இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வோர் மனிதாபிமானமற்ற நிலையில் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்படுவது இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏலவே மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் பெண்கள் உடல்உள ரீதியாக பல்வேறு இம்சைகளுக்கு ஆளாவது இருந்துவருகின்றது. இருந்தும், அதிலிருந்தும் ஒருபடி மேலாக அடிமைகளைப் போன்று ஊசி ஏற்றி சித்திரவதை செய்யும் மிகவும் கொடூரமான ஈனத்தனமான செயல்கள் அன்றாடம் அதிகரித்துவருகின்றன.
வியாழன், 18 நவம்பர், 2010
மினுமினுத்துக் கொண்டிருந்த கம்பிகளை கதறக் கதற ஏற்றினர்'' (அல்ஜஸீராவின் காணொளி இணைப்பு)
குருநாகல் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பலங்க தல்கொட பிடியவைச் சேர்ந்த 38 வயதுடைய மீனாட்சி லெட்சுமி தமக்கெனச் சொந்த வீடொன்றைக் கட்டிக் கொள்வதற்காக குவைத் நாடு சென்று தம் கை, கால்களில் கம்பிகளால் குத்தப்பட்டு சித்திர வதைக்குள்ளான நிலையில் நாடு திரும்பி தற்பொழுது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
பிரபல நடிகை ஒருவர் இயக்கத்தில் சேர்ந்துள்ளார் (படங்கள் இணைப்பு)
மாவோயிஸ்ட் இயக்கத்தில் நேபாள நாட்டின் பிரபல நடிகை ரேகா தாபா சேர்ந்துள்ளார். பேஸ்புக் இணையதளத்தின் மூலம் மாவோயிஸ்ட் இணைப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
Labels:
சினிமா,
வினோதமான செய்திகள்
உலகின் குள்ளமான பெண் (படங்கள், காணொளி இணைப்பு)
இரண்டே கால் அடி உயரம், 6.8 கிலோ எடை கொண்ட ஹடிசி கொசாமன் என்பவர் உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். துருக்கி நாட்டின் கடிர்லி பகுதியில் 21 வயதுடைய ஹடிசி கொசாமன் வசிக்கிறார். அண்மையில் கின்னஸ் உலக சாதனைகளை பட்டிலிடும் குழுவினர் ஹடிசியின் உயரம் மற்றும் எடையை பரிசோதனை செய்தனர். பின்னர் இரண்டே கால் அடி (71 செ.மீ.) உயரம், 6.8 கிலோ எடையுள்ள ஹடிசி உலகின் குள்ளமான பெண் என்று அறிவித்து, 2010ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரின் பெயரை பதிவு செய்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
ஜேர்மனியில் அல் - கொய்தா தாக்குதல் நடத்தலாம் பாதுகாப்பு அதிகரிப்பு
அல் - கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற புலனாய்வுப்பிரிவின் தகவலை அடுத்து ஜேர்மனியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆப்கானில் இடம்பெறும் யுத்தத்திற்கான ஜேர்மனியின் பங்களிப்பினை எதிர்க்கும் வகையில் தாக்குதல் இடம் பெறலாமென அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தோமஸ் டீ மெயிஸ்ரி தெரிவிக்கின்றார்.
Labels:
உலகப்பார்வை
நான்கு வயது சிறுமி மீது தந்தை வல்லுறவு
நான்கு வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தையை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
Labels:
இலங்கை,
வினோதமான செய்திகள்
அன்னை திரேஸா விருது தலாய் லாமாவுக்கு வழங்கப்பட்டது
திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு சமூக நீதிக்கான அன்னை திரேஸா ஞாபகார்த்த சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
Labels:
உலகப்பார்வை
கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது
பேரண்டத்தின் பின்புலத் தேடி என பொருள்படும் COBE (Cosmic Background Explorer) செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) தேடி-66 (Explorer 66) என்றும் அழைக்கப்பட்டது. இத்துணைக்கோள் 1989ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி விண்ணுக்கு போடப்பட்டது.
Labels:
இன்று
எம்.வி.சன்.சி தமிழரின் விடுதலை ரத்து
எம்.வி.சன்.சி பயணிகளில் ஒருவரும், மூன்று பிள்ளைகளின் தாயுமான தமிழர் ஒருவரின் விடுதலையை கனேடிய நீதிமன்றம் ஒன்று ரத்துச் செய்துள்ளது. கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை இவரின் விடுதலைக்கான உத்தரவை முன்பு பிறப்பித்து இருந்தது.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை,
தமிழர்கள்
மரணதண்டனை உத்தரவில் கையெழுத்திட மறுத்த ஈராக் ஜனாதிபதி
ஈராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் ஆட்சியில் இருந்த காலத்தில் வெளிநாட்டு மந்திரியாகவும்,துணை அதிபராகவும் இருந்தவர் தாரிக் அஸீஸ். சதாம் உசேன் காலத்தில் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கோர்ட்டு இவருக்கு மரண தண்டனை விதித்தது.
Labels:
உலகப்பார்வை
விமான நிலையங்களில் நிர்வாண உடல் பரிசோதனைக்கு அமெரிக்கர்கள் ஆதரவு
அமெரிக்க விமானங்களில் தீவிரவாதிகள் ஏறி பயணிகள் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதை தடுப்பதற்காக கடந்த 2007-ம் ஆண்டு முதல் முழு உடல் பரிசோதனை செய்ய அந்த நாட்டு அரசு ஏற்பாடு செய்து உள்ளது. அமெரிக்காவின் 65 விமான நிலையங்களில் 315 நிர்வாண பரிசோதனைக்கான ஸ்கேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் 450 ஸ்கேனர்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
Labels:
உலகப்பார்வை
சிறுவர்களுக்காக ஒபாமா எழுதிய புத்தகம் மார்க்கெட்டுக்கு வந்தது
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறுவர்களுக்காக எழுதிய முதல் புத்தகம் ``ஆப் தீ ஐ சிங்'' ஆகும். இதில் சாதனை படைத்த 13 அமெரிக்கர்களை பற்றி எழுதி இருக்கிறார்.
Labels:
உலகப்பார்வை
மனைவியின் நாக்கை அறுத்த இளைஞர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் முகமது தஸ்லிம் தாகீர். 21 வயதான இவர் தன் மனைவியின் பெயர் கேதரைன் கேமரூன். இவரது நாக்கை அறுத்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
கணணி விளையாட்டிற்கு அடிமையான சிறுவன் தாயைக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளான்
அளவுக்கதிகமாக கணனி விளையாட வேண்டாம் என கண்டித்த தாயாரை படுகொலை செய்த 15 வயது மகன், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
மகளின் திருமனத்தை தடுத்து நிறுத்த போலி குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்த தாய்
திருமணம் செய்வதற்காக வெளிநாடு செல்லும் மகளைத் தடுப்பதற்காக, தனது மகள் விமானமொன்றை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக பொலிஸாருக்கு போலியாக எச்சரிக்கை விடுத்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதன்கிழமை ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
விடுதலையைப் பெற்றுத்தாருங்கள் உங்கள் பின்னால் அணிதிரளத்தயார்: ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான கடிதம்
எம்மை விடுதலை செய்து குடும்பத்தாருடன் வாழ விடுங்கள். அவ்வாறு செய்தால் உங்களுக்குப் பின்னால் அணி திரளத் தயாராக உள்ளோம் என்று புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மக்காவிற்கு போன பெண் மரணம்
புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற இலங்கைப் பெண் ஒருவர் புனித மக்காவில் காலமாகியுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஹஜ்ஜாஜிகள் அரபா மைதானத்திலிருந்து முஸ்தலிபாவுக்குச் செல்லும் போதே, இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த மரியம்பீவி என்ற 55 வயது பெண்மணி மரணமாகியுள்ளார்.
ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலையே புனித மக்காவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஹஜ்ஜாஜிகள் அரபா மைதானத்திலிருந்து முஸ்தலிபாவுக்குச் செல்லும் போதே, இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த மரியம்பீவி என்ற 55 வயது பெண்மணி மரணமாகியுள்ளார்.
ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலையே புனித மக்காவில் இடம்பெற்றுள்ளது.
லண்டனில் தீ விபத்து: இலங்கை இளைஞர் பலி
லண்டனில் உள்ள மாடிக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கை இளைஞர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
சாய்தமருதுவைச் சேர்ந்த 30 வயதுடைய அப்துல் அஸீஸ் பௌசுல் இஹ்ஸான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தங்கியிருந்த மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கின் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாய்தமருதுவைச் சேர்ந்த 30 வயதுடைய அப்துல் அஸீஸ் பௌசுல் இஹ்ஸான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தங்கியிருந்த மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கின் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நம்பிக்கை ஒளியைப் பரப்பிய விடுதலைப் போராளியே உங்களுக்கு வாழ்த்துக்கள்
பிரிந்து வேறாகிப் போன தேசத்தின் இருண்ட மூலை முடுக்கெல்லாம் நம்பிக்கையின் ஒளியைப் பரப்பிய விடுதலைப் போராளியே மனமகிழ்வுடன் கூடிய ஆரோக்கியமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















