புதன், 20 மார்ச், 2013

புத்த பிக்குகள் மீதான தாக்குதல்: கொழும்புவில் இந்திய தமிழர்கள், வர்த்தகர்கள் பதட்டம்!

தமிழகத்தில் புத்த துறவிகள் தாக்கப்பட்ட விவகாரம், இலங்கையின் சில பகுதிகளில் சீரியஸ் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை டி.வி. சேனல்களில் இது தொடர்பாக காண்பிக்கப்படும் கிளிப்பிங்ஸ், மற்றும் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளன என தெரியவருகிறது.

கருணாநிதி திடீரென வாள் வீசிய பின்னணி இலங்கை அல்ல, வேறு கதை இருக்கு கண்ணா!

கருணாநிதி மத்திய அரசுக்கு எதிராக வாளை வீசியது ஏன் என்பது தொடர்பாக, தி.மு.க.-வின் ஒரு சர்க்கிளில் சில பேச்சுக்கள் உள்ளன. மூன்று அமைச்சர்களும் வந்து பேசிவிட்டு போனபின், அரசில் இருந்து வெளியேறுவது என்ற நினைப்பில் கருணாநிதி இல்லை.

பைல் எக்ஸ்டன்ஷன் என்பது என்ன?

கம்ப்யூட்டர் பைல் பெயர்களுடன், பைலின் தன்மை குறித்த கூடுதல் தகவல்களைத் தரும் வகையில் அமைக்கப்படுவதே பைல் எக்ஸ்டன்ஷன் பெயர் ஆகும். இவை ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் போது, பைலின் தன்மை மற்றும் வடிவமைப்பு குறித்து கூறுகளைக் காட்டும். இதனை அறிந்தே, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எந்த புரோகிராமில் இந்த பைலைத் திறப்பது என்பதனை அறிந்து உடன் திறக்கும். .txt என இருந்தால் அதனை நோட்பேடிலும், doc என இருந்தால் மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராமிலும், exe என இருந்தால் அதனை அப்ளிகேஷன் புரோகிராம் என அறிந்து அந்த வகையிலும் திறக்கும்.

கார்ட்டூன் போட்டோ

கதை மாந்தர்களைச் சித்திரங்களாக வைத்து, சிறுவர்களுக்குக் கதைகள் வந்தது ஒரு காலம். பின்னர், அனைத்து வகைக் கதைகளுமே சித்திரங்களுடன் வந்தன. அவை பேசுவதை கட்டங்கள், நீர்க்குமிழிகள் என அமைத்து அவற்றில் காட்டப்பட்டன.  இவற்றைப் பார்க்கையில், படிக்கையில், நாமும், நம் போட்டோக்களில், நாம் விரும்பும் வாசகத்தை இதே போல நீர்க்குமிழிகளில் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணலாம்.

பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு

பிரவுசர் வழியே இணையம் தேடுகையில், நாம் செல்லும் தடங்கள் அனைத்தும் பதியப்படுகின்றன. அவை நம் கம்ப்யூட்டரில், நமக்கு இணைய சேவை வழங்கும் நிறுவன சர்வர்களில் இருப்ப தால், மற்றவர்களும் அதனைக் காணும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுத்து நம் இணையத் தேடல்களை நாம் மட்டுமே கொள்ளும் வகையில் அந்தரங்கமாக இருக்கவே பல வழிகளைப் பிரவுசர்கள் தருகின்றன. பிரைவேட் பிரவுசிங், இன் காக்னிடோ, டோன்ட் ட்ரேக் மி என இந்த வழிகள் அழைக்கப்படுகின்றன. இருந்தாலும் நமக்கு நம் வழிகளை யாரும் அறிந்து கொள்ளாமல் இருக்க இன்னும் சில பாதுகாப்பு வழிகளை அமைக்கலாமே என்று தோன்றும்.

வேர்ட் டிப்ஸ்

இப்படியும் டேபிள்

வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க என்ன செய்கிறீர்கள்? டேபிள் மெனு சென்று இன்ஸர்ட் டேபிள் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து பின் தகவல்களை அதில் டைப் செய்திட வேண்டும்.

ஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்

எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், மின்சக்தி இல்லாமல், கம்ப்யூட்டர் முடங்கும் காலத்தில், அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடைவெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.

விண்டோஸ் 8: சந்தேகத் தளிர்களும் விளக்கங்களும்

முற்றிலும் மாறுபட்ட இயக்கத்துடன் வந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற்று வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டமே போதும் என ஒதுங்கியவர்களும், இதன் பயன்பாடுகளில் பலவற்றை விரும்பி, முழுமையாக இதற்கு மாறி வருகின்றனர். பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, அதற்கு மாறுவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில தகவல் துளிகள் இங்கு தரப்படுகின்றன.

போட்டோ மிக்ஸ்

போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. இவற்றுடன், இன்னும் நம் கற்பனைக்குத் தீனி போடும் வகையில், இந்த போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம் கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக் கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம்.

குரோம் பிரவுசர் ட்ரிக்ஸ்

சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது. லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.

புளு ரே டிஸ்க் என அழைக்கப்படுவது எது?

புளு ரே டிஸ்க் என்பதுவும், சிடி, டிவிடி போல டேட்டா சேமித்து பதிய வைக்கும் ஓர் ஊடகமாகும். சிடியைத் தொடர்ந்து டிவிடி அறிமுகமாகிப் பிரபலம் ஆன பின்னர், டிவிடிக்கும் மேலாக புளு ரே அறிமுகமானது.

விண்டோஸ் 8 சிஸ்டம் Start

விண்டோஸ் 8 முதலில் வேகமாக பூட் ஆகி வந்த சிஸ்டம், இப்போது தொடங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனைச் சரி செய்திட எளிய வழி, டாஸ்க் மானேஜரை திறந்து, ஸ்டார்ட் அப் டேப்பினைக் கிளிக் செய்து, அதில் உள்ள புரோகிராம்களைக் காண்பதுதான்.

தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்லாஷ் கோடுகள் (Forward slash backslash)

யு.ஆர்.எல். மற்றும் கம்ப்யூட்டருக்கான கட்டளை வரிகளில் ஏன் இரண்டு வகையான சாய்வு கோடுகள், முன்புறமாக, பின்புறமாக (Forward slash backslash) எனப் பயன்படுத்துகிறோம். ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தினால் தவறு எனக் கருதப்படுகிறதே ஏன்?

முதல் இருபது இணைய தளங்கள்

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம்.

20.Amazon.com:

ஆடியோ பைல்களை எடிட் செய்திடச் சிறந்த புரோகிராம்

ஆடியோ பைல்களை எடிட் செய்வதற்கும், அவற்றின் பார்மட்களை மாற்று வதற்கும் பல புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஐந்து புரோகிராம்களை இங்கு குறிப்பிடுகிறேன்.

விண்டோக்களைக் கையாளும் வழிகள்

பெர்சனல் கம்ப்யூட்டரில் பணியாற்று கையில், நிறைய விண்டோக்களைத் திறந்து வைத்து செயல்படுவது நம் வழக்கமாகி விட்டது. இது நம் வேலைத் திறனை ஓரளவிற்குப் பாதிக்கவும் செய்திடலாம். பல வேளைகளில், நாம் பணியாற்றும் விண்டோ தவிர மற்றவற்றை மூடுவது நமக்கு நல்லதாகிறது. ஒரு விண்டோவினை மட்டும் திறந்து வைத்து செயல்படுவது நமக்கும் எளிதாகிறது. விண்டோஸ் 7 இதற்கான சில வழிகளைக் கொண்டுள்ளது. இந்த வழிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் செயல்பாடு, நாம் செயல்படும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் சுருக்கி வைப்பது. இரண்டாவது அனைத்து விண்டோக்களையும் சுருக்கி வைப்பது.

1. ஏரோ ஷேக் (Aero Shake):

எம்.எஸ். பெயிண்ட் புரோகிராம்!

படங்களை வரைய, போட்டோ பைல்களைத் திறந்து பார்க்க, போட்டோ மற்றும் படங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டத்துடன் தரும் பெயிண்ட் புரோகிராம் உதவுகிறது. நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள் தரப்படுகின்றன.

கிராப்பர் - ஸ்கிரீன் ஷாட் புரோகிராம்

தேவைப்படும் திரைக் காட்சிப் பகுதிகளை மட்டும் காப்பி செய்து, காப்பி செய்யப்பட்ட பகுதிகளைத் தேவையான இடத்தில் ஒட்டிக் கொள்ளும் வசதியையும், மேலும் பல கூடுதல் வசதிகளையும் தருகிறது கிராப்பர் என்னும் ஸ்கிரீன் ஷாட் புரோகிராம்.

எக்ஸெல் டிப்ஸ்

எண் கோடு பிரிண்ட் செய்திட

எக்ஸெல் ஒர்க் ஷீட்டினைப் பிரிண்ட் செய்திடுகையில் வரிசைகளில் தரப்பட்டுள்ள எண்கள், எழுத்துக்கள் மற்றும் குறுக்கு நெடுக்காகச் செல்லும் கோடுகளையும் சேர்த்து பிரிண்ட் செய்தால் நன்றாக இருக்குமே என்று பிரியப்படுகிறீர்களா! தாராளமாக இவற்றையும் அச்சிடலாம். அதற்கான செட்டிங்ஸ் வழிமுறை களைப் பார்ப்போம்.

இணையதளம் இறங்குகையில் சிக்கல்

இணைய இணைப்பு பெற்று, சில தளங்களை நாம் காண்பதற்கு முகவரி அமைத்து இயக்கியவுடன், சில நொடிகளில் அந்த தளங்கள் நம் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்பட்டால், நாம் அத்தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால், அந்த தளம் நமக்குக் கிடைக்காமல், சில வேளை களில் பிழைச் செய்திகள் காட்டப்படும். ஒவ்வொரு பிரவுசரும் இந்த பிழைச் செய்திகளை ஒருவித அமைப்பில் காட்டலாம். இருப்பினும் அவை தரும் தகவல்கள் பொதுவானதாகவே இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. சான்றிதழ் பிழை (certificate error):

புதிய வகை டிக்ஷனரி

பொதுவாக டிக்ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப்படும்; அல்லது ஒரு மொழி சொல்லுக்கு இன்னொரு மொழி சொல் மற்றும் விளக்கம் அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் தமிழ் அகராதியில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தரப்பட்டு, இலக்கணக் குறிப்புகளுடன் விளக்கம் கிடைக்கும்.

வேர்டில் எண் எழுதும் முறை

வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. “He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் “He ate seven biscuits,” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.

விண்டோஸ் 7ல் கார்ட் ரீடர் போன்ற காலியாக உள்ள ட்ரைவ்கள் காட்ட

இதனைக் காட்டும்படி சில மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். இந்த பட்டனுக்கு மேலாக உள்ள சர்ச் பாக்ஸில் Change Search Options என டைப் செய்திடவும்.

ஆப் (App) என்பதற்கும் விட்ஜெட் (Widget) என்பதற்கும் உள்ள வேறுபாடு

எடுத்துக் காட்டாக, சீதேஷ்ண நிலையைக் காட்டும் விட்ஜெட் (weather widget) அப்போதைய சீதோஷ்ணநிலையைக் காட்டிக் கொண்டிருக்கும். நீங்கள் அதில் டேப் செய்தால் தான், மேலும் பல விபரங்களைக் காட்டும்.

விட்ஜெட் என்பது உங்கள் மொபைல் போனின் திரையில் தங்கி, எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். இதனால், அதனை ஜஸ்ட் ஒரு பார்வை பார்த்து நீங்கள் அது தரும் தகவலைப் பெறலாம்.

விண்டோஸ் 8 ல் Shutdown and Restart

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், நேரடியாக Shutdown and Restart டைல்ஸ்களை அமைத்துப் பயன்படுத்த ஓர் எளிய வழி ஸ்டார்ட் மெனுவில், C:\ProgramData\Microsoft\ Windows\Start Menu\Programs என்பதில், shutdown.exe கட்டளைக்கு ஷார்ட்கட் ஏற்படுத்துவது தான்.

முதலில் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், New Shortcut என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இமெயில் பார்வேர்ட் டிப்ஸ்

நண்பர்களிடமிருந்து நமக்கு வந்த இமெயில் செய்திகளைப் பலமுறை நம்முடைய மற்ற நண்பர்களுக்கு நாம் அனுப்புவோம். ஆங்கிலத்தில் இதனை பார்வேர்ட் (Forward) செய்தல் என்கிறோம். நாம் விரும்பு வதெல்லாம், அந்த செய்தி நம் நண்பர்கள் அனைவருக்கும், அல்லது குறிப்பிட்ட சிலருக்குச் செல்ல வேண்டும் என்பதே. ஆனால், நம்முடைய நல்ல எண்ணத்தில், செய்திகளை அது வந்த நிலையில், அது குப்பையாக இருந்தாலும், அப்படியே அனுப்பிவிடுகிறோம். இது தவறான செய்கையாகும்.
ஒரு மின்னஞ்சல் செய்தியினை, மற்றவர் களுக்கு பார்வேர்ட் செய்திடும் முன்னர், பல வேலைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த அஞ்சல் செய்தி, நல்ல வடிவத்தில், சிறப்பானதாக அமைந்திடும். என்ன என்ன நடவடிக்கைகளை அப்போது மேற்கொள்ள வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

1. குறியீடுகளை நீக்குக:

ஸ்பேம் (spam) மற்றும் ஸ்கேம் (scam) ற்கிடையே உள்ள அடிப்படை வேறுபாடு

ஆங்கில அகராதி ஒன்றில் முதலில் இதற்கு விளக்கம் தேடினேன். ஸ்கேம் (scam) என்பதை மோசடி அல்லது செயலின் உண்மைத் தன்மையை மறைக்கின்ற வேலை என்று தரப்பட்டுள்ளது. இது நவீன தொழில் நுட்பம் நமக்குக் கிடைக்கும் முன்னரே தரப்பட்ட விளக்கம். சில வர்த்தகர்கள் இதனையே தங்கள் தொழிலின் அடிப்படையாகக் கொண்டு இயங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. தொழில் நுட்பம் பெருகிய பின்னர், இந்த சொல், புதிய பொருளைக் கொண்டதாக ஆகிவிட்டது.

விண்டோஸ் 8ல் யு.இ.எப்.ஐ. (UEFI)

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத் தினைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிந்து இயக்குபவர்களும், புதியதாக இந்த சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்துபவர்களும், இதில் உள்ள யு.இ.எப்.ஐ. (UEFI) என்னும் அப்ளிகேஷன் குறித்து கேள்வி எழுப்பி கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். அது குறித்து இங்கு காணலாம்.

ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும்

கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம். இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன.

எக்ஸெல் தரும் வியூ வசதி

சில நேரங்களில் எக்ஸெல் தொகுப்பில் மிகப் பெரிய பைலை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். நாம் விரும்பும் செல்லுக்குச் செல்ல "அங்கிட்டும் இங்கிட்டும்' அலைந்து கொண்டிருப்போம். இதனால் எந்த செல்லை நாம் எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதே மறந்துவிடும். இதனால் “Go To” வசதியைக் கூட பயன்படுத்த இயலாமல் போய்விடும். இந்த மாதிரி செல்களுக்கு இடையே செல்வது மட்டுமின்றி சில வேளைகளில் புதிய செல்களுக்குச் செல்கையில் எந்த செல்களை எல்லாம் பிரிண்ட் செய்திட வேண்டும் என்பதிலும் பிரிண்ட் செட்டிங்ஸ் அமைப்பதிலும் பில்டர்களை உருவாக்குவதிலும் நாம் குழப்பம் அடையலாம்.

ஜிமெயிலில் சேமிப்புக் கிடங்கு!

மற்ற இமெயில் புரோகிராம் களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும் காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் வாசகர்களும் உள்ளனர். இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.

ஆர்வமூட்டும் இன்டர்நெட் தகவல்கள்

உலக அளவில் எத்தனை சதவிகிதம் பேர் இன்டர்நெட்டில் உலா வருகிறார்கள்? எந்த நாட்டிலிருந்து அதிகமான எண்ணிக்கையில் அதன் மக்கள் இன்டர்நெட்டில் தேடுகிறார்கள்? இன்னும் எத்தனை நாடுகளுக்கு இன்டர்நெட் வசதி கிடைக்கவில்லை? இது போன்ற தகவல்களை, இது குறித்து ஆய்வு நடத்தி வரும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த தகவல்கள் நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலேயே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

வேர்ட் டிப்ஸ்

டெக்ஸ்ட்டுடன் விதம் விதமாய் கோடுகள்:

வேர்டில் நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் இடை இடையே அழகாய்க் கோடுகளை அமைத்துப் பார்க்கலாம். இந்த கோடுகளை அமைக்கப் பல சுருக்கு வழிகளை நமக்கு வேர்ட் தொகுப்பு தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பல கோடுகளை மிகவும் அழகாக அமைக்கலாம். இன்னொரு சிறப்பு இவற்றை அமைத்திட பல சுருக்கு வழிகள் இருப்பதுதான்.

விண்டோஸ் 7: ஷார்ட் கட் வழிகள்

கீ போர்டு ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.

H: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக் கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.

I: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.

முடங்கிப் போகும் விண்டோஸ் இயக்கம்

விண்டோஸ் இயக்கம் நாம் எதிர்பாராத நேரங்களில், தொடர்ந்து இயங்க முடியாமல், முடங்கிப் போகும் வாய்ப்புகள் சில வேளைகளில் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பொதுவாகக் குற்றம் சாட்ட முடியாது. வேறு பல காரணங்களாலும் இது ஏற்படலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.மெமரி மதர்போர்ட் பிரச்னை:

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான ட்ராப் பாக்ஸ்

ட்ராப் பாக்ஸ் பயன்படுத்திப் பழகிய அனைவரும், விண்டோஸ் 8க்கு மாறிய பின்னர், இந்த சிஸ்டத்திற்கேற்ற வகையிலான ட்ராப் பாக்ஸ் எப்போது கிடைக்கும் எனக் காத்திருந்தனர்.

உங்கள் காத்திருப்புக்கு பதில் கிடைத்துவிட்டது. விண்டோஸ் 8க்கான ட்ராப் பாக்ஸ், அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுவிட்டது.

விண்டோஸ் 8 சிஸ்டம் நேரம்

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் காட்டப்படும் கம்ப்யூட்டர் நேரம் தவறாக உள்ளது. இதனை எப்படித் திருத்தி அமைப்பது?

விண்டோஸ் 8 சிஸ்டம் நேரம் என்னவென்று காட்ட, இன்டர்நெட் தொடர்புள்ள “time server” ஒன்றைத் தொடர்பு கொண்டு காட்டும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. தவறான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், காட்டப்படும் நேரம் தவறாக இருக்கலாம்.

கொரில்லா கிளாஸ் 3

உங்களிடம் ஸ்மார்ட் போன், லேப்டாப் அல்லது போர்ட்டபிள் மீடியா பிளேயர் என ஏதாவது ஒன்றை வைத்திருந்தால், கொரில்லா கிளாஸ் என்னும் ஸ்கிரீனைக் கொண்டிருப்பீர்கள். இது என்ன பெயர்? கொரில்லா குரங்குக்கும், ஸ்கிரீன் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதா?

வேர்ட் டிப்ஸ்

பாரா தொடக்க இடைவெளி

வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம்.

விண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பேக் அப் வசதிக்கு புதிய சில டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. File History மற்றும் Refresh என்னும் பேக் அப் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பேக் அப் டூல்ஸ்களுக்குப் பதிலாகத் தரப்பட்டுள்ளது.

ஜாவா எச்சரிக்கை

இன்டர்நெட் பயன்படுத்துவோருக்கு புதிய ஜாவா எச்சரிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஜாவா இயக்கத்தில், கண்டறியப்பட்ட புதிய பிழையான குறியீடு மூலம், ஹேக்கர்கள், நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து, நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை தொலைவில் இருந்தே இயக்கவும் முடக்கவும் முடியும்.
அண்மையில் ஜாவா சாப்ட்வேர் சிஸ்டத்தில் இந்த பிழையான குறியீடு கண்டறியப்பட்டது. இணையத்தில் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் பிளக் இன் புரோகிராம்கள் உருவாக்க, ஜாவா பயன்படுத்தப்பட்டு வருகிறது. முழுமையாக அப்டேட் செய்யப்பட்ட ஜாவா புரோகிராம் இயக்கத்தில் கூட இந்த பிழை உள்ளதாகவும், இதனால், ஜாவா பயன்பாடு என்பதே தயக்கத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடாக இருப்பதாகவும் பலர் கூறி உள்ளனர்.

விண்டோஸ் 8ல் பி.ஓ.பி. மெயில் கிடைக்குமா?

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் மெயில் புரோகிராம், பி.ஓ.பி. மெயில் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்வதில்லை. ஏனென்றால், விண்டோஸ் 8 சிஸ்டம் எந்த இடத்திலும், எந்த சாதனத்தின் மூலமும் (பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், டேப்ளட் பிசி) மெயில்களைக் கையாளும் வசதியைத் தர இலக்கு கொண்டு தயாரிக்கப்பட்டது. அப்படியானால், விண்டோஸ் 8ல் பி.ஓ.பி. மெயில் கிடைக்க என்ன செய்திட வேண்டும்?

பிரைவேட் பிரவுசிங் என்ற வழி எதற்காக?

இணையம் வழியாக, இப்போதெல்லாம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முடிகிறது. ட்ரெயின், பஸ் டிக்கட் வாங்குவது, எலக்ட்ரிசிட்டி, டெலிபோன் பில் கட்டுவது, பொருட்கள் வாங்குவது என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன?

பல நேரங்களில், நாம் இணைய தளங்களிலிருந்து கோப்புகளை, படங்களை, அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்க கோப்புகளை டவுண்லோட் செய்கிறோம்.
தரவிறக்கம் செய்திடும் முன் அதன் அளவு என்ன என்பது நமக்குக் காட்டப்படுவதில்லை. இறக்கிக் கொள்ள கட்டளை கொடுத்த பின்னரே, இந்த தகவல்கள் கிடைக்கின்றன. பைல் அளவு, நொடிக்கு எத்தனை பைட்ஸ், முழுவதுமாக இறங்க எவ்வளவு நேரம் ஆகும் என்ற குறிப்புகள் கிடைக்கும்.

போல்டர் டிப்ஸ்

போல்டர் வியூ:

எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப்படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (Default) போல்டராக அமைந்துவிடும்.

விண்டோஸ் 7 செயல் குறிப்புகள்

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்கள் வரத் தொடங்கினாலும், தொடு திரை இல்லாத விண்டோஸ் 8 வேண்டாம் எனப் பலர் எண்ணுகின்றனர். இன்னும் பலர், நாம் முழுமையாகப் பயன்படுத்தாத விண்டோஸ் 7 சிஸ்டத்தையே தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று அதன் வசதிகளைக் குறித்து டிப்ஸ்களைக் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில செயல் குறிப்புகளும், வசதிகள் குறித்த விளக்கங்களும் இங்கு தரப்படுகின்றன.

1. சிஸ்டத்தின் நிலை என்ன?:

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஸ்டார்ட் மெனு

ஸ்டார்ட் மெனு போனது போனதுதான். உங்களுக்கு அது கட்டாயம் தேவை என்ற ஆசை இருந்தால், தர்ட் பார்ட்டி தரும் ஸ்டார்ட் மெனு பயன்பாட்டு புரோகிராம்களைப் பயன்படுத்துங்கள்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பேஸ்புக் அக்கவுண்ட்டினை இணைத்துப் பயன்படுத்த

எப்படி பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்டை விண்டோஸ் 8ல் பதிந்து தொடர்வது எனப் பார்க்கலாம்.

விண்டோஸ் 8ல் காணப்படும் ஒரு புதிய வசதி People hub என்பதாகும். இதன் மூலம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் நேரடியாக உள்ளீடு செய்திடலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ்

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முற்றிலும் மாறானது, கூடுதல் வசதிகளைக் கொண்டது, விலையும் நியாயமானது என்ற எண்ணம் கம்ப்யூட்டர் வாங்குவோரிடம் விண்டோஸ் 8 ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய சில வாரங்கள், விண்டோஸ் 8, அதன் பயனாளர்களிடையே சற்று தடுமாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அவற்றைப் போக்கும் வகையிலான பயனுள்ள சில குறிப்புகளை இங்கு காணலாம்.


1. அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒழுங்கு படுத்த:

பைல் சுருக்கம்

கம்ப்யூட்டரில் பைல்களைக் கையாள்கையில், அவற்றைச் சுருக்குகிறோம். இதனால் அவற்றின் தன்மை கெடாமல், டிஸ்க்கில் அது பதிவதற்கான இடம் குறைவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் பைல் ஒன்றை மின்னஞ்சலில் அனுப்புவது, பிளாஷ் ட்ரைவில் பதிவதும் எளிதாகிறது. பைல்களைச் சுருக்கி அமைப்பதில் பலவகைத் தொழில் நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் பயனாளர்களிடையே பிரபலமாக இருப்பவை விண்ஸிப், விண் ஆர்.ஏ.ஆர் மற்றும் 7-ஸிப் (WinZip, WinRAR, 7Zip) ஆகியவைதான். இவற்றில் எது, எந்த வகையில் சிறப்பானது எனப் பார்க்கலாம்.

கூகுள் மெயில்: சில தேடல் வழிகள்

கூகுள் தரும் ஜிமெயிலில் உள்ள கடிதங்களில், பல வேளைகளில் நாம் சில மெயில்களைத் தேடிப் பெற வேண்டியதிருக்கும். குறிப்பிட்ட நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற மெயில்கள், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்கள், சில சொற்கள் அடங்கிய மெயில்கள், சில தலைப்புகளில் வந்த மெயில்கள் எனப் பலவகைகளில் நாம் தேடலை மேற்கொண்டு தகவல் விடைகளைப் பெற முயற்சிப்போம். நாம் தேடுகையில் அதற்கான பல வரையறைச் சொற்களைப் பயன்படுத்தி, நம் தேடல்களின் முடிவுகளை விரைவாகப் பெறலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

விண்டோஸ் 8ல் விண்டோஸ் டிபண்டர் (Windows Defender) புரோகிராம் இயங்கவில்லை

விண்டோஸ் டிபண்டர் உங்கள் சிஸ்டத்துடன் தரப்பட்டுள்ளது. ஆனால், இயங்கவிடாமல் செட் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். இதனை சிஸ்டத்துடன் தந்தால், தங்களின் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் மக்கள் மத்தியில் விற்பனையாகாமல் போய்விடும் என்பதால், இந்த புரோகிராம்களைத் தயாரித்து விற்பனை செய்திடும் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்தன.

புழக்கத்தில் உள்ள பல்வேறு பைல்களின் பார்மட் (format) மாற்ற

இணையத்தில் பல தளங்கள் இயங்குகின்றன. இதில் நான் பரிந்துரைப்பது http://www.convertfiles.com/ என்ற முகவரியில் இயங்கும் தளம் தான்.

இந்த தளத்திற்குச் சென்று, நீங்கள் பார்மட் மாற்ற விரும்பும் பைலை, பிரவுஸ் பட்டன் அழுத்தி கிளிக் செய்திடவும். அது வேர்ட் டாகுமெண்ட் பைலாக இருக்கலாம்.

செயலற்றுப் போகும் இணையம்

இணையத்தில் உலா வருகையில், பல வேளைகளில், பார்க்கின்ற தளம் அப்படியே உறைந்து போகலாம். சில வேளைகளில் அதற்கான எர்ரர் செய்தி கிடைக்கும். பல வேளைகளில் எதுவும் காட்டப்படமலேயே தளம் தொடர்ந்து இயங்காது. இது போன்ற நிலைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி வாசகர்கள் கேட்கும் “Session Expired” என்ற பிரச்னை குறித்துப் பார்க்கலாம். இந்த செய்தி கிடைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


1. செயலற்ற தன்மை:

Fresh Paint நீங்களே திரையில் வரையலாம்

பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்படும் துணை புரோகிராம்கள் அனைத்தும், விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படையிலேயே இயங்கும். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டம் தான் இயங்கும் வகையில் புதிய, முற்றிலும் மாறுபட்ட மாற்றத்தினைக் கொண்டு வந்ததால், அனைத்து புரோகிராம்களும் புதிய சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன் படுத்துகின்றனவா எனத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு முழுமையாகப் பயன்படுத்தும் ஓர் அருமையான புரோகிராம் Fresh Paint.

ஜிமெயில் பேக் அப்

ஜிமெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல