வியாழன், 28 பிப்ரவரி, 2013

2012ல் என்னை கற்பழித்தார்கள்: பெண்ணின் வாக்குமூலம் ! (காணொளி இணைப்பு)

2006ம் ஆண்டு காலப் பகுதி முதல் 2012ம் ஆண்டு காலப்பகுதிவரைக்கும் உட்பட்ட பகுதியில், தமக்கு கிடைக்கப்பெற்ற 75 முறைப்பாடுகளை மனித உரிமைக் கண்காணிப்பகம் பதிவுசெய்துள்ளார்கள். இக் காலப் பகுதிக்குள் பல ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் இடம்பெற்றிருந்த போதிலும் , தமக்கு முறைப்படி கிடைத்த புகார்கள் 75 தான் என கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கைதானா ஒரு இளம் தமிழ் பெண்ணை கொண்டுசென்ற இலங்கை இராணுவம் அவரைச் சித்திரவை செய்துள்ளார்கள். பொலித்தீன் பை ஒன்றை எடுத்து, அதனுள் பெற்றோலை விட்டு, அப் பொலித்தீன் பையை இப் பெண்ணின் தலையில் கட்டியுள்ளனர். இதனால் அவர் மூச்சை இழந்து மயங்கி விழுந்துள்ளார்.

ஓபாமா மனைவியின் ஆடையில் கைவைத்த ஈரான்!

சமீபகாலமாக ஈரான் தனது உள்நாட்டு தயாரிப்பான Qaher-313 என்ற போர் விமானம் பறப்பது போன்று போட்டோஷொப்பில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது.

விடைபெறும் தருனம்…

பாப்பரசர் பெனடிக்ட், புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் தோன்றி பேசினார். தான் பதவி விலகுவதற்கு முன்னதாக இறுதியாக பொதுமக்களை சந்திக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

பாடும் பெண்களை கொலை செய்யுங்கள்

மேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும் அந்தப் பெண்கள் ஷரியா சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சமூகப் புறக்கணிப்பை கோருகிறேன். இதை அவர்கள் மீறினால் “ஏக இறைவனின் திருப்பெயரால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரின், ஒரு பகுதியில் உள்ள இமாம் பஸீருதீன் அகமது வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தார்.

நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 03!

 
 
 
மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன்

“ .....இதையடுத்து, நீதிமன்ற விசாரணையின் பிறகு நீங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டால், விடுதலை பெறலாம் என்று, கொலைக்களத்திற்கு செல்லும் கைதியைப் போன்று நடுநடுங்கிக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு நல்ல மனிதராக மஹிந்த விளங்கினார்.

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 02!

தந்தையின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன்

“ மஹிந்த உட்பட சகல மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மஹிந்தவின் தந்தையைப் பற்றி பொறுப்பதிகாரிக்கு தெரிவித்திருக்கிறார். அதனால் எல்லா மாணவர்களையும் பொறுப்பதிகாரி எச்சரித்த பின்னர் விடுவித்திருக்கிறார்.

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 01!

 
 
மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன்
 
“ இலங்கை அரசியலில் வரலாற்று நாயகனாகத் திகழ்ந்துவரும் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறு வெற்றி தோல்வி, மேடு பள்ளங்களைக் கொண்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ ஒரு கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல. அவரது பெற்றோர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெட்டிய பகுதியில் ஒரு கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல