ஞாயிறு, 25 மார்ச், 2012

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம். இந்த நிலை தமிழுக்கு இருக்கிறதா? என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் மட்டுமே தமிழ் பழமையான செம்மொழி அன்று என்று கூறிவிட முடியாது. இங்குக் கர் என்பார் கூற்று நினைத்தற்கு உரியது. அவர் “வீரயுகத்தில் காப்பியம் மட்டுமே எழ வேண்டும் என்ற நியதி இல்லை. பல மொழிகளில் ஹோமரின் இலியத், ஒதீசி போன்ற காவியங்களுக்குப் பதிலாக, கதை எதுவும் இன்றித் தங்கள் தங்கள் நாட்டுச் சிற்றரசர்களையும் தலைவர்களையும் பாராட்டிப் பாடும் பாடல்கள் எழுந்துள்ளன” என்கிறார். சங்க இலக்கியமான புறநானூறும், பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டில் பல பாடல்களும் இத்தகைய வீரயுகப் பாடல்கள்தாம். சீன மொழியிலும் இத்தகைய உதிரிப் பாடல்களே வீரயுகத்தில் எழுந்துள்ளன.

XP கம்பியூட்டரில்

விண்டோஸ் எக்ஸ்பி கம்பியூட்டரில் சில கேம்ஸ் விளையாடிய பின்னர், கம்ப்யூட்டரின் கலர் ஸ்கீம் மாறிவிடுவதை அவதானித்து இருப்பீர்கள். கேம்ஸ் விளையாடி முடித்த பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் வகையில் கேம்ஸ் வடிவமைத்தவர்கள் செட் செய்திருக்க மாட்டார்கள். அதனால் தான் இந்த மாறுதலான சூழ்நிலை ஏற்படுகிறது.

வேகமாக இணையத்தில் உலாவ

இணையப் பயன்பாடு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டிய ஓர் அம்சமாக நம் வாழ்க்கை முறை மாறி வருகிறது. எதனை வேண்டுமானாலும், இணையம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம், தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே இணைய இயக்கம் எந்த அளவிற்கு வேகமாக இருக்க முடியுமோ, அந்த அளவு வேகத்தினை நாம் விரும்புகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் பிரவுசரில் இணைய தளங்கள் மிக வேகமாக இறங்கி, இயக்க தயாராக இருக்க வேண்டும் எனவே விரும்புகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட டேப்களில் இணைய தளங்களைத் திறந்து வைத்து, அவை அனைத்தும் குறிப்பிட்ட தளங்களைக் காட்ட வேண்டும் எனவே எதிர்பார்க்கின்றனர். இது சாத்தியமா? சாத்தியமோ இல்லையோ, சில ட்யூனிங் தந்திரங்களைக் கையாண்டால், நிச்சயம் ஓரளவிற்கு கூடுதலான வேகத்தில் இணைய அனுபவம் கிடைத்திடுவதனைக் காணலாம். அந்த நடவடிக்கைகளை இங்கு பட்டியலிடலாம்.

எக்ஸெல் COMBIN பார்முலா

எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏன், இது எதற்கு என்றே பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் இருந்திருக்கலாம். தேவை ஏற்படும் போது நாம் இதனைத் தேடி அறிந்து கொள்வோம். இதனை இங்கு காணலாம்.

எக்ஸெல் டிப்ஸ்

ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்

எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க்ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க்ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.

வேர்டில் டேபிளுக்கு ஆட்டோ பிட்

நாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவை களுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும். இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள AutoFit என்பதுதான். உங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு வரிசைக் கட்டத்திலும் சிறிய அளவில் டேட்டா வைத்திருந்தால், இந்த வசதி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனைப் பயன்படுத்தக் கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.

மாறா நிலையில் பிரவுசர் எதற்காக?

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்தே இன்டர் நெட் எக்ஸ்புளோரரும் தரப்படுகிறது. அது டிபால்ட் பிரவுசராகப் பதியப்படுகிறது. ஆனால் அதனைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. எந்த பிற பிரவுசரையும் நாம் டவுண்லோட் செய்து அதனையே நம் மாறாத பிரவுசராகப் செட் செய்து பயன்படுத்தலாம். இவ்வகையில் பயர்பாக்ஸ், ஆப்பரா, நெட்ஸ்கேப் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. இவை தவிர இன்னும் பல தளங்களும் உள்ளன. இவற்றை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், அந்த பிரவுசரை எப்படி டிபால்ட் பிரவுசராக செட் செய்வது என்று பார்க்கலாம்.

பட்டியலை டேபிள் ஆக்க

வேர்ட் ஆவணங்களில், பட்டியல்கள் தகவல்களைத் தருவதில் நல்ல வடிவை மேற்கொண்டுள்ளன. ஆனால் இவையே ஒரு டேபிளாக அமையுமானால், இன்னும் நல்ல முறையில் தகவல்களைக் காட்டும் வகை புலப்படும். பட்டியல் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை அப்படியே டேபிள் ஆக மாற்ற முடியுமா? முடியும் என வேர்ட் அதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. எளிதான அந்த வழிகளை இங்கு காணலாம்.

கூகுள் தேடல் டிப்ஸ்

கூகுள் தேடல் சாதனமே இன்று, உலகில் அனைவரும் விரும்பிப் பயன் படுத்தப்படும் தேடல் சாதனமாக இயங்கி வருகிறது. மிகக் குறைந்த நேரத்தில், இணையத்தில் இருக்கும் தளங்கள் அனைத்தையும் தேடி, நமக்குத் தேவையான தளங்களின் பட்டியல் தொகுப்பைத் தருவதில், கூகுள் தேடல் சாதனத்தை மிஞ்ச எதுவுமில்லை. இந்த தளத்தில் நம் தேடலை வழக்கமாக மேற்கொள்ளாமல், தேடலை செம்மைப் படுத்தினால், கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.

தனக்குத் தானே சவப்பெட்டி தயாரித்த முதியவர் (படங்கள்)

அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் வசிப்பவர் பிரெட் குயின்ரிட். தற்போது 89 வயதாகும் அவர் தபால் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பண்டைக்கால எகிப்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்துக்கு சுற்றுப் பயணம் செய்து பல்வேறு இடங்களை பார்வையிட்டார். அங்குள்ள நல்லடக்கம் செய்யும் முறைகள் அவருக்கு பிடித்து விட்டதால் தன்னுடைய மறைவுக்கு பிறகும் அதை பின்பற்ற தீர்மானித்தார்.

அமெரிக்காவின் இன்னொரு அதிரடி

இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்று அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படவுள்ளது. இலங்கை மீதான தனது பிடியை இறுக்கும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நட வடிக்கையாக இந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு வருகிறது.

க.பொ.த. சா/ த பரீட்சை முடிவுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. www.doenets.lk என்ற இணைய முகவரியில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும். கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் EXAME என டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் உங்கள் பரீட்சை சுட்டிலக்கத்தை டைப் செய்து 7777 என்ற இலக்கத்திற்கு எஸ.எம்.எம். செய்வதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலை மீண்டும் செய்துள்ளது இந்தியா!

வழமையாக இந்தியா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் செயலைச் செய்யும். அதனையே இந்த விடயத்திலும் செய்திருக்கிறது. இரண்டு பேரையும் திருப்திப்படுத்துகின்ற வேலையை இந்தியா செய்திருக்கிறது. இதனை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சர்வதேசத்தில் கவனிக்கும் ஒரு விடயமாக தமிழரின் பிரச்சினை சென்றிருக்கிறது என்பது மாத்திரமே தற்போதைய நிலையில் முக்கிய விடயமாகுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு எதிராக கோவாவில் மொட்டை அடித்து போராட்டம்!

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், கோவையில் நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது.

அனுமன் சேனா அமைப்பை சேர்ந்த 50 பேர் அதன் நிறுவன தலைவர் ஸ்ரீதர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ஆகியோர் தலைமையில் கோவை பேரூரில் உள்ள படித்துறைக்கு வந்தனர்.

ஆயுதம் தாங்காத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விட்டு கொடுப்பிற்கு தயார் இல்லை

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை, இலங்கை வந்துள்ள கனடிய பாராளுமன்ற குழுவினர் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இடம் பெற்றது.

இச்சந்திப்பில் கிரிஸ் அலெக்சாண்டர், ரிக் டிஸ்ட்ரா, வேர்ன் வைட், ஜோன் லைட் ஆகிய கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டு மச்சானுக்காகவே தம்பியை எதிர்த்தார் அக்கா

இலங்கையின் மூத்த சகோதரியான இந்தியா, இலங்கை மீது அன்பு இல்லை என்ற காரணத்துக்காக அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. தமிழ் நாட்டு மச்சானுடன் இருக்கும் திருமண பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே ஆதரவு வழங்கியது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர்- நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்!

யுத்தத்தின் போது பெரும்பாலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம்

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்கு மாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும்.

அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா - விஜயகாந்த்

"அமெரிக்க தீர்மானம் நீர் - மோர் என்றால், இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போக செய்துவிட்டது. இலங்கை குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பட வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாக கருதுகிற அணுகுமுறையையே, இந்திய அரசு மேற்கொண்டுள்ளது'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

வரலாற்றில் மிகப்பெரிய தவறாக அமையும்-அமெரிக்காவுக்கு காஸ்ட்ரோ எச்சரிக்கை

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால் தனது வரலாற்றிலேயே அமெரிக்கா செய்யும் மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும் என்று கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிரான்மா நாளிதழில் இது குறித்து கட்டுரை யொன்றை காஸ்ட்ரோ எழுதியுள்ளார். அக்கட்டுரையில் அவர் எழுதியுள்ள விபரம் வருமாறு :

மறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம்

“ ஈராயிரமாண்டு இலக்கிய வரலாறு கொண்ட நம் தமிழ் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் எப்படியெல்லாம் புதிய நரம்புகளுக்கு ரத்தம் பாய்சுகின்றதென்பதைத் திளைத்துத் திளைத்து - சுவைத்துச் சுவைத்து - மகிழ்ந்து மகிழ்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து புல்லரிக்கும் உச்சரிப்பில் நீங்கள் சொல்லெடுத்துச் சொன்னபோது நாம் மீண்டும் ஒரு கல்லூரி மாணவனாய்க் கற்கத் தொடங்கினேன். எந்திர உலகத்திற்குத் தமிழைக் கொண்டு சேர்த்த மந்திரநிகழ்ச்சி உங்கள் பொதிகைத் தென்றல். காலங் காலமாய்த் தமிழ்க்காத்த கவிஞர் பரம்பரையின் கடைக்குட்டி என்ற முறையில் உங்களுக்கு நான் நாத்தழுதழுக்க நன்றிசொல்கின்றேன்.

இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது - தினமணி ஆசிரியர் தலையங்கம்

உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான தினமணி தனது ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

அத்தலையங்கத்தின் முழுவிபரமாவது,

உச்ச நிலையிலிருந்த போர் வெற்றி அச்ச நிலைக்கு வந்திருக்கும் பரிதாபம்

படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி வாசிக்கவும்

இனிமேலும் ஏமாற்ற முனைந்தால் கசப்பான பாடங்களைக் கற்கநேரிடும்

படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி வாசிக்கவும்

பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் ........

படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி வாசிக்கவும்

இந்தியா எடுத்த முடிவை இலங்கை அர்சு ஏற்குமா?

படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி வாசிக்கவும்

பரிந்துரைகளை வழிநடத்த முன் வருமா அரசு?

படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி வாசிக்கவும்

அமெரிக்கப் பிரேரணை உள்ளக ஜனநாயக சக்திகளுக்கு உதவப்போவதில்லை

படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி வாசிக்கவும்

அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவு, அடுத்து வருவது என்ன?

படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி வாசிக்கவும்


About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல