செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கூகுள் வழங்கும் குழந்தைகளுக்க்கான தேடல் சேவை – கிடில்!

நொடிக்கொரு விதம் மாறி வரும் நவீன உலகத்தில் வளர்ந்து வரும் இன்றைய குழந்தைகள் பெற்றோர்களை விட நுண்ணறிவிலும் அதி நவீன பொருட்களைக் கையாளுவதிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவர் களுக்கே கையாளத் தெரியாத செல்பேசிகள் குழந்தைகள் கைகளில் என்ன பாடு படுகிறது தெரியுமா! அதை அப்படியே பிரித்து மேய்ந்து விடுகிறார்கள் இன்றைய சுட்டிக் குழந்தைகள். இவர்களின் வயதில் நாம் இருக்கும் போதெல்லாம் நல்லது எது கெட்டது என்பதைக் கூட நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால் தான் புரியும். இன்று அப்படியல்ல குழந்தைகள் இன்றைய பெற்றோர்களிடம் கேட்கும் கேள்வி லூசா அப்பா/அம்மா நீ? ஐயோ இது கூட உனக்கு தெரியவில்லை எனும் போது பெற்றோர்கள் உண்மையில் அசடு வழிய தான் வேண்டி இருக்கிறது.

மோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்னமும் “புலிகளின்” குடும்பங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன


என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவிக்கிறார்

வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடந்த வியாழனன்று, யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், மோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் குடும்பங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றன எனத் தெரிவித்தார். பத்தரமுல்லவிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகங்களிடம் உரையாற்றிய ஆளுனர் குரே, எல்.ரீ.ரீ.ஈயும் கூட மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை கைப்பற்றி இருந்தது எனத் தெரிவித்தார். எனினும் இன்று கவனம் முழுவதும் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட நிலங்களைப் பற்றி மட்டுமே உள்ளது.

கலரிங் செய்தால் புற்றுநோய் வருமா?

நரைத் தலையுடன் மனிதர்களைப் பார்ப்பதே இன்று அரிதாகி விட்டது. அந்தளவுக்கு யாரைப் பார்த்தாலும் கருகரு கூந்தலுடன்தான் வலம் வருகிறார்கள்.கூந்தல் சாயம் என்பது இன்று தவிர்க்க முடியாத ஓர் அழகு சாதனமாக மாறிவிட்டது. ஹெயர் டை உபயோகிக்கும் போது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம் என்கிறார் ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்.

பிரே­சிலில் புரட்­சி­கர அறுவைச் சிகிச்சை

விபத்தில் சிக்­கிய கரத்தில் நோய்த் தொற்று ஏற்­ப­டு­வதை தடுக்க அதனை வயிற்­றுக்குள் வைத்து தைத்த மருத்­து­வர்கள்

தொழிற்­சாலை விபத்­தொன்றில் கையின் ஒரு பகு­தியில் தோல் முழு­வதும் உரிக்­கப்­பட்ட நிலைக்­குள்­ளான நப­ரொ­ரு­வ­ருக்கு, அவ­ரது அந்தக் கரப் பகு­தியில் நோய்த் தொற்று ஏற்­ப­டு­வதைத் தடுக்க அதனை அவ­ரது வயிற்றுப் பகு­திக்குள் வைத்து மருத்­து­வர்கள் தைத்த சம்­பவம் தென் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது.

வரித் திருட்டில் ஈடுபட்ட 500 இந்தியர்களின் பட்டியலில் அமிதாப், ஐஸ்வர்யாராய் பெயர்!

வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலில், பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோரது பெயர் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாபெரும் இரகசிய ஆவணக் கசிவால் உலக நாடுகளின் தலைவர்களும் செல்வந்தப் பிரமுகர்களும் நெருக்கடியில்

உலகில் செல்­வந்த மற்றும் அதி­கா­ரத்­துவம் பொருந்­திய தலைவர்கள் எவ்­வாறு வரிச் சலு­கை­களைப் பயன்­ப­டுத்தி தமது செல்­வத்தை மறைக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர் என்­பது தொடர்­பான தக­வல்கள் நம்­ப­கத்­தன்­மை­யான இர­க­சிய ஆவ­ணங்­களின் பாரிய கசிவால் அம்­ப­ல­மா­கி­யுள்­ளன.
உலகின் மிகப் பெரிய இர­க­சிய கசி­வு­களில் ஒன்­றாகக் கருதப்­படும் இந்தக் கசிவால் சம்­பந்­தப்­பட்ட உலக நாடு­களின் தலை­வர்கள் பெரும் நெருக்கடியை எதிர்­கொண்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல