திங்கள், 25 அக்டோபர், 2010

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரின் மைத்துனி முஸ்லிமாக மாறினார் (படங்கள் இணைப்பு)

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரின் மனைவி செர்ரியின் ஒன்றுவிட்ட சகோதரி லாரன் பூத் (வயது 43). இவர் ஈரான் நாட்டு செய்தி நிறுவனமான, "பிரஸ் டிவி'யில் பணியாற்றி வருகிறார். மனித உரிமைக்காகவும் போராடக் கூடியவர். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவரான லாரன் பூத், தற்போது முஸ்லிம் மதத்துக்கு மாறி உள்ளார். கடந்த ஆறு வாரங்களுக்கு முன், ஈரான் நாட்டில் புனித நகரமாகக் கருதப்படும், "குவாம்' நகருக்குச் சென் று திரும்பிய பிறகு இம்மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ரிஷானா மனு நிராகரிப்பு (படங்கள் இணைப்பு)

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை வீட்டுப் பணிப்பெண் ரிஷானா

சவுதி அரேபியாவில் குழந்தை ஒன்றைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நபீக்கின் மேன்முறையீட்டை ரியாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உயர்தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்ட பூனைக்குட்டி (படங்கள் இணைப்பு)

குழந்தை ஒன்றால் மலசலகூடத்துக்குள் தூக்கி வீசப்பட்ட பிறந்து இரண்டு நாளே ஆன பூனைக்குட்டி தீயணைப்புத் துறையைச் சார்ந்த மீட்புப் படையினர் உதவியுடன் நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.

இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிர் பிழைப்பு

இறந்துவிட்டதாக மருத்துவர்களால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணொருவர், சில மணி நேரத்தின் பின் உயிருடன் எழுந்த விசித்திர சம்பவம் பிரான்ஸ் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

காரில் சடலத்துடன் பல மாத காலமாக பயணம் செய்த அமெரிக்கப் பெண்

பல மாத காலமாக வீடு வாசல் அற்ற பெண்ணொருவரின் சடலம் காரின் பயணிகள் ஆசனத்தில் இருக்க காரைச் செலுத்தி வந்த பெண்ணொருவர் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விசித்திர சம்பவம் அமெரிக்க தென் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
வாகனம் செல்லும் பாதைக்கு முட்டுக் கட்டையாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை கிடைத்த முறைப் பாட்டையடுத்து குறிப்பிட்ட கார் சோதனையிடப்பட்டது.

ஒரு நாளைக்கு அரைக்கிலோ மண்ணை சாப்பிடும் மனிதன்

“நாளுக்கு நாள் மண் திண்ணும் ஆர்வம் அதிகத்து வருகிறதே தவிர குறைய வில்லை' என, ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணை சாப்பிடும் காய்கறி கடை வியாபாரி கூறினார். விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த வாலி மகன் கோபி(25).

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல