வெள்ளி, 9 மார்ச், 2012

அமெரிக்க தீர்மானம், இலங்கை திரைக்கதை எழுதி தயாரித்த கற்றுக் கொண்ட பாடங்கள் சிபாரிசுகளுக்கு அப்பால் போகவில்லை

அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம், இலங்கை அரசாங்கத்தினால் கதை, திரைகதை, வசனம் எழுதி தயாரிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டதே தவிர, ஐநா செயலாளர் நாயகத்தின் தருஷ்மன் அறிக்கையை அடிப்படையாக கொண்டது இல்லை. இதில் இலங்கை அரச தலைவர்களுக்கு எதிரான போர்குற்றங்கள் பற்றியோ அல்லது யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இறந்துபோன ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அடப்பாவிகளா..... இப்படியும் செய்யலாமா????????

பால் குடிக்கும் அனுமார் சிலையாம்.......


Image Hosted by ImageShack.us

கூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க

சென்ற மார்ச் 1 முதல், கூகுள் நிறுவனம் தன் புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும். அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், அதில் நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜி ப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன் படுத்தப்படும்.

யாழில் முதல் முறையாக முச்சக்கரவண்டி ஓட்டும் பெண்கள்

யாழ்ப்பாணத்தில் முதல்த் தடைவையாக 10 பெண்கள் முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடவுள்ளனர்.
பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட இந்தப் பெண்களுக்கும் மகளீர் தினமான நேற்றையதினம் (08.03.2012) பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் மானிய அடிப்படையில் முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு பெண்கள் யாழ் மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

சாந்தி தேடும் ஆவி

யுத்தம் முடிந்து பதினாலு மாதங்களில் சரியாகச் சொன்னால் அதாவது ஜுலை 2010 இல் சில நாட்களை யாழ்ப்பாணத்தில் கழித்துவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டபோது இரவு நேரமாகிவிட்டது. நானும் நண்பன் நாதனும் அவனது காரில் புறப்பட்டு தெற்கு நோக்கி பிரயாணம் செய்தோம். நான் ஆரம்பத்தில் சாரதியாக காரை வவுனியா வரை செலுத்துவது பிறகு கொழும்பு வரை அவன் செலுத்துவது என்பது எமது ஒப்பந்தம்.

இந்த பையனுக்கு இத்தனை பலமா?


Image Hosted by ImageShack.us

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல