சனி, 8 ஜனவரி, 2011

புலிகள் விசேடமாக வடிவமைத்த துப்பாக்கியை காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்!

யுத்த காலத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரி 56 ரக துப்பாக்கியொன்றை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த தபால் ஊழியர் ஒருவர் தெவிநுவர பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நாடு என்ன சும்மாவா? 350 வெளிநாட்டுப் பிரஜைகள் அரசியல் தஞ்சம்

350 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் தஞ்சம் மற்றும் புகலிடம் கோரி 350 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்குள் பிரவேசித்திருப்பதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

வரலாற்றில் 07.01.2010

1610: கலிலியோ கலிலி ஜூபிட்டர் கிரகத்தின் நான்கு பெரிய சந்திரன்களை முதல் தடவையாக அவதானித்தார்.

1782: அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கியான அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

அம்பாறையில் 15 வயது சிறுவன் கடந்த 4 நாட்களாக மாயம்

அம்பாறை, திருக்கோவில், வினாயகபுரத்தில் 15 வயது பாடசாலை மாணவன் கடந்த 2ஆம் திகதி மாலை காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

`ஹரிபொட்டர்' கதாசிரியைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

`ஹரிபொட்டர்' கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 7 நாவல்கள் எழுதி புகழ்பெற்றவர், ஜே.கே.ரவுலிங். இவரது 4-வது நாவலான `ஹரிபொட்டர் அண்ட் தி கோப்லட் ஆப் பயர்', மறைந்த எழுத்தாளர் அட்ரியன் ஜேக்கப்ஸ் எழுதிய `வில்லி தி விசார்ட்' என்ற நூலை காப்பியடித்து எழுதப்பட்டதாக, அட்ரியன் ஜேக்கப்சின் குடும்பத்தினர் நியுயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ஷிரா ஷென்ட்லின் நேற்று தள்ளுபடி செய்தார். இரு கதைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், அவற்றை ஒப்பிடுவது தவறு என்றும் நீதிபதி கூறினார்.

ஆண்களின் ஆடைகளை தேர்வு செய்யும் பெண்கள்

பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கான ஆடைகளை தேர்வு செய்வதற்கு பெண்களின் உதவியை நாடுகின்றனர் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உலகின் மிகப்பெரிய நகை தொழிற்சாலை சவுதியில்

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா இந்தாண்டின் இறுதிக்குள் புதிய நகை தொழிற்சாலையை அமைக்க உள்ளது என அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயுதம் ஏந்திய கைகளில் மரக்கறி

இராணுவ முகாம்களின் அருகே உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக மரக்கறி வகைகளை பெற்று அதனை நுகேகொடை சந்தையில் இராணுவத்தினர் விற்பனை செய்துள்ளனர். மரக்கறி வகைகளின் விலையினை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழில். கலாச்சார சீர்கேடு பெண்கள் கவரிங் நகை அணியவும் - நெவில்

யாழ்ப்பாணத்தில் இன்று புதியதொரு கலாச்சாரம் காணப்படுகின்றது. இளைஞர்கள் காதில் தோடு போடுவது மற்றும் தலைமயிர் வளர்ப்பது உட்பட பல்வேறு கலாச்சார சீர்கேடுகளையும் காணக் கூடியதாகவுள்ளதென யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரிவித்துள்ளது.

லசந்த நினைவு நாள்

இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும், வழக்கறிஞருமான லசந்த விக்ரமதுங்க ஜனவரி 8, 2009 அன்று இனந்தெரியாக ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காந்தியை பாதித்த புத்தகம் வெளியாகி 150 ஆண்டு நிறைவு

மகாத்மா காந்தியை பெரிதும் பாதித்த புத்தகமான ‘அன்டூ திஸ்லாஸ்ட், வெளியிடப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

‘2010ல் 2011’ பிரித்தானிய நாணயத்தில் பிழை

பிரித்தானிய நாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 50 பென்ஸ் நாணயத்தில் 2011 ஆம் ஆண்டு அச்சாகியிருந்ததை மாணவி ஒருவர் கண்டுபிடித்தார்.

புலிகளின் குரல் வானொலிக்குக் கருவிகள் வழங்கியது எப்படி - விக்கிலீக்ஸ் வெளியிடுகிறது

2002ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலிகளின் குரல் வானொலிச் சேவைக்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய நோர்வேயிடம் உதவி கோரியதாக விக்கலீக்ஸ் தளத்தினை ஆதாரமாகக் காட்டி நோர்வேயின் அப்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல