வெள்ளி, 7 ஜனவரி, 2011

நோர்வே பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அமரர்.வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நோர்வே இரகசியமாக 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும், ஐக்கிய அமெரிக்க உயர்ஸ்தானிகரகம் இலங்கை அரசிடம் இருந்து அக்கடிதத்தினை மறைக்குமாறு கேட்டுகொண்டதாகவும் விக்கிலீக்‌ஸ் மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எரிக் பாடம் புகட்டியதாக விக்கிலீக்ஸில் கசிவு

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தலைநகரிற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே சமாதானச் செயலாளர் எரிக் சொல்ஹேம் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான பரந்த பார்வையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு எடுத்துரைத்ததாக ஒஸ்லோவில் அமைந்திருக்கும் அமெரிக்க உயர்ஸ்தானிகரகத்திற்கு எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளதாக புதிய விக்கிலீக்ஸ் தகவலொன்று ஒஸ்லோவை த​ளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்காக ஐக்கிய தேசிய கட்சி நோர்வேயிடம் உதவி கோரியது

2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலிகளின் குரல் வானொலி சேவைக்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய ​நோர்வேயிடம் ஐக்கிய தேசிய கட்சி அரசு உதவி கோரியிருந்ததாக மற்றுமொரு விக்கிலீக்‌ஸ் தகவலை ஓஸ்லோவை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம் (படங்கள் இணைப்பு)

200 அடி பள்ளத்தாக்கில் எப்போதும் விழலாம் என்ற நிலையில் தலைகீழாக ஊசலாடிக் கொண்டிருந்த லொறியொன்றிலிருந்து லொறி சாரதி மயிரிழை யில் உயிர் தப்பிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

மூடநம்பிக்கை

அங்கவீனமடைந்தவர்களை சூய கிரகணத்தின் போது கழுத்துவரை மண்ணில் புதைத்தால், அவர்கள் குணமடைவார்கள் என்ற மூடநம்பிக்கை பாகிஸ்தானிய மக்களிடையே நிலவுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பகுதி சூரிய கிரகணத்தின் போது கராச்சி கிளிப்டன் கடற்கரை மண்ணில் அங்கவீனமடைந்த பலர் கழுத்துவரை புதைக்கப்பட்டனர்.

இதன்போது கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்ட அங்கவீனமடைந்த யஸீர் என்ற 7 வயது சிறுவனை படத்தில் காணலாம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல