திங்கள், 25 மார்ச், 2013

ஐ போனில் கூகுள் மேப்ஸ்

ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் Apple’s iOS 6 Maps வழங்கிய பின்னர், பல்வேறு பிரச்னைகளையும், வாடிக்கையாளர்களிடமிருந்து மோசமான பின்னூட்டுக்களையும் பெற்றது. இந்த பிரச்னையிலிருந்து, ஆப்பிள் நிறுவனத்தைக் காப்பாற்றும் வகையில், தன் கூகுள் மேப்ஸ் வசதியை கூகுள் மீண்டும் அளித்துள்ளது. இந்த அப்ளிகேஷன் தற்போது ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. ஐபோன் 3 ஜிஎஸ் மற்றும் அதன் பின்னர் வந்த ஐ.ஓ.எஸ். சிஸ்டங்கள் கொண்ட ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஐபேட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்

புதியதாக ஐபேட் அல்லது ஐபேட் மினி வாங்கியிருக்கிறீர்களா? அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பயன்படுத்திப் பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதன் பயன்பாடு, அந்த ஐபேட் அல்லது மினி ஐபேடில் அவ்வளவு சிறப்பாக, பல்முனையாக இருப்பதில்லை. அதில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தான் அதன் பயனை பல மடங்கு உயர்த்துகின்றன. எந்த அளவிற்கு அதிக அப்ளிகேஷன் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிந்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு ஐ பேட் அதிகப் பயனுள்ளதாகத் தெரியும். எனவே, ஐபேட் ஒன்றில், நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களை இங்கு காணலாம்.

சரியான அளவில் டேபிள் செல்கள்

வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும் நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன் அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது. பின் அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட ரூலரில் சென்று மவுஸ் இடது பக்கம் அழுத்தி இழுத்து மாற்றி அமைக்கிறோம். ரூலர் இருந்தாலும் கட்டம் ஒன்றின் அகலம் எவ்வளவு எனச் சரியாகத் தெரிவதில்லை.

வேர்ட் டிப்ஸ்: பெரிய எழுத்து சொற்களில் சோதனை

ஆங்கிலத்தில் கேப்பிடல் லெட்டர்ஸ் என்று சொல்லப்படும் பெரிய எழுத்துக்களை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். வேர்ட் டாகுமெண்ட்டில் இவற்றில் எழுத்துப் பிழை உள்ளதா என சோதனை செய்யப்படுவதில்லை. இவற்றையும் ஸ்பெல்லிங் சோதனைக்கு உட்படுத்த கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

ரோமன் எண்கள் பெற

நாம் சில எண்களை ரோமன் எண்களாக எழுத வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக, V Std, Chapter VIII என எழுதுவோம். குறைந்த மதிப்பிலான எண்களுக்கு, ரோமன் எண்களை அமைக்கலாம். மிகப் பெரிய மதிப்பிலான எண்களுக்கு ரோமன் எண்களை எதிலிருந்து பெறுவது? அகராதியில் கூட அனைத்து எண்களையும் ரோமன் எண்களாக அமைக்கும் வழிகள் தரப்படவில்லை. இங்கு நமக்கு கூகுள் தேடு தளம் உதவுகிறது. எந்த எண்ணுக்கு ரோமன் எண் வேண்டுமோ, அந்த எண்ணை எழுதி “in Roman Numerals” என அமைத்தால் போதும். உடனே நாம் தந்த எண்ணுக்கான ரோமன் எண் தரப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

வேகமாக டாஸ்க் மேனேஜர் பெற

நம் வசத்திற்கு வராமல், இயங்கவும் செய்யாமல், மூடவும் முடியாமல், திரையில் அப்படியே உறைந்து நிற்கும் புரோகிராம்களை, மூடுவதற்கு விண்டோஸ் டாஸ்க் மானேஜர் உதவுகிறது. அத்துடன், கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள் எவை, மெமரி எந்த அளவிற்கு ஒவ்வொரு புரோகிராமாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதனை நமக்கு டாஸ்க் மேனேஜர் காட்டுகிறது. இந்த டாஸ்க் மானேஜரைப் பெற வழக்கமாக கண்ட்ரோல் + ஆல்ட்+ டெல் கீகளை அழுத்துவோம்.

பலூன், பாப் அப், டூல் டிப்ஸ்

இதற்கு ஏன் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இவை குறிப்பிடும் டிப்ஸ்களின் தன்மையில் வேறுபாடுகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.
ஒரு ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்கையில், அந்த ஐகான் பற்றியோ அல்லது அது பிரதிபலிக்கும் புரோகிராம் குறித்தோ காட்டப்படும், ஒவ்வொரு சிறிய டெக்ஸ்ட் அடங்கிய பெட்டியும், அந்த பெட்டியில் என்ன வகையான செய்தியாக இருந்தாலும், அதன் பெயர் ஸ்கிரீன் டிப்(screen tip)என்பதாகும். யாராவது ஒருவர், ஏன் அனைத்தையும் ஸ்கிரீன் டிப் என அழைக்க வேண்டும் என எண்ணி, இவை வேறுபடும் சிறிய தன்மையின் அடிப்படையில் புதிய பெயர் அளித்திருக்க வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக இங்கு பார்க்கலாம்.

உலகை அணைக்க உதவும் கரங்கள்

உங்களின் நண்பர்கள், உறவினர்கள் எங்கு இருந்தாலும் சரி, அவர்களுடன் நினைத்த நேரத்தில் டெக்ஸ்ட் மூலம், எந்தவிதக் கட்டணமும் இன்றி உரையாட விரும்புகிறீர்களா? நட்பின் பாலத்தை இறுக்கமாகப் பிணைக்க எந்த கயிறு நமக்கு இலவசமாகக் கிடைக்கும் என்று தேடுகிறீர்களா? உங்களுக்கு உதவத்தான் WhatsApp என்ற அப்ளிகேஷன் உள்ளது.

இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள்


இந்த ஆண்டில் நமக்கு உறுதியாகத் தொடர்ந்து கிடைக்க இருக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்து இங்கு காணலாம்.

Fresh Paint நீங்களே திரையில் வரையலாம்

பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்படும் துணை புரோகிராம்கள் அனைத்தும், விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படையிலேயே இயங்கும். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டம் தான் இயங்கும் வகையில் புதிய, முற்றிலும் மாறுபட்ட மாற்றத்தினைக் கொண்டு வந்ததால், அனைத்து புரோகிராம்களும் புதிய சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன் படுத்துகின்றனவா எனத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு முழுமையாகப் பயன்படுத்தும் ஓர் அருமையான புரோகிராம் Fresh Paint.

கூகுள் அடுத்து என்ன?

கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த பத்தாண்டு பாதையில் அதன் இமாலய வெற்றியைப் பார்க்கையில், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்நிறுவனம் என்ன செய்திடுமோ என்று வியக்க வேண்டியுள்ளது. அதன் சாதனைகளையும் அடுத்து என்ன செய்திடும் எனவும் இங்கு பார்க்கலாம்.

ஜிமெயில் பேக் அப்

ஜிமெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.

இணைய தளம் ஒன்றுக்கும், அதனைக் காட்டும் யு.ஆர்.எல்.க்கும் உள்ள தொடர்பு

ஓர் இணைய தளம் எந்த சர்வரில் உள்ளது என்பதை அந்த சர்வரின் பெயர், தன்மையைக் காட்டுவதே அதன் யு.ஆர்.எல். இணைய தளம் என்பது ஒரு வீடு என்றால் அதன் அஞ்சல் முகவரி தான் யு.ஆர்.எல்.

விண்டோஸ் 8 ல் விண்டோஸ் டிபண்டர் (Windows Defender) புரோகிராம் இயங்க

விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் விண்டோஸ் டிபண்டர் உங்கள் சிஸ்டத்துடன் தரப்பட்டுள்ளது. ஆனால், இயங்கவிடாமல் செட் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். இதனை சிஸ்டத்துடன் தந்தால், தங்களின் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் மக்கள் மத்தியில் விற்பனையாகாமல் போய்விடும் என்பதால், இந்த புரோகிராம்களைத் தயாரித்து விற்பனை செய்திடும் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்தன.

பட பைலை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்க முடியுமா?

எந்த பைலையும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறந்து படிக்கலாம் . ஒரு பைலை அதன் புரோகிராம் மூலம் திறப்பதற்கான நேரத்தைக் காட்டிலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் குறைவான நேரத்தில் திறந்துவிடலாம்.

பாப் அப் விண்டோ வராமல் தடுக்க

டெஸ்க் டாப்பில் பைல்கள் அதிகம் உள்ளன. இவற்றைக் கிளீன் செய்திடவா என்று கேட்கும் பாப் அப் விண்டோ வராமல் தடுக்க இதோ, அதற்கான வழி.

விண்டோஸ் 8ல் பிரிண்ட் ஸ்கிரீன், ஸ்கிரீன் ஷாட்

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இந்த வசதி சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்பு, ஸ்கிரீன் ஷாட் எடுக்க விண்டோஸ் கீயுடன் PrtScn கீயை அழுத்தி, கிளிப் போர்டில் சேவ் செய்யப்படும் இமேஜை, பெயிண்ட் போன்ற இமேஜ் கையாளும் புரோகிராமில் பேஸ்ட் செய்து பைலாக மாற்றி, விருப்பப்படும் பார்மட்டில் சேவ் செய்தீர்கள்.

தற்போது இந்த வேலையை விண்டோஸ் 8 செய்கிறது. நீங்கள் விண்டோஸ் மற்றும் PrtScn கீயினை அழுத்தினால் போதும். திரைக் காட்சி பைலாக, My Pictures\Screenshot போல்டரில் சேவ் செய்யப்படுகிறது.

இது PNG பார்மட்டில் சேவ் செய்யப்படும். உங்களுக்கு வேறு பார்மட்டில் தேவை எனில், பின்னர் மாற்றிக் கொள்ளலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கம்ப்யூட்டரைப்பற்றி அறிந்துகொள்ள

புதிதாகக் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கியவுடன், அவற்றில் உள்ள பாகங்கள், துணை கூடுதல் உறுப்புகள், செயல் திறன், அடிப்படை செயல்பாட்டிற்கான ஹார்ட்வேர் உறுப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள கம்ப்யூட்டரை திறந்து பார்த்தாலும், அதன் முக்கிய கூடுதல் அம்சங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியாது.

கம்ப்யூட்டரில் உள்ள ப்ராசசர் எப்படி இருக்க வேண்டும்?

டுஅல் கோர் (dual core) / குவாட் கோர் (quad core) என இருக்க வேண்டும். ஆனால், இதற்கான பதில், நீங்கள் என்ன பணிகளுக்காக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் திட்டமிடுகிறீர்கள் என்பதைப் பொருத்தது.

மின்னஞ்சல் பார்க்க, வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ஏதேனும் சிறிய அளவில் ஹோம் ஒர்க் செய்திட, எப்போதாவது யு ட்யூப் வீடியோ பார்க்க என்றால், டுஅல் கோர் போதும். கிராபிக்ஸ், அனிமேஷன், எச்.டி. மூவி பார்த்தல், கேம்ஸ் விளையாடுதல் எனில், உங்கள் பயன்பாடு எளிதாகவும், அதிக மகிழ்ச்சியைத் தருவதாகவும் அமைய குவாட் கோர் ப்ராசசர் இருந்தால் நல்லது.
Share |
Image Hosted by ImageShack.us

வேர்டில் டெக்ஸ்ட் டைப்

வேர்டில் ஒரு சொல்லை டைப் செய்திடுகையில் அதன் பின் புலத்தில் பல வேலைகள் நடைபெறும். சொல்லின் எழுத்துக்கள் சரியாக அமைகின்றனவா என்று ஒரு சோதனை நடைபெறும்.

Yes -Yes to All மற்றும் No -No to All பட்டன்கள்

சில வேளைகளில் பைல்களை ஒரு போல்டரிலிருந்து இன்னொன்றுக்கு கொப்பி செய்கையில், அதே பெயரில் ஒரு பைல் இருந்தால், பைலின் பெயரைக் காட்டி, கொப்பி செய்யப்படும் பைலை மேலாகவே எழுதவா? என்று கேட்கிறது.

பைல்களை உங்களுக்குகந்த பார்மட்டில் மாற்ற

பல தளங்கள் இயங்குகின்றன. இதில் நான் பரிந்துரைப்பது http://www.convertfiles.com/ என்ற முகவரியில் இயங்கும் தளம் தான்.

கட் (Cut) டெலீட் (Delete)

கட் (Cut) டெலீட் (Delete) ஆகிய இரண்டு கட்டளைகளும் ஒரே பணியைத் தானே மேற்கொள்கின்றன. இதில் வேறுபாடு உள்ளதா?

பிரைவேட் பிரவுசிங் எதற்காக?

இணையம் வழியாக, இப்போதெல்லாம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முடிகிறது. ட்ரெயின், பஸ் டிக்கட் வாங்குவது, எலக்ட்ரிசிட்டி, டெலிபோன் பில் கட்டுவது, பொருட்கள் வாங்குவது என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

கட், டெலீட், பேக் ஸ்பேஸ்

டெக்ஸ்ட் எடிட்டிங் செய்கையில் நாம் கட், டெலீட், பேக் ஸ்பேஸ் என ஒரே மாதிரியான கட்டளைகளைப் பயன்படுத்துகிறோம். இவை செயல்படுவதில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா?

கேம்ஸ்களை நீக்க

புதிய கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு தரப்பட்டுள்ள கேம்ஸ் வேண்டாம் என நீக்க விரும்பினால் Start>Control Panel செல்லவும். பின் Programs and Features என்பதில் டபுள் கிளிக் செய்திடவும்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஸ்டார்ட் மெனு தேவை

ஸ்டார்ட் மெனு போனது போனதுதான். இனி மேல் அதனைத் திரும்ப தரும் எண்ணமெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இல்லை. உங்களுக்கு அது கட்டாயம் தேவை என்ற ஆசை இருந்தால், தர்ட் பார்ட்டி தரும் ஸ்டார்ட் மெனு பயன்பாட்டு புரோகிராம்களைப் பயன்படுத்துங்கள்.

சாய்வு கோடுகள்

யு.ஆர்.எல். மற்றும் கம்ப்யூட்டருக்கான கட்டளை வரிகளில் இரண்டு வகையான சாய்வு கோடுகள், முன்புறமாக, பின்புறமாக (Forward slash backslash) எனப் பயன்படுத்துகிறோம். ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தினால் தவறு எனக் கருதப்படுகிறது.

விண்டோஸ் 8ல் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்

விண்டோஸ் 8ல் காணப்படும் ஒரு புதிய வசதி People hub என்பதாகும். இதன் மூலம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் நேரடியாக உள்ளீடு செய்திடலாம். அது மட்டுமின்றி, உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என தனி டைல் உருவாக்கலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ்

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முற்றிலும் மாறானது, கூடுதல் வசதிகளைக் கொண்டது, விலையும் நியாயமானது என்ற எண்ணம் கம்ப்யூட்டர் வாங்குவோரிடம் விண்டோஸ் 8 ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய சில வாரங்கள், விண்டோஸ் 8, அதன் பயனாளர்களிடையே சற்று தடுமாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அவற்றைப் போக்கும் வகையிலான பயனுள்ள சில குறிப்புகளை இங்கு காணலாம்.

10 ஜிபி பைல் அஞ்சலில் அனுப்பலாம்

இணையத்தின் வழி பைல் அனுப்புவதில் இதுவரை இருந்த தடையை, கூகுள் உடைத்தெறிந்துள்ளது. 10 ஜிபி அளவு உள்ள பைலையும் தன் கூகுள் ட்ரைவிலிருந்து , ஜிமெயில் மூலம் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளது. இது வழக்கமாக அஞ்சல் வழி தற்போது அனுப்பப்படும் பைலைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாகும். ஜிமெயிலில், கூகுள் ட்ரைவில் உள்ள பைலை, அது 10 ஜிபிக்குள் உள்ளவரையில் அனுப்பலாம் என கூகுள் அறிவித்துள்ளது. புதிய மெயில் கம்போஸ் விண்டோ பயன்படுத்துபவர்கள், இந்த அறிவிப்பினைப் பெற்றிருக்கலாம். இது குறித்து மேலும் அறிய விரும்புபவர்கள் http://gmailblog.blogspot.de/2012/11/gmail-and-drive-new-way-to-send-files.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கூகுள் மெயில்: சில தேடல் வழிகள்

கூகுள் தரும் ஜிமெயிலில் உள்ள கடிதங்களில், பல வேளைகளில் நாம் சில மெயில்களைத் தேடிப் பெற வேண்டியதிருக்கும். குறிப்பிட்ட நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற மெயில்கள், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்கள், சில சொற்கள் அடங்கிய மெயில்கள், சில தலைப்புகளில் வந்த மெயில்கள் எனப் பலவகைகளில் நாம் தேடலை மேற்கொண்டு தகவல் விடைகளைப் பெற முயற்சிப்போம். நாம் தேடுகையில் அதற்கான பல வரையறைச் சொற்களைப் பயன்படுத்தி, நம் தேடல்களின் முடிவுகளை விரைவாகப் பெறலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன?

பல நேரங்களில், நாம் இணைய தளங்களிலிருந்து கோப்புகளை, படங்களை, அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்க கோப்புகளை டவுண்லோட் செய்கிறோம். தரவிறக்கம் செய்திடும் முன் அதன் அளவு என்ன என்பது நமக்குக் காட்டப்படுவதில்லை.

போல்டர் டிப்ஸ்

போல்டர் வியூ:

எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப்படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (Default) போல்டராக அமைந்துவிடும்.

தெரிந்து கொள்ளுங்கள்

தம்ப் நெயில் (Thumbnail):

பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன படம் என அறிய முடியும்.

லைன் இன் (Line In):

கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.

விண்டோஸ் 7 செயல் குறிப்புகள்

1. சிஸ்டத்தின் நிலை என்ன?:

நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எந்த நிலையில் உள்ளது என்று அறிய நாம் விரும்புவோம். விண்டோஸ் 7 இதற்கான வழி ஒன்றைக் கொண்டுள்ளது. சர்ச் லைன் பெட்டியில், perfmon/report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். கம்ப்யூட்டர் செயல்படும் திறன், பயன்படுத்தப்படும் திறன், பிரச்னைகள் இருப்பின், அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும்.இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து கூடுதலாக அறிந்தவர்களுக்கு அனுப்பி தீர்வுகளை எளிதாகப் பெறலாம்.

சந்திரபாபுவும், எம்.ஜி.ஆர். உம் சில உண்மைகள்

"செத்துட்டா? மன்னிச்சிரலாமா? அப்போ ஹிட்லரையும் மன்னிச்சிரலாமா?" என விஸ்வரூபம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இறந்தவர்கள் கடவுள்களாக வணங்கப்படும் நம் சமூக வாழ்க்கையில் அவர்களின் பெருமை பேசி, புகழ் பரப்ப மட்டுமே செய்கிறோமேயொழிய அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் செய்துபோன பிழைகளையும், அப்பிழைகள் நம்மிடையே விட்டுச்சென்ற நிரந்தர வடுக்களையும் நாம் கவனத்தில் கொள்வதில்லை.

TN politicians creating problems in SL

Valautham Dayanidhi, alias Daya Master, the former spokesperson for the LTTE says during the war between the security forces and the LTTE both parties committed crimes and there was no point in conducting post-mortems on them now.

In an exclusive interview with Padma Rao Sundarji of Hindustan Times in Jaffna, he said what was happening in Tamil Nadu was a competition among the politicians to prove who did the most for Sri Lankan Tamils.

ஒரு போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4

இந்தியப் பயணமும் தொல்லைகளும்

இந்த நிலையில் அவரிடம் இந்தியா சென்று எப்போது வேறு நாட்டிற்குப் பயிற்சிக்குச் செல்வது என்று கேட்டேன். அவர் சொன்னார் இந்தியாவை விட வேறு நாடு இல்லை என்று. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பலர் எம்மைக் கேட்ட கேள்வி நீங்கள் இந்தியாவை நம்புகிறீர்களா என்பதே. இந்தியா ஒரு போதும் எமது பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. பிரச்சினையாகத் தான் இருக்கும் என்றும் சொன்னார்கள். அதற்கு நமது பொறுப்பாளர் சொன்னார். நாங்கள் சோசலிசத்தை அணுகிக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் தான் பயிற்சி எடுக்கின்றோம். இந்தியாவைத் தளமாகத் தான் பயன்படுத்துகின்றோம் என்று. நான் எனக்குள் நினைத்தேன். சோசலிசத்தை அணுகுகின்ற நாடு என்றால் ரஷ்யாவாகத்தான் இருக்கும் என்று. எனக்குத் தெரியும் இந்தியா சோசலிசத்தை அணுகவில்லை என்று. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நாம் சொன்னது என்னவோ, ஆனால் செய்கிறதோ வேறொன்றாக இருந்தது. எனினும் எனது பாதுகாப்பற்ற நிலைமை என்னை இந்தியா போக வைத்தது. அந்த நேரத்தில் வெளிநாட்டிற்குப் புலம்பெயரும் எனது பயணம் தயாரான நிலையில் இருந்தது. எனினும் நான் என்னை முழுமையாக இயக்கத்திற்கு அர்ப்பணித்து இந்தியா போக முடிவு செய்தேன்.

மெமரி லீக் என்பது

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அப்ளிகேஷன், தான் இயங்கத் தயாராகும் போது, ராம் மெமரியில் தனக்கான இடத்தை எடுத்துக் கொள்ளும். இது போல பல புரோகிராம்கள் ராம் மெமரியில் இடம் கொள்ளும். அப்படியானால், அடுத் தடுத்து புரோகிராம்களை ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் இயக்கினால் என்னவாகும்? என்ற கேள்வி எழுகிறதா? என்னவாகும்? ராம் மெமரியில் இடம் இல்லை என்று பிழைச் செய்தி வரும்.

சிஸ்டம் டிப்ஸ்

அனலாக் (Analogue):

எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்களிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக்கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் கொண்ட கடிகாரத்தின் முகப் பக்கத்தினையும், டிக் டிக் என ஒவ்வொரு விநாடியாக நகரும் விநாடி முள் கொண்ட கடிகாரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதலில் குறிப்பிட்டது அனலாக் சிக்னல் தருவதாகும். இரண்டாவது டிஜிட்டல் சிக்னல். இரண்டாவதாகச் சொன்னது, ஒவ்வொரு எண்ணாக, ஒரே மதிப்பில் மாறுகிறது.

வேர்ட் டிப்ஸ்!

வேர்டில் ஸ்பெஷல் தேடல்:

வேர்ட் டாகுமெண்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேட நாம் பயன்படுத்துவது Find/Replace என்னும் சிறப்பு வசதி ஆகும். இதன் மூலம் சொல்லைத் தேடுகிறீர்கள். அது மட்டுமா?

இன்னும் பலவற்றை குறிப்பாக அச்சில் வராத கேரக்டர்களையும் இதன் மூலம் தேடலாம் என்று தெரியுமா? ஒரு கேரட் சிம்பல், + அடையாளம், பார்மட்டில் பயன் படுத்தப்படும் பாரா இடைவெளி, ஹைபன் என அனைத்து ஸ்பெஷல் கேரக்டர்களையும் இதன் மூலம் தேடலாம். எப்படி என்பதனைப் பார்ப்போமா?

என்ன விபரம்? யார் பைலை எழுதியது?

உங்கள் வர்த்தக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் பல்வேறு எக்ஸெல் பைல்களை உருவாக்கிக் கையாண்டு வருவீர்கள். அலுவலக தகவல்களைப் பலர் பல நாட்களில் மாற்றியும் அதிகப்படுத்தியும் கையாளுவார்கள்.

எக்ஸெல் டிப்ஸ்

அச்சில் எப்படி இருக்கும்?:

எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றை பெரிய ஸ்ப்ரெட் ஷீட்டுடன் உருவாக்கிக் கொண்டிருக்கையில் அந்த ஒர்க் ஷீட் அச்சில் எப்படி தோன்றும் என்பது தெரிந்தால் நாம் நமக்கேற்றபடி செல்களையும் வரிசைகளையும் சரி செய்திடலாம் அல்லவா? இதனால் டேபிள்கள் பக்கங்களுக்கு இடையில் உடையாமல் பார்த்துக் கொள்ளலாம். அதே போல் பக்கங்களும் உடையாமல் ஒரே பக்கத்தில் ஒரே மாதிரியான தகவல்கள் தெரியும் படி அமைத்துக் கொள்ளலாம். இதற்குக் கீழ்க்கண்டபடி செட் செய்திடவும்.

1.“Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

அடி பணிந்த மைக்ரோசாப்ட்

தன் வாடிக்கையாளர்களின் அடங்காத கோபத்தினைப் பார்த்த பின்னர்,மைக்ரோசாப்ட் தன் கொள்கையை அண்மையில் மாற்றிக் கொண்டது. ஆபீஸ் 2013 தொகுப்பினை வாங்கியவர்கள், ஒரே ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே அதனை இன்ஸ்டால் செய்திட முடியும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரைச் சுத்தம் செய்திட

சந்தேகப்படும்படியான இணைய தளங்களுக்குச் செல்லும் பழக்கம் உங்களிடம் இல்லை என்றாலும், பயன்படுத்தும் பிரவுசரை அடிக்கடி நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்திட வேண்டும். உங்கள் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கவும், பிரவுசரின் செயல் திறன் குறைந்திடாமல் பார்த்துக் கொள்ளவும் சுத்தப்படுத்துதல் முக்கியமாகும். இங்கு அதிகம் பயன்படுத்தப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைச் சுத்தம் செய்வதற்கென கிடைக்கும் சில புரோகிராம்கள் குறித்து பார்க்கலாம்.

ராம் அண்ட் ரோம்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது, நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன், பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பிரபாகரன் மனைவி, மகள் உடல்கள் 2009 மே 20-ல் மீட்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோரது உடல்கள் 2009-ம் ஆண்டு மே 20-ம் நாளே மீட்கப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல