சனி, 1 ஜனவரி, 2011

ஏர்போர்ட் கழிவறையில் குழந்தை பெற்ற பெண் தொட்டியில் வீசி கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு!

துபாய் விமான நிலைய கழிவறையில் குழந்தை பெற்று, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்பிச் சென்ற பெண்ணை, அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் அனைத்து மகளிர் தற்கொலைப்படை!

ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தாக்குதல்களை நடத்த அனைத்து மகளிர் தற்கொலைப்படைகளை தலிபான்கள் தயாரித்து வைத்துள்ளனர். இவற்றில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆயுதப்பயிற்சியும் நாசவேலைகளில் தனிப்பயிற்சியும் பெற்றுள்ளனர்.

யாழ் கொலைக்கு Face Book காரணமா?

யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 9.15 மணியளவில் குடத்தனை மேற்கு நியூட்டன் கல்வி நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் பருத்தித்துறை தபாலக ஊழியரான தவராசா கேதீஸ்வரன் (வயது 27) தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டை விற்ற இலங்கைப் பெண் கைது!


சிங்கப்பூருக்குச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர் தனது கடவுச் சீட்டை இன்னொருவருக்கு விற்றுவிட்டு, பின்னர் தனது கடவுச் சீட்டு தொலைந்துவிட்டதாக முறைப்பாடு செய்தார். ஆர்.எஸ் மட்டுமேஜ் (38) என்ற இப்பெண்மணி 600 டொலர்களுக்கு தனது கடவுச் சீட்டை இன்னொரு இலங்கைப் பெண்ணுக்கு விற்றுள்ளார். பின்னர் கடந்த புதன்கிழமை அன்று, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி அதிகாரசபைக்குச் சென்ற அவர் தனது கடவுச் சீட்டு தொலைந்து விட்டதாக முறையிட்டார்.

கூகுளுக்குப் பதிலாக புதிய தேடல் பொறி

சீன அரசு தன்னுடைய நாட்டிற்கே சொந்தமாக என தனியாக ஒரு தேடல் பொறியை உருவாக்கியுள்ளது.

கோசோடாட்சின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தேடல் பொறி கூகுளுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளதாக சீனாவிலிருந்து வெளிவரும் பீப்பிள்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடிகார முட்கள் வலப் பக்கமாக நகருவது ஏன்?

பண்டைய கால கடிகாரங்களில் முட்கள் கிடையாது. கடிகாரம் எழுப்பும் ஒலியை வைத்தே மக்கள் நேரத்தைக் கணக்கிட்டனர். பின்னர் எழுத்துக்களைக் கொண்டு கணக்கிடும் முறை வந்ததும், முட்கள் பயன்படுத்தப்பட்டன.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு

இன்று விஞ்ஞானத்திற்குச் சவால் விடும் கேள்வி இதுதான். இதற்கு விடை கிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாவில் தீபாவளி கொண்டாத் துணிய மாட்டார்கள்.

காலம் என்பது என்ன?

ஆங்கில பேரகராதியில் ‘விக்கிலீக்ஸ்’

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தையாக உள்ள ‘விக்கிலீக்ஸ்’ விரைவில் ஆங்கிலப் பேரகராதியில் இடம்பெறும் என உலக மொழி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

300 விதமான அரிசி ரகங்களை உருவாக்கிய குர்தேவ்

உலக அளவில் 300 விதமான அரிசி ரகங்களை உருவாக்கி சாதனை படைத்தவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்தேவ் சிங்குஷ் என்ற விவசாய விஞ்ஞானி. குறுகிய காலத்தில் அதிக மகசூல் அளிக்கு நெல் பயிர்களை கண்டுபிடித்ததற்காக, ஜப்பான் நாட்டின் உயரிய விருது 2000ல் வழங்கப்பட்டது.

கழிவறைக்குள் பாலியல் கல்வி!

சீனாவில் உள்ள பாடசாலைகளில் பாலியல் கல்வியைப் போதிக்க புதுமையான முறை ஒன்று அறிமுகம் ஆகி உள்ளது.

கணனிக் கயமை

பிள்ளையார் விக்கிரகங்கள் பால் குடித்ததாக ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் வெளியான செய்திகளை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். உலகம் பூராவும் அடிபட்ட அச்செய்திகளைக் கேள்விப்பட்டு தங்கள் வீடுகளில் உள்ள பிள்ளையார் விக்கிரகங்களுக்குப் பால் வைத்துப் பார்த்தவர்கள் ஏராளம். அன்று பிள்ளையார் பால் குடித்தாரோ இல்லையோ இந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது மாத்திரம் தான் எம்மால் காணக்கூடியதாக இருந்த உண்மை.

கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட தாயும் மகளும் படுகாயமடைந்தனர்

தனிமையில் வாழ்ந்து வந்த தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் ஊர்காவற்றுறை தம்பாட்டிமனோன்மணி அம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.நடராசா சிந்தாமணி (78 வயது). இவரது மகள் இ.ராஜலக்ஷ்மி (45 வயது) ஆகிய இரு பெண்களே வெட்டிப் படுகாயப்படுத்தப்பட்டவர்களாவர்.

சுற்றுலா பயணிகளுக்கு இணையத்தளம் மூலம் விசா

இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வர விரும்புவோருக்கு இணையத்தளம் மூலம் விசா பெற்றுக்கொள்ள அனுமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அல்வாயில் ஆயுததாரிகளால் பெண் கடத்தப்பட்டார்

அல்வாய் கிழக்குப் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான பெண் ஒருவர் வெள்ளைவானில் வந்த 6 பேர் கொண்ட இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கணவனைக் காணவில்லை மனைவி முறைப்பாடு

உரும்பிராயில் வைத்து நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களினால் தனது கணவன் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா வீதியைச் சேர்ந்த 30 வயதான சண்முகநாதன் விக்னேஸ்வரன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கிடையிலான தகராறு கைகலப்பில் முடிவுற்றது

வரணியில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு பின்னர் கைகலப்பாக மாறி அடிதடி, கல் வீச்சில் முடிவுற்றது. வரணி வடக்கு கறுக்காய் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கொடுக்கல் – வாங்கல் தொடர்பான தகராறு வலுப்பெற்று ஒரு தரப்பினரை எதிர்த் தரப்பினர் மறைந்திருந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இலங்கையில் ரூபாய், சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகம்

உருபாய் அல்லது ரூபாய் (Rupee) என்பது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மொரீசியஸ் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு மதிப்புடைய நாணயங்களின் பெயராகும். இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் நாணயம் ருபியா என்றும், மாலைத்தீவில் பயன்படுத்தப்படும் நாணயம் ருஃபியா என்றும் அழைக்கப்படுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல