வெள்ளி, 3 செப்டம்பர், 2010

கண்கள் குளமாகும்...

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு எந்த வகையிலும் குறையாத அளவிலேயே எமது மலையக குழந்தைகள் ‘வேலைக்காரப் பிள்ளைகள்’ என்று வேலைக்கு அமர்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர், படுகின்றனர். அவர்களின் வறுமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த கொடுமைகள் இலங்கையிலும் நடைபெறுகின்றன. இதன் அடிப்படையி லேயும் இக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. – சாகரன்

அமெரிக்காவில் அதிசயம் 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்!

Thomas Magill

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (Thomas Magill வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார்.

அமெரிக்காவுக்கு புதிய தலையிடியை ஏற்படுத்தியுள்ள `விகிலீக்ஸ்' இணையத்தளம்

அண்மையில் `விகிலீக்ஸ்' என்ற இணைய உளவு அறிக்கையிடல் நிறுவனம் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய தகவல்களை உள்ளடக்கிய 90000 இற்கும் மேற்பட்ட ஆவணங்களை வெளியிட்டது. இவ் ஆவணங்கள் அமெரிக்க இராணுவ வரலாற்றிலேயே மிகப்பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அமெரிக்காவின் இராணுவ இரகசிய தகவல்கள் கசிவுறுவதென்பது மிகவும் அரிதானதும் சாத்தியமற்றதுமாகும். இந்நிலையில் `விகி லீக்ஸ்' இணைய தளத்தினால் வெளியிட ப்பட்ட தகவல் ஆவணங்கள் அமெரிக்க இராணுவ தகவல்களின் இரகசியத் தன்மைக்கு ஏற்பட்ட பாரிய இழுக்கு என்றே கருதப்பட வேண்டும்.

உயிர் கொல்லியாக ஊடகம் மாறலாமா?

அண்மையில் சென்னைத் தலைநகரின் அருகில் உள்ள செங்குன்றத்தில் டி. மகேந்திரன் என்ற 10 வயது பாலகன் (மாணவன்) அடிக்கடி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பழக்கமுடையவன். கோயம்பேடு, பேரூந்து நிலையத்தில் தேநீர்க் கடை வைத்திருக்கும் அவன் தந்தை, "ஏம்பா, இப்படி அடிக்கடி டி.வி. பார்த்துக் கொண்டே இருக்கிறாய். படிக்க வேண்டாமா?" என்று சற்று கடிந்து கூறியிருக்கிறார்.

மிடுக்குடன் மீண்டெழுகிறது யாழ். உள்ளூர் பொருளாதாரம்

யாழ். குடா நாட்டிலுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் தற்போது கூடுதலான வருமானம் பெற்று வருகின்றனர். அங்குள்ள விவசாய மற்றும் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களுக்கு இன்றைய காலத்தில் சிறந்த சந்தை வாய்ப்புக் கிடைத்து வருவதனாலேயே உற்பத்தியாளர்களுக்கு இத்தகைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

வெற்றிக்கு வழி!

போராட்டம் நிறைந்த உலகில் மக்கள் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங் கொடுக்கின்றனர். குறிப்பாக நவீன உலகில் மிக முக்கிய சவாலாகக் காணப்படுவது, தோல்வியை எதிர்கொள்ள விரும்பாமையே. பலர் தோல்வியைக் கண்டதும் விரண்டோடுகின்றனர். இத் தோல்வி மனப்பாங்கானது அனைவரினதும் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அளவு பாதி ப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே மாறி யிருக்கின்றது.

நீங்கள் அடிக்கடி முரண்படுபவரா?

முரண்பாடு என்பது எல்லோருக்கும் பொதுவானது. இம்முரண்பாடுகள் எல்லா நேரங்களிலும் ஏற்படுகின்றன.

வீடுகளாக இருக்கட்டும் அல்லது பாடசாலையாக இருக்கட்டும் அல்லது நிர்வாகங்களாக இருக்கட்டும் அல்லது தொழில் செய்யும் இடங்களாக இருக்கட்டும்

என்ன மதம் எனக் கேட்டுவிட்டு கத்தியால் குத்திய அமெரிக்கர்

Michael Enright, 21

மதம் என்ன என்பதைக் கேட்டறிந்துவிட்டு முஸ்லிம் என்பது உறுதியானவுடன் வாகன ஓட்டுனர் ஒருவரை கத்தியால் குத்திக் காயத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

ஆணிகளால் அறையப்பட்ட ஆரியவதி...

தொடரும் பணிப் பெண்கள் மீதான கொடூரங்கள்

உயிருடன் பிறந்த பெண் குழந்தையை குழி தோண்டிப் புதைத்து விட்டு கூடி நின்று கும்மாளமடித்த காட்டு அறபிகள் கூட்டத்தினரின் வாரிசுகள் இன்னமும் இருப்பதைத்தான் சாட்சி பகர்கிறது ஆரியவதிக்கு இழைக்கப்பட்ட கொடுமை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல