செவ்வாய், 14 டிசம்பர், 2010

ஆங்கிலத்தில் பாடி அசத்திய ரஷ்ய பிரதமர் புடின் (காணொளி இணைப்பு)

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் மாஸ்கோவில் நடந்த, சினிமா நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பாட்டுப் பாடி அசத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, நிதி திரட்டும் நிகழ்ச்சி மாஸ்கோவில் நடந்தது.

மூட நம்பிக்கையுடைய தம்பதியர் மீது வழக்குத் தாக்கல்

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்காமல், இறக்கும்படி விட்ட பெற்றோரை, குற்றவாளிகள் என்று அமெரிக்க கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவில் சுரண்டப்படும் மன நோயாளர்கள்

சீனாவின் வடமேற்கில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தொழிற்சாலை ஒன்றில் அடிமைகள் போன்று நடத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டு வந்துள்ளனர் என்று வந்துள்ள தகவல்கள் தொடர்பில் அந்நாட்டின் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரானில் ஷக்கினா பற்றிய விளக்கப் படம்

ஷக்கினா அஷ்டியானி
இரானில் கல்லால் எறிந்து கொல்லப்படும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்ணின் விவகாரத்தில் அடுத்த திருப்பமாக இரான் அரச தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரானில் ஷக்கினா அஷ்டியானி விவகாரம் சர்வதேசத்தின் கவனத்தை பெரும்பாலும் இரான் பக்கம் குவியச் செய்துள்ளது.

11 ஆண்டுகளின் பின்னர் பைசா கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டது

பைசா கோபுரம் (Leaning Tower of Pisa) இத்தாலியின் பைசா நகரில் உள்ள பைசா பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், ஆகஸ்ட் 9, 1173ல் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்க ஐ.எம்.எப் மும்முரம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக் களை முடக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முயற்சித்து வருகிறது. உலகின் பல நாடுகளில் தமிழீழ விடு தலைப் புலிகளின் சொத்துக்கள் காணப்படுவதாகவும் அந்தச் சொத்துக்களைச் சுவீகரித்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

அமெரிக்க தூதர் ஹால்புரூக் மரணம்

ஆப்கன் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ரிச்சர்ட் ஹால்புரூக் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியுறவுத் துறை கூட்டம் ஒன்றின்போது ஹால்புரூக்குக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஓர் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் உயிரிழந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மதுரை மருத்துவமனையில் கடும் போராட்டத்தை சந்தித்து வரும் நடிகர் ராமராஜனை சந்திக்க அவரது முன்னாள் மனைவி நளினி மறுத்து விட்டாராம். தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டார்.

யாழ்ப்பாணத்தில எமனின் ஏஜன்சிகள்

யாழ்ப்பாணத்தில் இப்ப பாருங்கோ முந்தி ஒருபோதும் இல்லாத அளவுக்கு விபத்துகள் பெருக்கிப் போச்சு.. இதுக்கு என்ன காரணம் என்டு வயதான அப்பு ஒருவரிட்ட கேட்டன். அந்தாள் அழுதழு சொன்ன விசயங்கள் இவைதான்

முந்திப் பாருங்கோ எமன் எருமை மாட்டில வாறாதா எல்லாரும் சொல்லுவாங்கள்….

லண்டன் ஆர்ப்பாட்டத்தால் தடுப்பிலிருப்போரின் விடுதலை தாமதமாகும்?-வன்னி மக்கள் அச்சம் !

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி
லண்டனில் ஜனாதிபதி மகிந்த ரஜாபக்ஷவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக தடுப்பு முகாம்களில் இருக்கும் முன்னாள் போராளிகளின் விடுதலை தாமதமாகும் என வன்னி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஏற்பட்ட தோல்வி: ‘பலிக்கடா’ ஆகப் போவது யார்?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானியப் பயணம் தோல்வி கண்ட ஒன்று என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது.அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு அனுதாப அரசியல் நடத்த வேண்டிய நிலையில் இருப்பது அதன் துரதிஷ்டமே.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல