வியாழன், 6 மார்ச், 2014

விடுதலை புலி தலைவர்கள் சரணடைந்த பின்னர் படுகொலை- புது ஆதாரம் வெளியீடு

சிட்னி: தமிழீழ விடுதலைப் புலி தலைவர்கள் பலர் சரணடைந்த பின்னர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புதிய ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

வேலணையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். வேலணை சிற்பனைப் பகுதியில் ஊர்காவற்றுறை, நாரந்தனை பகுதியைச் சேர்ந்த அருளப்பு அல்வினம்மா (வயது 70) என்பவரின் சடலம் புதன்கிழமை (05) காலை கண்டெடுக்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
Share |
Image Hosted by ImageShack.us

யாழில் மாட்டிய மஸாச் கிளப் நடத்துனர் ரி.என்.ஏ மாநகரசபை உறுப்பினர் ராஐதேவன் (படங்கள்)


யாழ் நகரில் பொலிஸாரின் முற்றுகையில் மாட்டிய யாழ்பாடி மஸாச் கிளப் நடத்துனர் யாழ் மாநகரநபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் நடராஐh ராஐதேவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், யாழ்பாடி மாசாஸ் கிளப்பில் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை தனது விடுதியில் தொழிலுக்கு அமர்த்தி யாழ் மக்களின் காலாச்சார சீரழிவுக்கு துணை போன நடராஐ ராஐதேவன் கைதுசெய்யப்படவில்லை என்ற கேள்வி யாழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்போது புரிகிறதா? தமிழ்நாட்டு ஈழ ஆதரவு வேஷதாரிகளின் சூட்சுமங்கள்?

ஈழத்தமிழர்களின் பெயரில் இந்தியாவில் நடக்கும் வியாபாரம் எல்லைகடந்து செல்கிறது. ஈழதமிழருக்காக குரல்கொடுக்கின்றோம் ஆதரவு தருகின்றோம் அனைத்தையுமே இழக்கின்றோம் என்று தமிழக அரசியல்வாதிகள் கொடுத்துவரும் குரல்களில் உள்ள போலிகளை அம்பலப்படுத்துவதில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் யாருமே அக்கறை கொள்வதில்லை. அவர்கள் எப்படி பேசினாலும் அது எமக்கு சாதகமானதே என்கின்ற ஒரு பொத்தாம் பொது சிந்தனை எமது மக்களின் மனதிலும் ஆழமாகவே வேரூன்றிவிட்டது. கேட்டால் தமிழ் நாட்டு தமிழர்கள் எமது தொப்புகொடி உறவுகள் எமக்கு எதுமேன்றால் அவர்கள் எமக்கு கரம்கொடுப்பார்கள் என்று சப்பைகட்டுகட்டி வரும் இலங்கை எழுத்தாளர்களுக்கு மட்டும் குறைவில்லை.அப்படிஎன்றால் அது என்ன தொப்புள் கொடி உறவு? அப்படிபார்த்தால் இலங்கைத்தமிழர்கள் இந்தியாவில் இருந்து இங்குவந்து குடியேறியவர்கள் என்றும் அவர்கள் இங்கு பூர்வீகம் கொண்டாடுவது பொய்யானது என்றும் சிங்கள இனவாதிகள் சொல்லிவருவதுதான் உண்மையோ எனக்கு எதுமே விளங்கவில்லை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல