திங்கள், 8 ஏப்ரல், 2013

நடிக, நடிகைகளின் உட்டாலங்கடி உண்ணாவிரதம்!

நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் திரண்டனர் தமிழ்த் திரை நட்சத்திரங்கள். ஏப்ரல் 2-ம் தேதி நடிகர்கள் பலரும் கறுப்புச் சட்டையுடன் வந்திருந்தனர். சென்ற தடவை இதே நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தபோது சிலர் மைக்கை பிடித்து மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கினார்கள். அதுமாதிரியான தர்மசங்கட நிலை இப்போது ஏற்படக் கூடாது என்று நட்சத்திரங்கள் யாரையும் பேசவிடவில்லை. சிலரோ ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் போல தலையைக் காட்டிவிட்டுப் பறந்தனர்.

கோடிக்கணக்கில் பண மோசடி... சித்தி மீது நடிகை அஞ்சலி பகிரங்க புகார்.

என்னுடைய கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துவிட்டார் என் சித்தி. எனவே அவரைப் பிரிந்துவிட்டேன், என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார் நடிகை அஞ்சலி.

கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, அங்காடித் தெருவில் சிறந்த நடிகையாக பெயர் பெற்றவர் அஞ்சலி. ஆந்திராதான் பூர்வீகம்.
பொதுவாக இவர் எங்கு போனாலும் உடன் ஒரு பெண்மணியையும் அழைத்துவருவார். இவரை அஞ்சலியின் தாய் என்றே பலரும் நினைத்து வந்தனர். ஆனால் அது உண்மையல்ல.

வெட்டியான் தொழில் பார்க்கும் பெண்ணின் கதையிது!

பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்கள், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது.

இப்படி சொல்லப்படும் காரணங்களினால்… எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, இறந்த உறவுகளை வழியனுப்பி வைக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல