செவ்வாய், 27 நவம்பர், 2012

கொட்டாவி விடும் கருவில் உள்ள சிசு

கருவில் உள்ள குழந்தை சிரிக்கும், உதைக்கும், கொட்டாவி கூட விடும். கருவில் இருக்கும் சிசு கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டு மலைக்க வைத்துள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.

சிசுவாக நாம் கருவில் இருக்கும் போது என்னவெல்லாம் செய்வது என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அது குறித்த புதிய வெளிச்சத்தைப் போட்டுக் காட்டியுள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.

சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கதி என்ன? இணையத்தில் கையெழுத்து இயக்கம்

இலங்கை இறுதிப் போரின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான பேபி சுப்பிரமணியம், லாரன்ஸ் திலகர், புதுவை ரத்தினதுரை உளிட்டோரின் கதி என்ன என்பது குறித்து அறிவதற்காக இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

1950களில் நிலவை அணுகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்ட அமெரிக்கா

1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க 'புராஜெக்ட் ஏ119' என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.

துப்பாக்கி படம் பார்க்க சென்று தியேட்டரில் ரகளை செய்த நடிகை புவனேஸ்வரி கைது!!!

சென்னை அருகே டிரைவ் இன் தியேட்டருக்கு வந்த கவர்ச்சி நடிகையும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக முன்பு கைது செய்யப்பட்டவருமான புவனேஸ்வரியும், அவரது ஆட்களும் பெரும் ரகளையில் ஈடுபட்டு தியேட்டரை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டனர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கைத் தொடர்ந்து தப்பி ஓட முயன்ற புவனேஸ்வரியை போலீஸார் ஆம்பூர் அருகே கைது செய்துள்ளனர்.

கொழும்பு மாவட்ட ( கச்சேரி ) செயலக கட்டிடத்தில் தீ- ஆவணங்கள் எரிந்து சாம்பலானது!

கொழும்பு புறக்கோட்டை டாம் வீதியில் உள்ள கொழும்பு மாவட்ட செயலக கட்டிடத்தில் நேற்று இரவு 8மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கட்டிடத்தில் தீபற்றி எரிந்துள்ளதால் அங்கிருந்த ஆவணங்கள் அனைத்தும் முற்றாக எரிந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

'காணாமல் போனோருக்கான காத்திருப்புக்கள்' (பாகம் 2)

 
மீண்டு(ம்) வருவீரோ.......? (பாகம் 2)

தமிழ் நாட்டின் தர்மபுரியில் கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு என்று சாதி வெறியாட்டத்தில் இறங்கிய ராமதாஸின் வன்னியர் அமைப்பு தலித் சமூகத்தின் மீது வன்முறையை ஏவிவிட்டது. இதனால் பல நூறு குடிசைகள் தீக்கிரையாயின. ஈழத்த தமிழர்களைப் பார்த்து மீண்டு(ம்) (எழுந்து) வருவீரோ......? என்று 'வீர' கீதம் பாடிய ராமதாஸ் கோஸ்டியினரே இந்தக் கொடுமையை முன்னின்று நடத்தினர்;. இதில் பல மனித உறவுகள் தீக்கு இரையாயின. இவர்களை தேடி இந்த வன்முறைக்கு எதிராக திரண்ட மக்களும் தமது உறவுகளை தேடி மீண்டு(ம்) வருவீரோ.......? என்ற சோக கீதங்களுக்கு மத்தியில் ராமதாஸின் வன்னியர் சங்க வன்முறையாளரை எச்சரிக்கும் முகமாக மீண்டு(ம்) வருவீரோ.... நீங்கள் என்று எழுச்சி கொள்ளல் வேண்டும், இதற்கான ஆதரவுகளை யாம் யாபேரும் வழங்க வேண்டும்.

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த காதல் ஜோடி போலீசில் தஞ்சம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் 74 குடும்பங்களை சேர்ந்த 240 பேர் வசித்து வருகின்றனர். முகாமை சேர்ந்த சுகில்ராஜ் மகன் சரண்ராஜ் (எ) சுமன் (23) முகாமில் வசிக்கும் சுஜாதா (21) என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் சுஜாதாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், சுஜாதாவை சிவகங்கை பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த சுஜாதா ஒரு வாரத்துக்கு முன்பு தப்பிவந்தார்.

60 தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் நாடு திரும்பினர்!

சவூதி அரேபியாவில் நிர்கதி நிலைக்குள்ளாகியும் சிறையில் அடைக்கப்பட்டும் இருந்த 60 தமிழ் , முஸ்லிம் ,சிங்கள இளைஞர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல