சனி, 27 ஜூலை, 2013

ஒஹியோ இளம்பெண்கள் பலாத்கார வழக்கு… குற்றவாளிக்கு 1000 ஆண்டு சிறை

ஒஹியோ: அமெரிக்காவில் க்லிவ்லாந்து பகுதியில் 3 பெண்களை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், அதன் பிறகு 1000 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.

தெரிஞ்சுக்கலாமா!

USB Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.

வேர்ட்: இலக்கணம் - ஸ்டைல் சோதனை

வேர்ட் புரோகிராமில், டெக்ஸ்ட்டின் இலக்கணத்தைச் சோதனை செய்திடும் முழுமையான புரோகிராம் ஒன்று உள்ளது. பொதுவான இலக்கணப் பிழைகளை இது சுட்டிக் காட்டும். ஒவ்வொரு இலக்கணப் பிழையும் சுட்டிக் காட்டி, அதனைத் திருத்தி அமைப்பதற்கான சந்தர்ப்பத்தினையும் தரும். வேர்ட் புரோகிராமில், பல வகையான டெக்ஸ்ட் ஸ்டைல்கள் வடிவமைத்துத் தரப்பட்டுள்ளன.

ஜிமெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப

மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருப்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதனைப் பயன்படுத்தாதவர் கூட, எதற்கும் இருக்கட்டும் என மெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர்.

வேர்ட் டிப்ஸ்

பக்க எண்களை பார்மட் செய்திட: வேர்ட் டாகுமெண்ட்டில், ஆவணத்தை மட்டுமின்றி, அதன் பக்க எண்களையும் பார்மட் செய்திடலாம். குறிப்பிட்ட பக்க எண்களை, போல்ட், இடாலிக்ஸ் மற்றும் அடிக்கோடு என, சொற்களைப் போலவே அமைக்கலாம். இந்த வசதி, வேர்ட் 2007, மற்றும் 2010ல் கிடைக்கிறது.

"யு சென்ட் இட்' பெயர் மாறியது

மின் அஞ்சல்கள் வழியே பைல்களை இணைத்து அனுப்புகையில், ஒவ்வொரு இமெயில் புரோகிராமும், வெப் மெயில் தளங்களும், பைலுக்கான அளவை வரையறை செய்து வைத்துள்ளன. எனவே, மிகப் பெரிய பைல்களை அனுப்ப நாம் பல வழிகளைக் கையாள்கிறோம். அந்த வகையில் நமக்குப் பல ஆண்டுகளாக உதவி வருவது YOUSENDit தளமாகும். இந்த தளத்திற்குப் பெரிய அளவிலான பைல்களை அனுப்பி, நாம் யாருக்கு அனுப்ப வேண்டும் என எண்ணுகிறோமோ, அவரின் மின் அஞ்சல் முகவரியைத் தந்துவிட்டால் போதும்.

அவருக்கு அஞ்சல் செய்தி அனுப்பப்பட்டு, அந்த பைலை டவுண்லோட் செய்திட லிங்க் தரப்படும். இந்த யு செண்ட் இட் டாட் காம் தளத்தின் பெயர் ஹை டெய்ல் என மாற்றப்படுகிறது.

Hightail
Share |
Image Hosted by ImageShack.us

எக்ஸெல்: கிரிட் லைன் வண்ணம் மாற்ற

எக்ஸெல் ஒர்க்ஷீட்களில், தகவல்கள் கொண்டுள்ள செல்களைப் பிரித்துப் பார்க்க, செல்களின் கிரிட் லைன்கள் வண்ணத்தில் அமைவது நமக்கு உதவியாக இருக்கும். பொதுவாக, தொடக்கத்தில் இந்த செல் பார்டர் கோடுகள் கருப்பு வண்ணத்தில் இருக்கும். ஆனால், இவற்றை நம் விருப்பப்படி, ஸ்டைலாக வண்ணங்களில் மாற்றிக் கொள்ளலாம். இந்த பார்டர் கோடுகளின் வண்ணங்களை மாற்ற, கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும்.

விண்டோஸ் 8: சில குறிப்புகள்

டச் கீ போர்ட்: மாறா நிலையில், டச் கீ போர்ட் செயல்படுகையில் நாம் டைப் செய்திடுகையில், சில ஒலிகளை எழுப்பும். எடுத்துக் காட்டாக, ஒவ்வொரு வாக்கியத்தின் முதல் சொல்லின் முதல் எழுத்தைப் கேப்பிடல் எழுத்தாக மாற்றுகையில், ஸ்பேஸ் பாரினை இருமுறை தட்டினால், வாக்கியத்திற்கு புள்ளி வைத்தல் என இது போன்ற செயல்பாடுகளுக்கான ஒலியைத் தரும். இதில் சில உங்களுக்குச் சிரமமாக இருந்தால், அதனை நீக்கிவிடலாம். மாற்றத்தினை ஏற்படுத்த Win + I > Change PC Settings > General and customise the keyboard எனச் சென்று, தேவையான செட்டிங்ஸ் அமைக்கவும்.

விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்

விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது ஒரு சர்வீஸ் பேக் மட்டுமல்ல. பல சிறிய, பெரிய, முக்கிய மேம்பாட்டு வசதிகளையும் பயன்பாட்டினையும் தரும் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுத் தரும் பல அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதலாகவும் தரப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றி எனலாம். ஆனால், பயனாளர்களுக்கு இவை நிறைவைத் தருமா எனத் தெரியவில்லை. மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளை இங்கு காணலாம்.

அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் எதற்கு?

உங்களுடைய கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா? என் கம்ப்யூட்டரில் ஏன் முடியாது? என்று திருப்பி நீங்கள் கேட்டால், விண்டோஸ் சிஸ்டத்தினை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.

ஹெர்ட்ஸ் குறிக்கும் செயல்பாடு

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் மற்றும் அதன் செயல்பாடு குறித்துப் பேசுகையில் நாம் அடிக்கடி "மெகா ஹெர்ட்ஸ்' மற்றும் "கிகா ஹெர்ட்ஸ்' என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். கட்டுரைகளில் படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது என்று பார்ப்போமா!

ரீட் ஒன்லி கோப்புகள்

வேர்ட் புரோகிராமில், கவனிக்க வேண்டிய அம்சமாக, ரீட் ஒன்லி (Read Only) கோப்புகள் உள்ளன. ஒரு டாகுமெண்ட் பைலை, ரீட் ஒன்லியாக பார்மட் செய்திடப் பல வழிகள் உள்ளன. நாம் அறியாமல் இவ்வாறு அமைக்கப்படும் வழியினை மாற்றவும், வேர்ட் சில வசதிகளைத் தருகிறது. இங்கு அவற்றைப் பார்க்கலாம்.

ஜிமெயில் அஞ்சல்களில் ரைட் கிளிக்

முன்னர் ஜிமெயில் அஞ்சல்களில் ரைட் கிளிக் செய்து, அதனை முன்னோட்டமாகப் (Preview) பார்க்க முடிந்தது. இப்போது அந்த வசதி கிடைப்பதில்லை.ஜிமெயில் தளத்தில், அதன் சேவையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இதில் பழையனவற்றில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. புதிய வசதிகள் தரப்படுகின்றன. துரதிருஷ்டவசமாக, முன்பு தரப்பட்ட சில வசதிகள் நீக்கப்படுகின்றன. மேற்குறிப்பிடும் அஞ்சல் முன்னோட்டமும் இதில் ஒன்று.

விண்டோஸ் எக்ஸ்பியில், Desktop Icon Cleanup Wizard ற்கு இணையாக, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எந்த புரோகிராம் ???

டெஸ்க்டாப் ஐகான் கிளீன் அப் விஸார்ட் ஒரு தனி பயன்பாட்டு புரோகிராமாக, விண்டோஸ் எக்ஸ்பியில் கொடுக்கப்பட்டது. விண்டோஸ் 7ல் இது இல்லை. அதாவது, எக்ஸ்பியில் இருந்தது போல இல்லை. System Maintenance wizard என்ற ஒரு பெரிய தொகுதிக்குள் இது தரப்பட்டுள்ளது. பொதுவாக, இவை தாமாகவே இயங்கி வேலையை மேற்கொள்ளும். நீங்கள் இதனை இயக்க விரும்பினால், கீழ்க்கண்டபடி செயல்படவும்.

விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்

விண்டோஸ் எக்ஸ்பிக்கு பாதுகாப்பு நிறுத்தப்படும் நாள் நெருங்கி வருவதனாலும், விண்டோஸ் 8 சிஸ்டம் பழகுவதற்குச் சிரமமாக இருக்கும் என்ற தகவலின் அடிப்படையிலும், பலர் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் பெரும்பாலானவர்கள், விண்டோஸ் 8 தவிர்த்து, விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

விண்டோஸ் 7 டிப்ஸ்

போல்டர்கள் எடுத்துக்கொள்ளும் ஹார்ட் டிரைவ்

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல போல்டர்கள் எடுத்துக் கொள்ளும் ஹார்ட் டிஸ்க் இடம் எவ்வளவு என எளிதாகக் கண்டறியலாம். போல்டர் ஒன்றின் ஐகான் மீதாக, மவுஸின் கர்சரை சிறுது நேரம் வைத்திருந்தால், உடன் ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கும். அதில் போல்டரில் உள்ள அனைத்து பைல்களும் ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொண்டுள்ள இடம் எவ்வளவு என்று காட்டப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட போல்டரை எப்படிக் கையாளலாம், ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எப்படி மற்ற வற்றுடன் பங்கிட்டுக் கொள்ளலாம் என நமக்கு ஒரு மதிப்பீடு கிடைக்கும்.

தகவல் தொழில் நுட்ப சொற்களும் விளக்கமும்

சில தகவல் தொழில் நுட்ப சொற்கள், நாம் அடிக்கடி கேட்கும், படிக்கும் சொற்களாக இருந்தாலும், அவை குறிக்கும் செயல்பாடு அல்லது கருத்து என்னவெனச் சரியாக நம்மால் வெளிப்படுத்த முடியாது. ஏனெனில்,அவற்றின் இயக்க சூழல் தன்மையும், சாதனங்களின் செயல்பாடுகளுமே அவற்றின் தன்மையை முழுமையாக விளக்க முடியும். அப்படிப்பட்ட சில தொழில் நுட்ப சொற்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

ப்ளாஷ் ட்ரைவ் வாழ்நாள்

ப்ளாப்பி, சிடி என்பதையெல்லாம் விட்டுவிட்டு ப்ளாஷ் ட்ரைவிற்கு மாறியவரா நீங்கள்? உங்களின் ப்ளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் ப்ளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் நண்பனை நீக்கும் வழி

பேஸ்புக்கில் நமக்கென ஓர் அக்கவுண்ட் இருந்தால், நம்மோடு பலர் நண்பர்களாக, அஞ்சல் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். நாம் அவற்றைப் பார்த்து உறுதி செய்துவிட்டால், அவர்கள் பேஸ்புக்கில் இடும் அஞ்சல்கள் நமக்கு தொடர்ந்து வரும்.

விண்டோஸ் 8.1

1. விண்டோஸ் 8.1 என்பது என்ன?

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அப்டேட் ஆக, விண்டோஸ் 8.1 , சென்ற ஜூன் 26,2013 அன்று வெளியிடப்பட்டது. இது விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு வெளியிடப்பட்டது. பொதுவாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே, இது போன்ற முற்றிலும் மாறுபட்ட பதிப்பு வெளியிடப்படும். ஓராண்டிற்குள்ளாக வெளியிடப்பட்டது இதுவே முதல் முறை.

எக்ஸெல் டிப்ஸ்

பார்மட் இல்லாமல் டேட்டா மட்டும் காப்பி

எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில், செல் கொண்டுள்ள டேட்டாவை, வேறு ஒரு செல்லில் ஒட்ட காப்பி செய்திடுகையில் இந்த பிரச்னையை எதிர்நோக்கி இருப்பீர்கள். டேட்டா மட்டும் காப்பி ஆகாது. அது எந்த பார்மட்டில் உள்ளதோ அந்த பார்மட்டும் சேர்ந்தே காப்பி ஆகும். அந்த எழுத்து அமைப்பு, சுற்றிலும் உள்ள கட்டம், அடிக்கோடு எல்லாமே காப்பி செய்யப்படும். இவை எல்லாம் காப்பி ஆகாமல், டேட்டா மட்டும் காப்பி செய்யப்பட என்ன செய்திட வேண்டும்?

இதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள்!!!

இளமையில் எந்த சிரமத்தையும் தராமல் ஒத்துழைக்கின்ற உடல், நாளடைவில் வயதாக ஆக பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வந்துவிடுகிறது. அவற்றில் அதி முக்கியமானது இதயம் தொடர்பான பிரச்சனைகள். உணவுப்பழக்கம், தூக்க முறை, பணிகள், மனதிற்கு அழுத்தம் தரக்கூடிய நடவடிக்கைகள், ஓய்வு போன்ற பலதரப்பட்ட காரணங்களால், இரத்த ஓட்டம், இதயத்தின் பணிகள் போன்றவை பாதிக்கப்படும். ஆகவே சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டாலே, இதயத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.

ரீசார்ஜ் கார்டை நகங்களால் சுரண்டலாமா!

ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது .

இங்கிலாந்து நாட்டு அரச குடும்ப புதிய வாரிசுக்கு பெயர் சூட்டியதன் பின்னணி

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்–கதே தம்பதிக்கு பிறந்த அரச குடும்ப புதிய வாரிசுக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என பெயர் சூட்டி இருக்கிறார்கள். அதில் ஜார்ஜ் என்பது அரச குடும்பத்தில் கடந்த 300 ஆண்டுகளாக போற்றப்படும் பெயர் ஆகும்.

மசித்த உருளைக்கிழங்கு மசாலா

உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு மதிய வேளையில் எளிதில் செய்து சாப்பிடக்கூடிய வகையில் ஒரு சூப்பரான ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட ட்ரை செய்யலாம். ஏனெனில் அந்த அளவில் இதனை செய்து முறை மிகவும் எளிதாக இருக்கும்.

யானையில் வந்து தாலி கட்டிய யாழ்ப்பாண மாப்பிள்ளை! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய இடம்பெற்ற திருமணத்தில் மணமகன் யானை மேல் ஏறி அமர்ந்து, பவனி சென்று, மணமகளுக்கு தாலி கட்டினார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல