வியாழன், 30 டிசம்பர், 2010

24ஐ திருமணம் செய்யும் 84 வயது ‘ப்ளேபாய்’

அமெரிக்காவில் வெளியாகும் கிளுகிளு பத்திரிகை ப்ளேபாய். அதன் உரிமையாளர் ஹக் ஹெப்னர். வயது 84. அவரது லேட்டஸ்ட் காதலி கிறிஸ்டல் ஹாரிஸ். வயது 24. தன்னைவிட 60 வயது குறைந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக டுவிட்டரில் ஹெப்னர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்கள் முன்புதான் ஹெப்னர் தனது 2வது மனைவி கிம்பர்லி கன்ராட் என்பவரை விவாகரத்து செய்தார்.

சர்வதேச விதவைகள் தினம் பிரகடனம்

ஐக்கிய நாடுகள் பொது சபையானது ஜூன் 23 ஆம் திகதியை சர்வதேச விதவைகள் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.காபொனின் முதல் பெண்மணி சல்வியா பொங்கோ ஒன்டிம்பாவால் முன்வைக்கப்பட்ட மேற்படி யோசனைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் 192 பிரதிநிதிகள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

41 வருட காலமாக காதில் முத்து இருப்பதை அறியாது வாழ்ந்த நபர்

41 வருடங்களாக காதில் முத்து ஒன்று உள்நுழைந்திருப்பதை அறியாது நபரொருவர் வாழ்ந்த சம்பவம் அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் திறந்து வைப்பு “ரோபோ' பணியாளர்களுடன் செயற்படும் விநோத உணவகம் (படங்கள் இணைப்பு)

எப்போதும் புன்னகையுடன் இனிமையாக வரவேற்கும் ரோபோ, முகம் சுழிக்காமல் உடனுக்குடன் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றும் உணவு பரிமாறும் ரோபோ, உணவு உண்ணும் போது ஆடிப்பாடி மகிழ்விக்கும் ரோபோ என்பன உள்ளடங்கலான ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தும் விநோத உணவக மொன்று சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மகனைக் கொன்று ஒரு வருட காலமாக சடலத்தை துணியால் சுற்றிவைத்திருந்த தாய்

தனது 3 வயது மகனுக்கு ஒலிவ் எண்ணெய் மற்றும் வினாகிரி என்பவற்றை தொடர்ந்து அருந்தக் கொடுத்து படுகொலை செய்து, சடலத்தை போர்வையொன்றால் சுற்றி ஒரு வருடத்துக்கு மேலாக வைத்திருந்த தாயொருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க இன்டியானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

வளர்ப்பு மகனுடனான காதல் தொடர்புக்காக பிரம்படி தண்டனை பெற்ற பெண் மரணம்

வளர்ப்பு மகனுடன் காதல் தொடர்பு கொண்டிருந்த குற்றச்சாட்டில் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணொருவர் பிரம்பால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மேற்படி படுகொலையுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பளபளப்பான முகத்திற்கு வெள்ளரிக்காய்


வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக்காய் உடலுக்குக் குளுமை மட்டு மல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவுங்கள்.

பொட்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

இன்றைய கால கட்டத்தில் பொட்டு ஒரு அழகு பொருளாக மாறி வருகிறது. அன்று ஒரு குங்கும பொட்டும் அல்லது சாந்து பொட்டு வைப்பார்கள். அது மழையில், வியர்வையில் அழிந்துவிடுவதால் கொஞ்சம் மாற்றி அது ஸ்டிக்கர் பொட்டானது.

மதத்துவேஷ சட்டத்தின் கீழ் கைதான பெண்ணை விடுதலை செய்ய கிறிஸ்தவர்கள் போராட்டம்

மதத்துவேஷ சட்டத்தின் கீழ் ஆசியா பீவி என்ற கிறிஸ்தவ பெண்ணுக்கு கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்தது. இந்த பெண்ணை விடுதலை செய்யக்கோரி, அந்த நாட்டு சிறுபான்மை இன கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இணையதளத்தில் பதிவு செய்து விட்டு மனைவியை கொலை செய்தவர்

தைவான் நாட்டை சேர்ந்தவர் வாங்க் ஜிங் சி. இவர் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தன் மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் குடியேறினார்.

வருமான வரி பாக்கி வைத்த ஆலிவுட் நடிகை பமீலா

ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். இவர் நிதி நெருக்கடியால் தத்தளித்து வருகிறார். 43 வயதான அவர், அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த முடியாமல் தவிக்கிறார்.

மனைவியின் மின்னஞ்சலை பார்வையிட்டமை குற்றமா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் ஒக்லாண்ட் நகரத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவர் மனைவியின் மின்னஞ்சலை கள்ளத்தனமாக பார்வையிட்டமைக்காக நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு உள்ளார்.இவரின் பெயர் லியோன் வாக்கர்
வீட்டில் இவரும், மனைவியும் ஒரு மடிக் கணனியைத்தான் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

நாயால் கடித்து குதறப்பட்டு படுகாயமடைந்த பெண் மரணம்

பெண்ணொருவர் நாயால் கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
வெலிங்டன் நகரில் வசிக்கும் பார்பரா வில்லியம்ஸ் (40 வயது) என்ற மேற்படி பெண்ணின் வீட்டுக்குள் பிரவேசித்த குறிப்பிட்ட நாய் அவரைக் கடித்துக் குதறியுள்ளது.

முதலிரவில் மூச்சுத் திணறி புதுமணத் தம்பதி மரணம்

முதலிரவு அறையை வெப்பமூட்டுவதற்கு பயன்பட்ட எரிவாயு வெப்ப மூட்டியிலிருந்து வெளிப்பட்ட காபனீரொட்சைட்டு புகை காரணமாக மூச்சுத் திணறி புதுமணத் தம்பதியொன்று பதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஜோர்தானில் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.

ஒரேசமயத்தில் கருத்தரித்த 3 சிசுக்களில் ஒரு சிசு, ஏனைய இரு சிசுக்களும் குழந்தைகளாக பிறந்து 11 வருடங்களின் பின் பிறந்த அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது

மேற்படி பிள்ளைகளின் தாயாரான லிஸா ஷெப்பர்ட்டுக்கும் அவரது கணவர் அட்றியனுக்கும் 1998 ஆம் ஆண்டு திருமணமானது.

பருமனான தாயின் மாபெரும் நத்தார் போசனம் (படங்கள் இணைப்பு)


உடல் பருமனைக் குறைத்து கண் கவரும் தோற்றத்தில் வலம் வருவதற்கு ஆசைப்படும் பெண்கள் மத்தியில் முற்றிலும் மாறுபட்டவராக நியூஜெர்ஸியைச் சேர்ந்த டொனா சிம்ஸன் என்ற பெண் விளங்குகிறார்.

இறந்துவிட்டதாக மருத்துவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு இரு நாட்களின் பின் உயிர்த்தெழுந்த பெண்மணி

மருத்துவர்களால் இறந்துவிட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட 88 வயது பெண்மணியொருவர், இரு நாட்களின் பின் சவப்பெட்டியிலிருந்து உயிர்த்தெழுந்த அதிசய சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
மினஸ் ஜெரெயிஸ் மாநிலத்திலுள்ள இபதிங்கா எனும் இடத்தைச் சேர்ந்த மயா தாஸ் டொரெஸ் கொன்சிகாவோ என்ற மேற்படி பெண்மணி, சுகவீனற்ற நிலையில் கடந்த புதன்கிழமை மாலை பிராந்திய பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தென் ஆபிரிக்க முன்னாள் முதல் பெண்மணி வின்னி மண்டேலாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி

தென் ஆபிரிக்க ன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மதிகிஸெலா மண்டேலா, பிறிடோரியா நகரில் தனது முதலாவது மாபெரும் இசை நிகழ்ச்சியை எதிர்வரும் வருடம் நடத்தவுள்ளதாக அறிவிப்புச் செய்துள்ளார்.

தான் கடத்தப்பட்டதாக போலியாக நாடகமாடி கணவரிடம் கப்பப் பணம் பெற்ற பெண் கைது

தனது கணவரிடம் பணத்தை பெற தான் கடத்தப்பட்டதாக நாடகமாடி 20,000 ஸ்ரேலிங் பவுண் கப்பப்பணம் கோரிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? (படங்கள் இணைப்பு)

கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வடகொரிய கடைகளில் மனிதக் கழிவுகள் விற்பனை

வட கொரியாவில் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டிலுள்ள பல கடைகள் மனிதக் கழிவுகளை இந்த வருடம் விற்க ஆரம்பித்துள்ளதாக தென் கொரிய பகுப்பாய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

புகைபிடிக்கும் பழக்கத்தை 9 மாதமாக நிறுத்தியுள்ள ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது புகை பிடிக்கும் பழக்கத்தை கடந்த 9 மாதங்களாக கைவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ரொபேர்ட் கிப்ஸ் தெரிவித்தார்.

இனி சிலோன் இல்லை ஶ்ரீ லங்கா

இதுவரையில் சிலோன் என பெயர் ஆரம்பமாகும் பொது நிறுவனங்களின் பெயர் ஆரம்பத்தினை, ஶ்ரீ லங்கா என மாற்றுவதற்கு அரசு தீர்மானம் எடுத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலைக்களமாக மாறிவரும் யாழ்

யாழ், குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் யாழ், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். மூன்று வாரங்களுக்குள் யாழ், குடாநாட்டில் மூன்றாவது கொலை பதிவாகியுள்ளதாக யாழ், மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல