திங்கள், 7 பிப்ரவரி, 2011

செல்லப்பிராணிகளால் ஆபத்து

மனிதர்களின் அன்றாட வாழ்வில் நாய், பூனை போன்றவை செல்லப்பிராணிகளாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீட்டில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராகவே அவைகள் இருக்கின்றன. குழந்தைகள் போல் முத்தமிடுவது, இரவில் படுக்கையறையில் ஒன்றாகவே படுக்கவைப்பது போன்ற செயல்களில் உரிமையாளர்கள் ஈடுபடுகின்றனர்.

Little Hitler

இது எந்த ஊர் நியாயம்?

2 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்கர் விடுதலை ஆகிறார்

2 பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரியை கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார். அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான் அரசு அவரை விடுதலை செய்ய முன்வந்து உள்ளது.

மகாத்மா காந்தியின் நினைவு பொருட்கள் 13-ந்தேதி ஏலம்

மகாத்மா காந்தி கையெழுத்திட்ட கடிதங்கள் உட்பட அவருடைய 11 விதமான நினைவு பொருட்களை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஒருவர் சேகரித்து வைத்திருந்தார். அவை அனைத்தும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள போனாம்ஸ் என்ற ஏல நிறுவனத்திடம் தற்போது உள்ளது. அவற்றை வருகிற 13-ந்தேதி அன்று ஏலம் விட அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

புதிய வகை பேண்டேஜ்

மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ரத்தத்தை உறைய வைக்கும் புதிய வகை பேண்டேஜ், விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. விபத்து மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் காயங்களால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பேண்டேஜ்கள் சிறிய காயங்களில் அழுக்கு மற்றும் கிருமிகள் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில், காயங்களை மூடி வைக்கப் பயன்படுகின்றன. இந்த பேண்டேஜ்களால், ரத்தப் போக்கை கட்டுப்படுத்த முடியாது. இந்நிலையில், எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு, புதிய வகை பேண்டேஜை உருவாக்கியுள்ளது. நைலானில் சிறிய அளவில் பிளாஸ்டிக்கை கொண்டும், சில ரசாயனங்களைக் கொண்டும் இந்த பேண்டேஜ் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமோ ‌போட்டிகளில் சூதாட்டம் : ஜப்பானியர்கள் அதி்ர்ச்சி

சூதாட்டப்புகார் எழுந்ததால் ஜாப்பானின் புகழ்பெற்ற விளையாட்டான சுமோ எனும் மல்யுத்த போட்டிகள் இந்தாண்டு நடக்கவிருந்ததை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுமோ சங்கம் தெரிவித்துள்ளது..

ராணுவ ஆட்சி தீர்வல்ல!

மத்திய ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சி தெற்கு ஆசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் இன்னும் பரவவில்லை என்பதற்கு மியான்மர் ஓர் எடுத்துக்காட்டு. 1962-ல் ஜெனரல் நீவின் தலைமையில் மியான்மரில் நடந்தேறிய ராணுவப் புரட்சி, மக்களின் உணர்வுகளையும் பிரச்னைகளையும் பற்றிக் கவலைப்படாமல் இருந்த மக்களாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நல்லாட்சியாக இல்லாத மக்களாட்சி முறைக்கு மாற்று ராணுவ ஆட்சி அல்ல என்பதற்குக் கண்கூடான உதாரணமாகத் திகழ்கிறது ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக அந்த நாட்டில் நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சி.

பிச்சையெடுக்கும் சிறுவர்கள் : பெற்றோரே ஆதரிக்கும் பரிதாபம்

ராமேஸ்வரத்தில் பள்ளி செல்லும் வயதில் பிச்சையெடுக்கும் சிறுவர்களின் பரிதாப செயலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைது செய்யப்படும் அபாயம்

குவான்டனாமோ சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார். "குவான்டனாமோ சிறையில் உள்ள, சில கைதிகளை சித்ரவதை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டார்' என்று அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல