யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அரியாலை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்முட்டி. இந்தப்பகுதியில் வாழ்ந்த பல இளைஞர்கள் ஒன்றுகூடும் இடம். அவர்கள் வம்பளப்பார்கள். கார்ட்ஸ் விளையாடுவார்கள். அரசியல் பேசுவார்கள். மாலைவேளையில் எனக்கும் அவர்களுடன் பொழுதுபோகும்.
சனி, 18 ஆகஸ்ட், 2012
மேடம் ரஜனி
ஒரு கோழைத்தனமான கொலை
1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத ‘தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம்.
தங்கமே தமிழுக்கிங்கே தட்டுப்பாடு, சி எம் ஆர் தமிழலையில் தமிழைக் காணோம். – பொய்யாமொழி கனடா
பெயர் சி எம் ஆர் தமிழ் வானொலி. வாரத்தில் ஏழு நாளும் தமிழில் நடைபெறுகிறதாம்.ஆனால் தமிழை ஒழுங்காக கேட்க முடிவதில்லை. தமிழில் சொல்லக்கூடிய வார்த்தைகளையே அவசியமற்ற முறையில் ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். ஆனால் வெதுப்பகம், காணொளி என்றெல்லாம் வன்னித்தமிழும் சொல்லுகிறார்கள். விளம்பரங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அறிவிக்கப்படுகின்றன. செசாமி ஒயில் திறீ நைன்ரினைன். தமிழர்களுக்குத்தானே இந்த விளம்பரம். நல்லெண்ணை விலை மூன்று தொண்ணூற்றொன்பது அழகாகத் தமிழிலில் சொன்னால் நேயர்கள் கோபிப்பார்களோ? செசாமி ஒயில் என்று எத்தனை பேருக்குக் சொல்லி வழக்கம். தமிழர்கள் ஜிஞ்சிலி ஒயில் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
Labels:
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




