புதன், 19 நவம்பர், 2014

முதலில் ராதாரவியையும் காளையையும் நீக்குங்க.. அப்புறம் என்கிட்ட வாங்க - சரத்துக்கு விஷால் பதிலடி

சென்னை: நடிகர்களை கேவலமாகப் பேசிய நடிகர் சங்க செயலாளர் ராதாரவியையும், துணைத் தலைவர் காளையையும் நீக்கிவிட்டு என்னை சங்கத்திலிருந்து நீக்குங்கள் என சரத்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.

ஹரியானா சாமியார் ராம்பால் நள்ளிரவில் அதிரடி கைது

ஹிசார்: ஹரியானா சாமியார் ராம்பால் அதிரடியாக நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் இருந்து 15 ஆயிரம் பேரை வெளியேற்றிய பிறகு, சாமியாரை போலீசார் கைது செய்தனர். ஹரியானா மாநில அரசில் என்ஜீனியராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் ஆன்மிகத்தில் இறங்கி பிரபலம் ஆனவர் சாமியார் ராம்பால் (வயது 63). அங்கு பர்வாலா என்ற இடத்தில் அமைந்துள்ள அவரது ஆசிரமம், ஒரு அரசாங்கம் போலவே இயங்கி வந்தது. சர்ச்சைகளில் சிக்கிய அவர், ஒரு கொலை வழக்கில் சிக்கினார்.

மீனவர்கள் விடுதலை: ராஜபக்சே, மோடிக்கு நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது - சு.சுவாமி

டெல்லி: இருநாட்டின் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியால் 5 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைவர்களின் கூட்டு முயற்சிக்கு நாடு நன்றிகடன்பட்டுள்ளதாக பாஜகவின் சுப்பிரணிய சாமி தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருந்த 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்

ஆச்சி மனோரமாவை கவனிக்கவும் ஆளில்லையே- மன்சூர் அலிகான் ஆதங்கம்

ஆச்சி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் மனோரமாவை கவனிக்கக் கூட ஆளில்லை. அவருக்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருந்தும் முறையான சிகிச்சை இல்லாமல் தவிக்கிறாரே என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல