ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014
இஸ்ரேலியர்களின் பாதையும் தேவையும்
image source: google
கடவுள் மோசஸ் மூலம் இஸ்ரேலியர்களுக்கு கொடுத்த பூமி என்பது கட்டுக்கதை!
தான் ஆட்சிசெய்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அந்த நாடுகளை அந்த நாட்டு மக்களே ஆளும்படி செய்த பிரித்தானியா பலஸ்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐ.நாவிடம் கையளித்தது. பலஸ்தீனத்தில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்குடனேயே இப்படிச் செய்யப்பட்டது.
இஸ்ரேலியர்களின் ஹிப்ரூ மொழி உலகிலேயே தொன்மை வாய்ந்த மொழிகளுள் ஒன்றாகும். இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆண்ட பரம்பரை என்பதும் தாம் மீளவும் ஆள வேண்டும் என்பதும் அவர்களது தலையாய கொள்கைகளாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து கடைப்பிடித்து வருகின்றனர். தாம் பலஸ்தீனப் பிரதேசத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக இஸ்ரேலியர்கள் நம்புகின்றனர். இஸ்ரேலில் தோண்டும் இடங்களில் எல்லாம் கிடைக்கும் நாணயங்கள், மட்பாண்டங் கள், புராதன நகரங்கள் எல்லாம் இந்த மண் எங்கள் சொந்த மண் எனப் பறைசாற்றுகின்றன என்கின்றனர் இஸ்ரேலியர்கள்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
காஸா நெருக்கடிகள் சுழலும் சக்கரம்
image source: google
மூன்று நாட்கள் நீடித்த மௌ னத்தின் பின்னர் மீண்டும் காஸாவில் படாரென்ற வெடிப்புச் சத்தம் கேட்டது. இம்முறை பத்து வயது பாலகன் பலியானான். மீண்டும் மரண ஓலம் கேட்கத் தொடங்கியது. சில மணித்தியாலங்களில் காஸாவில் இருந்து டெல்-அவிவ் நோக்கி ரொக்கட்டுக்கள் பறந்தன. இஸ்ரேலிய மண்ணாக வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து காஸாவை நோக்கி ஏவுகணைகள் விரைந்தன. ஆளில்லா விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மீண்டும் மனித அவலங்கள். சமூக வலைத்தளங்களில் இரத்தச் சொட்டக் கிடக்கும் பச்சிளம் பாலகர்களின் படங்கள் வெளியாகி பார்ப்பவர்களின் மனங்களை அதிரச் செய்தன. பிரதான ஊடகங்கள் கிரிக்கெட் ஸ்கோரைப் போல மரணங்களின் எண்ணிக்கையை அப்டேட் செய்தன. உலகத் தலைவர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டு தமது பொறுப்பை நிறைவேற்றினார்கள். வழமை போல காஸாவின் எல்லைப்புறங்களில் இஸ்ரேலிய துருப்புக்கள் குவிக்கப்பட்டன. எகிப்திய இராஜதந்திரிகள் கெய்ரோ நகரில் இஸ்ரேலிய– பலஸ்தீன பிரதிநிதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு ஓடியோடி களைத்துப் போனார்கள். காஸா மக்கள் மீண்டும் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக பதுங்கு குழிகளுக்குள் ஓடி மறையத் தொடங்கினார்கள். சக்கரம் சுழன்றது. அதற்கு ஓய்வில்லை என்ற யதார்த்தம், சடாரென்று அறைந்தாற்போல உலக சமுதாயத்தின் கன்னத்தைப் பதம் பார்த்தது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
இனப்பிரச்சினையை முன்னாள் இந்தியப் பிரதமர் தவறான வழியில் கையாண்டாரா?
இலங்கைப் பிரச்சினையை தவறான முறையில் இந்திய முன் னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கையாண்டதே அவரின் கொலைக்கு வழிவகுத்தது. தீர்க்க தரிசனத்துடன், நுட்பமான முறையில் இலங்கைப் பிரச்சினையை அவர் கையாண்டிருப்பாராயின் ஈழத்தமிழ ரின் இன்றைய அவலத்துக்கு வழிவகுத்திருக்காது என்ற உண்மையை அண்மையில் தெரிவித்திருந்தார் இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
உள்நாட்டு விசாரணை களையிழந்தது ஏன்?
வடக்கு, கிழக்கில் போர் இடம்பெற்ற காலகட்டத்தில் காணாமற்போனவர்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட, சர்வதேச சட்ட நிபுணர்களின் குழுவுக்கு அரசாங்கம் எதிர்பார்த்தது போன்ற வரவேற்புக் கிடைக்கவில்லை.அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு உள்நாட்டில் கூட, ஆதரவு பெற முடியாது போயுள்ளது. வெளிநாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் இதனைப் பெரியதொரு விடயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த நிபுணர் குழு பற்றிய அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டு மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது.
ஆனாலும், எந்தவொரு நாடோ, ஐ.நாவோ, தாமாக வாய்திறந்து இதனை வரவேற்கவில்லை.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
உலகத்தையே தன் எழுத்தால் சிரிக்க வைத்தவர்
இருபது வயதில் சிறுநீரகம் பாதிப்பு போதாதற்கு மார்பக புற்றுநோய் ஆனாலும் உலகத்தை தன் எழுத்தால் சிரிக்க வைத்தவர்
அவன் நல்லா விட் அடிக்கிறாண்டா என்று சொன்னால், ஒருவேளை இப்போதைய தலைமுறைக்கு இந்த வாக்கியத்தின் பொருள் புரியாமலேயே கூட போக முடியும். விட் என்கிற ஆங்கில வார்த்தையின் பயன்பாட்டை கிட்டத்தட்ட நாம் நிறுத்திவிட்டோம். ஆனால் ஒரு காலத்தில் ஜோக் என்பதற்கு பதிலாக விட் தான் விட்டுவிடாமல் தொடர்ச்சியாக நாம் பயன்படுத்திய வார்த்தை. முப்பதாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கர்களை தன் விட்டுகளால் விலா நோக சிரிக்க வைத்த ஒருவர் இங்கு உலாவருகிறார்.
Labels:
கட்டுரைகள்,
பலதும் பத்தும்
சிக்கன் மசாலா ரைஸ்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு பொடி/பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 6 கப்
சிக்கன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு பொடி/பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 6 கப்
Labels:
சமையல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









