சனி, 27 மார்ச், 2010

கிளிண்டன் சட்டையில் கை துடைத்த புஷ்! (வீடியோ)

ஹெய்டியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வியர்வை படிந்த கைகளை குலுக்கிய பின்னர், தனக்கு முன்பாக திரும்பி நின்றுகொண்டிருந்த பில் கிளின்டனின் சட்டையில் ஜார்ஜ் புஷ் கையை துடைத்ததாக புகார் எழுந்துள்ளது. ஹெய்டியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

“இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்“

“இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்“ என்றும் ஒரு பழமொழி வழக்கில் உள்ளது. ஆனால், அதன் உண்மை பொருள் வேறு.
இறைவனுக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுத்தால், அவன் நம் அறியாமையை (மடமையை) வேருடன் களைவான் என்பதே அதன் பொருளாகும்.

“திருநீறு இட்டார் கெட்டார், திருநீறு இடாதார் வாழ்ந்தார் என்று ஒரு பழமொழி வழங்குகிறது. ஆனால், அதன் உண்மையான வடிவம் “திருநீறு இட்டு யார் கெட்டார்? திருநீறு இடாது யார் வாழ்ந்தார்?' என்பதே.

திறமையினாலும் விடா முயற்சியினாலும் திரையுலகில் சாதனைகள் புரிந்த லிவிங்ஸ்டன்

முன்னரெல்லாம் தமிழ்த் திரையுலகில் நடிப்பதற்காக வருபவர்கள் நல்ல முகவெட்டு, உடல் கட்டுடன் இருந்தால் மட்டுமே தயாரிப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோ அவர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள். அதே சமயம் அவ்வாறான லட்சணங்கள் இல்லாமல் வெறும் திறமை மட்டும் இருந்து விட்டால் அவர்களை பிரதான வில்லனுக்கு அடியாளாகவோ அல்லது சிறிய பாத்திரமொன்றிலோ போனால் போகட்டுமென்று சந்தர்ப்பம் வழங்குவார்கள்.

முன் எச்சரிக்கை

இன்றைய நவீன வாழ்க்கையில் சுகங்கள், சௌகரியங்கள், நிறைந்திருந்தபோதிலும் சில சந்தர்ப்பங்களில், கடினமான சில வேலைகளை செய்ய வேண்டிய அவசியம் நேரலாம். மேலும் ஆரோக்கியத்திற்காக “உடற்பயிற்சி மையம்' போய் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் சிலருக்கு ஏற்படக்கூடும். அது போன்ற சமயங்களில் உடலில் ஏற்படக் கூடிய சிறிய வலி, உபாதைகள் விஷயத்தில் எச்சக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அஜாக்கிரதையினால் பின் விளைவுகள் விபதமாக இருக்கலாம்.

“ரோபோ' பல் நோயாளி

ஜப்பானிய தலைநகர் டோக்கியோவிலுள்ள பல் மருத்துவமனையில் “ஹனாகோ ஷொவா' (Hanako Showa ) எனப் பெயரிடப்பட்ட பல் நோயாளி “ரோபோ' ஆசனமொன்றில் சாய்ந்திருப்பதையும் மாணவர் ஒருவர் மேற்படி பல் நோயாளி ரோபோவை பரிசோதிப்பதையும்  காணலாம்.

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

உலகின் முதலாவது இலத்திரனியல் கீழ் உள்ளாடையை தாம் உருவாக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய நிறுவனமொன்று நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
மேற்படி உள்ளாடையை அணிந்திருப்பவர் மலம் அல்லது சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகும் போது, அது எழுத்து வடிவ செய்தியை அவரைப் பராமரிப்பவருக்கு அனுப்பி வைக்கிறது.

மலையகத்தின் புதுமைப் பெண்

மலைநாட்டின் பெண் இனமே

வெளி

உலகம் அறியாத

கிணற்று தவளையா?

நீ!....

உயிர்த்தெழுகிறார் ராமராஜன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ராமராஜன் நாயகனாக நடிக்கும் படம் மேதை. இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மே மாதம் வெளியீடு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

பெண் ஊழியரை நிர்வாண ஸ்கேன் எடுத்த லண்டன் விமான நிலைய அதிகாரி

ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்க வைக்கப்பட்டுள்ள, பயணிகளை நிர்வாணமாக காட்டும் எக்ஸ்ரே பகுதிக்குள் நுழைந்த பெண் ஊழியர் ஒருவரின் உடல் பாகங்கள் குறித்து ஆபாசமாக கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அதிகாரி சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் பயணிகளை நிர்வாணமாகக் காட்டி பரிசோதிக்க உதவும் எக்ஸ்ரே இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?!


கடந்த சில தினங்களாக ஆந்திர சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுவது, எடுப்பான முன்னழகு வேண்டி சிலிக்கான் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆலோசனை பெற்று வருகிறார் இலியானா என்பதுதான்.

குறுகிய விதி

குளிர்ந்த சுவரோடு அவளை வைத்து அழுத்தி முத்தமிட்டான். உடல் விதிர்க்க அவள் முத்தங்களை வாங்கிக்கொண்டேயிருந்தாள். அது நடுநிசி என்று அவள் அறிந்தாலும் அவள் உடலை அவள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல இயலாத படிக்கு காமத்தழுவல் அவளை வலைவலையாகக் கட்டிப்போட்டிருந்தது என்பதை அவள் அறிவாள். அவள் உதடுகள் அர்த்தம் அறியா வார்த்தைகளை முனுமுனுத்துக்கொண்டேயிருந்தன.

சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்

லர்னகா விமான நிலையத்தில் வந்திறங்கும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்கள், கண்கள் நிறைய கனவுகளுடன் வருகின்றனர். தாயகத்தில் அவர்களின் வறுமையான குடும்ப பின்னணி, அவர்களை சைப்ரஸ் சென்றாவது திரவியம் தேடி வருமாறு நிர்ப்பந்தித்து இருக்கா விட்டால், “சைப்ரஸ்” என்ற நாட்டின் பெயரையே வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையில் தேசத்தின் பொருளாதாரத்தை உலகமயமாக்கியதன் விளைவு; ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் வளைகுடா நாடுகளுக்கும், பின்னர் சைப்பிரசுக்கும் ஏற்றுமதியானர்கள். சைப்பிரசின் நாணயமான பவுணின் உயர்ந்த பெறுமதியை, இலங்கை ரூபாய்க்கு பெருக்கி பார்த்து, அதனால் தாம் சம்பதிக்கப் போகும் தொகையை மனதுக்குள் நினைத்து பார்த்து மகிழும் பணிபெண்கள், தாம் சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர்.

பாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்

பாலியல் தொழில் பெண்ணுடலை மையப்படுத்தி உருவானதாகும். எந்தக் காலகட்டத்தில் எவ்வாறான சமூகமுறைமையில் உருவானது என்பது பற்றி எங்கல்ஸ் உட்பட இன்றைய பெண்ணிய மற்றும் சமூகவியல் அறிஞர்கள் பலரும் தத்தம் ஆய்வுகளின் வழியில் கருத்து முன்வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் வந்தடைந்துள்ள பொதுவான முடிவு, பெண்ணை ஆண் அடிமை படுத்தத் தொடங்கியதுடன், பெண்ணின் பாலியல் நடவடிக்கைகளின் மீதான ஆணாதிக்க சமூகத்தின் வரையறைகள் ஏற்படுத்தப்பட்டதுடனும், ஆணின் பாலியல் நலனை முதன்மைப்படுத்தத் தொடங்கியதனதும் விளைவாகத்தான் சமூகத்தில் பெண்களின் ஒரு சாரார் தமது பாலியல் ஆற்றலை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதாகும்.

ஒஸாமா பின் லாடன் மிரட்டல்

இரட்டை கோபுரத்தை தகர்த்த வழக்கின் முக்கிய குற்றவாளியை தூக்கில் போட முடிவு செய்தால், எங்களிடம் பிடிபடும் அமெரிக்கர்களுக்கு மரண தண்டனை அளிப்போம் என்று பின்லாடன் மிரட்டல் விடுத்துள்ளார்.

பார் டான்ஸர்களின் மறுபக்கம்

Photo: from the web
கோயில் திருவிழாக்களில், அரை இருள் சூழ்ந்த போதை நெடியடிக்கும் இரண்டாம் தர ஹோட்டல்களில் இந்தப் பெண்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்… மிதமிஞ்சிய ஒப்பனையும் கிளர்ச்சி ஊட்டுவதற்கென்ற அணியப்பட்ட உடைகளுடனும் இவர்கள் ஆடும் நடனத்தை. கேபரே டான்சர், டிஸ்கோ டான்சர் இன்னும் சில பல பெயர்களில் இவர்களை அழைக்கிறோம். இந்த நடனம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறதா அல்லது அறுவறுக்க வைக்கிறதா என்கிற தர்க்கம்தான் இவர்கள் குறித்து நாம் காட்டும் அதிகபட்ச அக்கறையாக இருக்கும்! நிதர்சனத்தில் இந்த நடனப்பெண்களின் வாழ்க்கை ஆழ்கடலில் திசைமாறிப்போன படகு போன்றது. கரை திரும்புவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது! இதோ அவர்களுடைய வாக்குமூலங்கள்தான் அதற்கு சாட்சி…

நான் கல்கி ஆனது எப்படி?

தன்னை உணர்ந்து நிரூபித்து, இந்தச் சமூகத்தின் பார்வையைத் திருத்தியவரின் கதை...

''நாங்கள் தேவதைகள் இல்லை. பிசாசுகளும் இல்லை. உங்கள் எல்லோரையும்போல இதயமும் இரைப்பையும் உள்ள மனிதர்கள். பசி, தூக்கம், கனவு, காதல், காமம், திறமை, தேடல், உழைப்பு, கருணை, காயம், கோபம், துக்கம், பெருமிதம் எல்லாம் எங்களுக்கும் உண்டு. நாங்களும் ஓர் அம்மாவின் வயிற்றில் இருந்துதான் பிறந்தோம், உங்களைப்போலவே!'' - செறிவான சொற்களில், திருத்தமான தமிழில் பேசுகிறார் கல்கி.

பாலியற் தொழில்; தொழிலா? அல்லது பெண்கள் மீதான வன்முறையா?

வளர்ந்தவர் ஒருவர் தனது உடலை / பாலியல் ஆற்றலை இன்னொரு வளர்ந்தவருக்கு காசுக்கு விற்பது பாலியல் தொழிலாகும். வளர்ந்தவர் இருவருக்கிடையில் நடைபெறும் பாலியல், பணம் (பொருள்) பரிமாற்றமாக பாலியல் வியாபாரத்தைக் கொள்ளலாம்.

'மதமாற்றம் தவறல்ல'

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காதலி போனியை மணக்கும் பிரகாஷ் ராஜ்!

மனைவி லலிதகுமாரியை சமீபத்தில் விவாகரத்து செய்த பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், தனது நீண்ட நாள் காதலி போனி வர்மாவை திருமணம் செய்கிறார்.

வளர்ப்பு நாய்க்கு ஒரு வருட திதி

இறந்து ஒரு வருடமான தமது வளர்ப்பு நாயின் ஆன்ம சாந்திக்காக திதி செய்தனர் ஒரு குடும்பத்தினர். இந்த அதிசய நிகழ்வு நாமேஸ்வரத்தில் நடைபெற்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல