ஒரு சோதிட ஆராய்ச்சி
மகா பாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் முக்கிய பாத்திரங்கள். தர்மத்தைக் காக்க வந்தவர்கள்.அதுபோல கௌரவர்கள் அதர்மத்தால் அழிய வந்தவர்கள். பாண்டவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு. தருமர் நீதியே உருவெடுத்தவர்; வாய்மை பிறழாதவர். பீமன் மகாபராக்கிரமசாலி. அருச்சுணன் வில்வித்தையில் நிகல்லாதவன். நகுலன் கால்நடை சாஸ்திர மறிந்து மிருக வளர்ப்பில் தேர்ந்தவன். அதேமாதிரி சகாதேவன் சோதிட நிபுணன். கணித்துச் சொன்னால் சொன்னதுதான். அச்சுப் பிசகாமல் நடக்கும். இவனது வாய்மையையும் நேர்மை யையும் அறிந்தே துரியோதனன் இவனிடம் வந்து பாரதப் போருக்கு நாள் குறித்துச் சென்றான். அவன் குறித்துக் கொடுத்த நாளில் போர் தொடங்கியிருந்தால் பாண்டவர்கள் வென்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இடையில் கபடநாடக சூத்திர அவதாரியான கிருஷ்ண பரமாத்மா புகுந்து குழப்பினார். அவர்தான் பாண்டவர்கள் பக்கமாயிற்றே? நாளையும் கோளையும் மடக்கி நாடகமாடி அன்று நிகழவிருந்த அமாவாசைத் திதியை காலதாமதமாக்கினார். இதனை நம்பி ஏமாந்த அர்ச்சகர்கள் தர்ப்பணம் செய்யப் போக, நாளே குழம்பி நாசத்துக்கு வழிவகுத்தது.இந்த ஐவருக்குள் இளைய அருமையான தம்பி சகாதேவன் பல அரிய சோதிடக் கிரந்தங்களை உருவாக்கியுள்ளார்.
ஞாயிறு, 23 மே, 2010
இருதய நோயாளிக்கு தக்காளி
இருதய நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி. நாம் அன்றாடம் நமது உணவில் பயன்படுத்தும் தக்காளி விதைகளில் இருதய நோய் பாதிப்பை தடுக்கும் திறன் கொண்டவை என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெவிக்கின்றன.
Labels:
மருத்துவம்
தற்கொலைக்கு போராடும் பூனை
“மூன்று நாட்களாக விஸ்கி ஒன்றும் சாப்பிடவில்லை' என எழுபது வயதான கொலின் தனது கறுப்பு வெள்ளைப் பூனையை மார்பில் அணைத்தபடி கூறினார். அவரது பிரித்தானிய உச்சரிப்பு இரசிக்கக் கூடியதாக இருந்தது. அவரது பூனைக்குப் பெயர்தான் விஸ்கி.
Labels:
வினோதமான செய்திகள்
சோர்வை விரட்டுவோம்
மனச்சோர்வு என்பது மன அழுத்தம் என்றும் வழங்கப்படுகின்றது. உறக்கம் அசதியும் சோர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. மனச்சோர்வு பல வகைப்படும்.
இது ஏன் ஏற்படுகின்றது? அறிவியலாளர்க்கே விடைதெரியாத கேள்வி இது!
இது ஏன் ஏற்படுகின்றது? அறிவியலாளர்க்கே விடைதெரியாத கேள்வி இது!
Labels:
மருத்துவம்
நீழிவு நோயாளர்களுக்கு இன்சுலின் இன்ஹேலர்
ஆஸ்துமா நோயாளிகள் தங்கள் கைகளில் இன்ஹேலர் ஒன்றை வைத்துக் கொண்டு அடிக்கடி உறிஞ்சிக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இனி நீரிழிவு நோயாளிகளும் அவ்வாறு செய்யப் போகிறார்கள்.
Labels:
மருத்துவம்
உணவுப்பொருட்களில் உள்ள மருத்துவக்குணங்கள்
நாம் சாதாரணமாக சாப்பிடும் எத்தனையோ உணவுப் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை அறிந்து தேவைக்கேற்ப சாப்பிட்டால் உணவே மருந்தாகும்.
Labels:
மருத்துவம்
ஜெயலலிதாவுக்கு எதிராக களமிறங்கும் குஷ்பு
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எதிர்க் கட்சித் தலைவியுமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் அடிக்கடி சென்று ஓய்வு எடுக்கும் சிறுதாவூர் பங்களாவை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் கே. பி. சிவசுப்பிரமணியம் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சிறுதாவூர் சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதனால் இந்த உத்தரவை உடனடியாக அமுல்படுத்த முடியவில்லை.
Labels:
சினிமா
ஹாட் டிஸ்கில் பிழைகள் கண்டறிய
பழுதடைந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பரீட்சித்து அவற்றைச் சீரமைப்பதற்கும் ஹாட் டிஸ்கில் உள்ள பழுதடைந்த செக்டர்களைக் கண்டறிந்து அவற்றை வேறாக்கி விடுவதற்கான ஒரு யூட்டிலிட்டியே Chkdsk இந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி அன்றைய எம்.எஸ்.டொஸ் காலம் முதல் இன் றைய விஸ்டா வரை விண்டோஸின் எல்லாப் பதிப்புகளிலும் தவறாது இடம்பெற்று விடுகிறது.
Labels:
கணணி மையம் (useful tips)
Sweet Home 3D
ஸ்வீட் ஹோம் திரீ-டீ (Sweet Home 3D) என்பது ஒரு இல்ல அலங்கார மென் பொருள். இது உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு தளபாடத்தையும் எவ்வாறு பொருத்தமான இடத்தில் வைத்து ஒழுங்கு படுத்தலாம் என்பதைக் கற்றுத் தருகிறது. வீட்டின் எப்பகுதியிலிருக்கும் தளபாடங்களையும் வேறு இடங்களுக்கு நகர்த்தினால் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை அவற்றை நகர்த்தாமலேயே இந்த ஸ்வீட் ஹோம் மூலம் த்ரீ-டீ இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Softwares)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











