திங்கள், 13 செப்டம்பர், 2010

ஒரே வீட்டில் 10 ஓநாய்களுடன் வாழும் காதல் ஜோடி (படங்கள் இணைப்பு)

ஒரே வீட்டில் 10 ஓநாய்களுடன் நபரொருவரும் அவரது காதலியும் வாழ்ந்து வரும் அதிசய சம்பவம் அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அண்மையிலுள்ள ஸ்ரூடியோ சிற்றியில் இடம் பெற்றுள்ளது.

மாமிச ஆடை அணிந்து வந்த பொப் இசைப் பாடகி 8 விருதுகள் சுவீகரிப்பு (படங்கள் இணைப்பு)

அமெரிக்க லொஸ் ஏஞ்சல் நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற எம்..வி. வீடியோ இசை விருது வழங்கும் வைபவத்திற்கு இறைச்சியிலான ஆடை அணிகலன்களை அணிந்து வந்து உலகப் பிரபல பொப் இசைப் பாடகி லேடி ககா பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தினார்.

வீடியோ விளையாட்டு மோகத்தால் பிள்ளைகளையும் நாய்களையும் பராமரிக்க மறந்த பெண் கைது

இணையத்தள வீடியோ விளையாட்டில் இருந்த மோகத்தால் தனது பிள்ளைகளை அலட்சியம் செய்ததுடன் தனது இரு நாய்களையும் பட்டினியால் பரிதாப மரணத்தை தழுவவைத்த தாயொருவருக்கு இணையத்தளத்தை பயன்படுத்த பிரித்தானிய நீதிபதியொருவர் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மனித முகத்துடன் மீன்!

பிரித்தானியாவின் டெஹன்ஹாம் பிராந்தியத்தின் எஸ்ஸெக்ஸ் பகுதியில் மனித தலையுடன் அதிசய மீன் ஒன்று இனம்காணப்பட்டிருக்கிறது.

இரண்டு பிரபலங்களின் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

உலகின் மிகவும் குள்ளமான நபரான கஜேந்திரா தாபா மாகர், உலகிலேயே மிகவும் பெரிய புஜத் தசைகளைக் கொண்ட மனிதரான 28 வயதான லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட டினி ஐரோனை சந்தித்துள்ளார்.

விபசாரத்துக்கு அரச அங்கீகாரம்

பங்களாதேஷில் விபசாரத்தொழிலுக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த தொழில் செய்யும் பெண்களுக்கு அந்த நாட்டு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர் அடையாள அட்டை கொடுத்துள்ளது. அதில் அவர்களின் தொழில் விபசாரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒசமா பின்லேடன் பேரப் பிள்ளைகளை சுமந்த வாடகைத் தாய் மீது தாக்குதல்

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் ஒமர் பின்லேடனின் குழந்தைகளை சுமந்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த வாடகைத் தாய் மீது சிலர் திடீர் தாக்குதல் நடத்தியதில் அவரது கர்ப்பம் கலைந்து வயிற்றில் வளர்ந்து வந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்து விட்டன.

தயா மாஸ்டருக்கு சிங்கள டி.வி. நிலையத்தில் வேலை: விசுவாசியாக மாறியதற்காக பல லட்சம் அன்பளிப்பு.(அதுபற்றிய முழு விபரம் ஆங்கிலத்தில்)

Sections of Daya Master’s Rs. 5 mn home coming up in Point Pedro and Daya Master

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் வேலாயுதம் தயாநிதி என்கிற தயா மாஸ்டர். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு என்ற தினசரி பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்தவர்.

குமரன் பத்மநாதன், தன்னார்வ தொண்டு நிறுவனம் எதனையும் நிறுவவில்லை ‐ அரசாங்கம்!

புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், தன்னார்வ தொண்டு நிறுவனம் எதனையும் நிறுவவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.

முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு கணணி தொழில்நுடபப் பயிர்ச்சி!

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு 3டீ,ஒரோகெட் பயிர்ச்சிகளை வளங்கி அவர்களின் தொழில்நுட்ப அறிவையும் திறனையும் மேன்படுத்த புனர்வாழ்வு நாயகம் இப்பயிர்ச்சி வகுப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

யாழில் இன்று பார்வதியம்மாவை பார்வையிட்ட பழ நெடுமாறனின் விசேட பிரதிநிதி!

வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை உலகத் தமிழர் பேரவையின் செயலாளரான இராமசாமி பத்மநாபன் இன்று காலையில் சென்று பார்வையிட்டார்.

பிராவை கழற்ற நிர்ப்பந்திக்கப்படுவதாக பெண் சட்டத்தரணிகள் புகார்

பெல்ஜியத்திலுள்ள பெண் சட்டத்தரணிகள், தாம்  தங்களது கட்சிக்காரர்களைப் பார்வையிடுவதற்காக சிறைச்சாலைக்குச் செல்லும்போது தமது பிராவை கழற்றிவிட்டுச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுவதாக புகாரிட்டுள்ளனர்.

குஷ்பு கழுத்தில் பிளாஸ்டிக் தாலி!

பேஷன் என்ற பெயரில் ருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை கோர்த்து நடிகை குஷ்பு அணிந்திருக்கிறார். நடிகை குஷ்புவின் கணவரும், டைரக்டர் கம் நடிகருமான சுந்தர் சி நடித்திருக்கும் புதிய படம் நகரம்.

உலகிலேயே மிகப் பெய சொக்லேட்

224 அங்குல நீளம் 110 அங்குல அகலமும் 10 அங்குல தடிப்புடைய உலகிலேயே மிகப் பெரிய சொக்லேட்டை தயாரித்து ஆர்மேனிய இனிப்பு உற்பத்தி நிறுவனமொன்று சனிக்கிழமை சாதனை படைத்துள்ளது.

இருதய இயக்கம் நின்று ஒரு மணி நேரம் கழித்து உயிர் பிழைத்த பாலகன்

பனியால் உறைந்திருந்த நீருக்குள் விழுந்து இதயம் செயலிழந்த பாலகன் ஒருவன் ஒரு மணி நேரத்தின் பின் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்த சம்பவம் அமெரிக்க கொலராடோ மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.
கோர் ஒட்டேஸன் என்ற இந்த 21 மாத வயதான பாலகன் நீர்ப்பாசன நீர் தாங்கியொன்றில் விழுந்து 25 நிமி டங்களின் பின்பு மீட்கப் பட்டான்.

முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம்

காலை உணவு வேளையில் ஏற்பட்ட விவாதத்தின் போது நபரொருவர் தனது மனைவி, வளர்ப்பு மகள் உட்பட ஐவரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கென்டக்கியிலுள்ள ஜக்ஸன் எனும் இடத்தில் வசிக்கும் ஸ்டான்லி நீஸ் ( Stanley Neace 47 வயது) என்ற இந்த நபர், சம்பவ தினம் காலை உணவின் போது தனக்கு வழங்கப்பட்ட முட்டைகள் சூடாக இல்லை என குறிப்பிட்டு தனது மனைவியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

விமான நிலைய மலசலகூடத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தை (படங்கள் இணைப்பு)

பிலிப்பைன்ஸின் நினோய் அகினோ (Ninoy Aquino International Airport) சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கிய “கல்ப் எயார்' விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மலசலகூட குப்பைக் கூடையிலிருந்து புதிதாக பிறந்த ஆண் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

55 வேறுபட்ட தாய்மாருக்கு பிறந்த 55 பிள்ளைகளுக்கு நானே தந்தை

55 வேறுபட்ட தாய்மார் மூலம் 55 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளதாக பதிவுசெய்து கொண்ட நபரொருவரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலியான தகவல்களை வழங்கி வெளிநாட்டு சட்டவிரோத குடியேற்றவாசிகள் வதிவிட உரிமை வழங்க உதவும் வகையில் பாரிஸை சேர்ந்த மேற்படி நபர் (54 வயது) மோசடி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல