நோயல் முதலிகே எனும் பெயரில் ஒரு அவுஸ்திரேலிய கடவுச்சீட்டின் உரிமையாளராக குணரட்னம் உள்ளார். ஒரு மாதத்துக்கு முன்னதாக ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்திருந்த எப்.எஸ்.பி தலைவர், இங்கு அவர் தங்கியிருந்த காலப்பகுதியில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் சுற்றுலா விசாவுக்கான நிபந்தனைகளை மீறியுள்ளார் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
டி.பி.எஸ் ஜெயராஜ்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













