சனி, 27 டிசம்பர், 2014

பெண்களே! அழகைக் கெடுக்கும் தொங்கும் மார்பகங்களை சரிசெய்ய சில அட்டகாசமான வழிகள்!!!

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொங்கும் மார்பகங்கள். இந்த பிரச்சனையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாது. ஒரு குறிப்பிட்ட ஆடைகளைத் தான் அணிய முடியும்.

பெண்களே... உங்கள் திருமணத்தன்று தொப்பையை மறைக்கணுமா? இதோ 5 சூப்பர் யோசனைகள்!!

'திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்'. வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நடக்கும் அந்தத் திருமணத்தின் போது, எப்போதும் போல இருப்பது நன்றாக இருக்குமா என்ன? திருமணத்திற்கென்று அலங்கரித்துக் கொள்வது ஒன்றும் புதியதல்லவே!

'கட்டிப்பிடி முத்த' சாமியார் கைது!

ஆந்திராவில் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அருள்வாக்கு கூறிவந்த டுபாக்கூர் சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரை மனநிலை மையத்தில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ்

விண்டோஸ் 7ல், சிங்கிள் கிளிக் கொண்டு பைல்களைத் திறக்க விரும்பினால்...

ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கிளிக் செய்தால் தேடல் கட்டம் கிடைக்கும். இந்த தேடல் கட்டத்தில் Folder Options என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் பல முடிவுகளில் Folder Options முதல் விடையாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இனி திறக்கப்படும் விண்டோவில், Select single-click to open an item என்ற வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, ஒரு பைலைத் திறக்க, ஒருமுறை மவுஸால் கிளிக் செய்தால் போதும்.

மின் அஞ்சல் அனுப்ப பயனுறை குறிப்புகள்

எத்தனையோ ஆண்டுகளாக மின் அஞ்சல் பயன்படுத்தி வருகிறோம். இதில் என்ன புதுமையான பயன் தரும் குறிப்புகள் இருக்கப் போகின்றன? என்று எண்ணுகிறீர்களா? சிலர் மின் அஞ்சல் பயன்படுத்தும் வழிகளைக் கவனித்த பின்னர், கீழ்க்காணும் குறிப்புகளைத் தர முன் வந்தோம். அவற்றைப் பார்ப்போமா!

எக்ஸெல் டிப்ஸ்... பல செல்களில் ஒரே டேட்டா

பல செல்களில் ஒரே டேட்டா

எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கும் போது, பல வேளைகளில், ஒரே டேட்டாவினைப் பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இந்த வேலையை மேற்கொள்ள எக்ஸெல் ஒரு சுருக்கு வழியினைத் தருகிறது. முதலில், ஒரே டேட்டாவினை அமைக்க வேண்டிய செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும். அவை வரிசையாக இல்லை எனில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அந்த செல்களின் மீது கிளிக் செய்திடவும்.
தொடர்ந்து அமைக்க வேண்டிய டேட்டாவினை டைப் செய்திடவும். டைப் செய்து முடித்தவுடன், எண்டர் கீயை அழுத்த வேண்டாம். கண்ட்ரோல் + எண்டர் கீகளை அழுத்தவும். அவ்வளவுதான்! நீங்கள் விரும்பியபடி, குறிப்பிட்ட டேட்டா, அனைத்து செல்களிலும் அமைந்திருப்பதனைக் காணலாம்.

வேர்ட் டிப்ஸ்..... டூல்பாரினை விருப்பபடி மாற்ற

டூல்பாரினை விருப்பபடி மாற்ற

வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.

இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

குரோம் பிரவுசரில் இணைய உலா முடிந்த பிறகு, தனிப்பட்ட தகவல்களை, பிரவுசரே அழித்துவிடும் வகையில் செட் செய்திட

பொதுவாக, இணைய பிரவுசர்கள், நம் இணைய உலா சார்ந்த தகவல்களைப் பதிவு செய்து கொள்கின்றன. இவை ஹிஸ்டரி, குக்கி பைல்கள், தேடல்கள், டவுண்லோட் செய்தவை மற்றும் நம் இணைய உலா சார்ந்த அனைத்து தகவல்களும் பதியப்படுகின்றன. அந்த தகவல்களை, பிரவுசர் பல வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், இவற்றை நாமாகத்தான் அழித்து வருகிறோம். நாம் கேட்டுக் கொண்டால் தான், பிரவுசர் இவற்றை அழிக்கிறது. இருப்பினும் அனைத்து பிரவுசர்களும், அவையே அழித்துக் கொள்ளும் வகையில் செட் செய்வதற்கான வழிகளைக் கொண்டுள்ளன.

நன்றி சொல் நண்பா!

சமூக இணைய தளமாக பன்னாடெங்கும் புகழ் பெற்று, பயன்படுத்தப்படுவது பேஸ்புக். அண்மையில் இத்தளத்தில் புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. நம்மோடு நம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, விரும்புவதாக ஊக்கம் கொடுத்து, பதில் அளித்து, தட்டிக் கொடுத்து வரும் நண்பர்களுக்கு, நன்றி சொல்லுமாறு பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஹார்ட் ட்ரைவ் தூங்குகிறதா?

பல நேரங்களில், நாம் கம்ப்யூட்டரில் எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல், வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது ஹார்ட் ட்ரைவ் என்ன செய்திடும்? அதுவும் எந்த வேலையும் மேற்கொள்ளாமல், செயல்படாமல் இருக்குமா? அப்படி என்றால், அதன் செயலாக்கத்தினைக் காட்டும் சிறிய எல்.இ.டி. விளக்கு ஏன் தொடர்ந்து அணைந்து எரிகிறது? இந்த கேள்விகள் மனத்தில் எழுந்தாலும், நாம் பதில் காண முற்படுவதில்லை. இந்த சூழ்நிலைகளை இங்கு சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

எக்ஸெல் டிப்ஸ்... சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?

சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?

எக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப்படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன? சில பார்மட்டிங் செட்டிங்ஸ் அப்படியே புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றங்கள் இல்லாமல், வரிசைப்படுத்திய பின்னரும், பார்மட்டிங் அமைப்பும் எடுத்துச் செல்லப்படும் வகையில் எக்ஸெல் தொகுப்பில் செட் செய்திடலாம்.

வேர்ட் டிப்ஸ்!..

செவ்வக வடிவில் டெக்ஸ்ட் செலக்ஷன்

வேர்ட் புரோகிராமில், சிலவகை டேட்டாவினைப் பயன்படுத்துகையில், குறிப்பாக டேபிள்களை அதிகம் பயன்படுத்துகையில், தொடர்ந்து அமையாமல், ஆங்காங்கே உள்ள டேட்டாவினை தனித்தனியே தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐந்து வரிகளில், பத்தாவது கேரக்டர் முதல் பதின்மூன்றாவது கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். மற்றவற்றை விட்டுவிட்டு, இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். அப்போது கீ போர்ட் மூலம், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை, டேட்டாவினை எப்படி தேர்ந்தெடுப்பது எனக் காணலாம்.

டாஸ்க் மானேஜர்

விண்டோஸ் இயக்கத்தில் நமக்குப் பல இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுவது அதன் டாஸ்க் மானேஜர் பயன்பாடு. இதன் பலமுனைச் செயல்பாடுகளை இங்கு காணலாம்.

விண்டோஸ் 8 ல் ஸ்டார்ட் மெனு இல்லாததால், சிஸ்டம் ஷட் டவுண் செய்வது எப்படி

சார்ம்ஸ் பார் இயக்கவும். கிடைக்கும் திரையில், Settings தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் உள்ள Power ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மூன்று ஆப்ஷன்கள், Sleep, Shut down, மற்றும் Restart, கிடைக்கும். இதில் Shut down என்பதில் கிளிக் செய்திட, சிஸ்டம் மூடப்படும்.

இணையப் பயன்பாட்டில் Ping செய்தல் என்றால் என்ன?

என் நண்பர் சேட்(chat) விண்டோவில் தொடர்பு கொள்கையில், அல்லது, மின் அஞ்சலில், தேவைப்பட்டால் தன்னை 'பிங்' செய்திடுமாறு சொல்கிறார். இதன் பொருள் என்ன?

தொழில் நுட்ப ரீதியில் இந்த சொல்லுக்கும், நண்பர்களிடையேயான தொடர்பில் பயன்படுத்தப்படும் பொருளுக்கும் சற்று வேறுபாடு உள்ளது. அதனை இங்கு காண்போம்.

பொது இடங்களில் வை பி (wifi) இணைப்பு....

இப்போதெல்லாம், விடுதிகள், விமான நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில், வை பி (Wifi) இணைப்பு கிடைக்கிறது. சில இடங்களில் பாஸ்வேர்ட் இல்லாமலும், மற்ற இடங்களில், பாஸ்வேர்ட் கேட்டு வாங்கிப் போடும் வகையிலும் உள்ளன. கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த இணைப்புகளில், நம் சாதனங்களைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினை மேற்கொண்டு, நம் வேலைகளை மேற்கொள்வது பாதுகாப்பான ஒன்றாக இருக்குமா?

எக்ஸெல் டிப்ஸ்...

அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்

வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு: வேர்ட் புரோகிராம், அதன் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல்களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது, சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது.

விண்டோஸ் 8 உங்களுடையதாக்க

டிஜிட்டல் உலகில், மைக்ரோசாப்ட் நிறுவனம் எப்போதும் தன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சாதனங்களை மேம்படுத்தி சீரமைத்துக் கொண்டே இருக்கும் நிறுவனமாகும். மாற்றங்களில் அதிக நம்பிக்கையுடன் இயங்குவது மட்டுமின்றி, அம்மாற்றங்களை நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்ட நிறுவனம் மைக்ரோசாப்ட்.

லேப்டாப் பேட்டரி பராமரிப்பு

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

எக்கச்சக்க பிழைக் குறியீடு திருத்தங்கள்

வழக்கம் போல இரண்டாவது செவ்வாய்க்கிழமை தரும் அப்டேட் திருத்த பைல்களை, நவம்பர் மாதத்திற்கு (https://technet.microsoft.com/library/security/ms14-nov) மைக்ரோசாப்ட் வழங்கியது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதுவரை கடந்த இரண்டு, 2013, 2014, ஆண்டுகளில், ஒரே நாளில் வெளியான பிழை திருத்தக் குறியீடுகளைக் காட்டிலும், இந்த முறை எண்ணிக்கையில் மிக அதிகம். 16 பாதுகாப்பு சார்ந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. தற்போது சோதனைப் பதிப்பாக இருக்கும் விண்டோஸ் 10 தொகுப்பிற்கு நான்கு திருத்தங்கள் தரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 79 பிழை திருத்த அறிக்கைகள் தரப்பட்டுள்ளன.

குறள் தமிழ்ச் செயலி

கம்ப்யூட்டர்களில் தமிழில் டெக்ஸ்ட் அமைக்க பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் கிடைத்தாலும், இந்த வரிசையில் முன்னோடியாக நமக்குக் கிடைத்த சிலவற்றில் ”குறள் தமிழ்ச் செயலி” முதன்மையானது. அதன் புதிய பதிப்பு 5.0. அண்மையில் வெளியாகியுள்ளது.

யு.எஸ்.பி. டேட்டா ப்ளாஷ் ட்ரைவ்

ஒரு யு.எஸ்.பி. டேட்டா ப்ளாஷ் ட்ரைவ் வாங்கினேன். அதன் கொள்ளளவு 32 ஜி.பி. எனப் போட்டிருந்தது. அதன் அட்டையிலும் அவ்வாறே பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் அதனைக் கம்ப்யூட்டரில் இணைத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் பார்க்கையில், 32,027,770,880 என்று போட்டு, தொடர்ந்து 29.8 ஜி.பி. எனப் போட்டிருந்தது. இது ஏன்? இந்த இரண்டு அளவுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளதே? உண்மையான அளவு என்ன?

புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

எக்ஸெல் டிப்ஸ்...

ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க் ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா அமைந்துள்ள வலது ஓர செல்லுக்கு எடுத்துச் செல்லும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள். அதுதான் இல்லை. ஏற்கனவே ஒரிஜினலாக, இறுதியாக எந்த செல்லுக்குச் சென்றதோ, அந்த செல்லுக்குத் தான் செல்லும்.

வேர்ட் டிப்ஸ்....சொற்களை எண்ணப் பல வழிகள்:

சொற்களை எண்ணப் பல வழிகள்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003ஐ இன்னும் பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்கு கையில், அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் மீண்டும் கூட்டிப் பார்க்க வேண்டும் என விரும்பினால் Recount என்ற பட்டன் கிடைக்கும்.

டி.சி.ஐ.எம்.போல்டரில் போட்டோ

எந்த டிஜிட்டல் கேமராவாக இருந்தாலும், அது போனில் பதியப்பட்டு கிடைத்தாலும், அல்லது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனில் உள்ள கேமரா அப்ளிகேஷனாக இருந்தாலும், அதில் நாம் எடுக்கும் போட்டோக்கள் அனைத்தும் DCIM என்ற போல்டரிலேயே வைக்கப்படுகிறது. டி.சி.ஐ.எம். (DCIM) என்பது “Digital Camera Images” என்பதன் சுருக்கமாகும்.

எக்ஸெல் டிப்ஸ்...

ஆல்ட்+ஷிப்ட்
எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.

F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.

F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.

F3 +ALT+SHIFT : நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.

F6 +ALT+SHIFT : ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.

விண்டோஸ் ரீபூட் ஏன்? எதற்கு?

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. ஏன்? இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப்படுகிறது? ரீ பூட் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? எதனை நாம் இழக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம்.

விண்டோஸ் சில புதிய குறிப்புகள்

விண்டோஸ் இயக்கத்துடன் தான் நம் பொழுது முழுவதும் செல்கிறது. இருப்பினும், விண்டோஸ் இயக்கத்தில் நாம் இன்னும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. இவை அவ்வப்போது நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில் தெரியவருகின்றன. அவ்வாறு கண்டறிந்த பத்து செயல்பாடுகளை இங்கு காணலாம்.

தற்கொலைக் குண்டுதாரியாக பயன்படுத்த என்னை எனது பெற்றோர் போராளிகளிடம் கையளித்தனர் -13 வயது நைஜீரிய சிறுமி

நைஜீ­ரி­யாவில் தற்­கொலை மேலங்­கியை அணிந்த நிலையில் கைதுசெய்­யப்­பட்ட 13 வயது சிறு­மி­யொ­ருவர், தனது பெற்றோர் தன்னை தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யாக பயன்­ப­டுத்த போகோ ஹராம் போரா­ளி­க­ளிடம் கைய­ளித்­திருந்த­தாக தெரி­வித்­துள்ளார்.

நெருப்பில் விழுந்த புழுவாய் துடித்­துக்­கொண்­டி­ருக்கும் ஒரு தந்தை

தொடர்ந்து கஷ்­டத்தை தந்த கடவுள் நெஞ்­சுக்குக் கீழ இயக்கம் இல்­லாத மட்டும் என் வறுமை நிலையை உணர்ந்­துதான் எனக்கு வர­மாக அளித்தான் என்று சில நேரங்கள் நான் தியா­னிப்பேன் காரணம் இடுப்­புக்குக் கீழ இயக்­க­மில்­லாமல் இருப்­பதால் எனக்கு பசி தெரி­யாது"

மனித வாழ்க்­கையில் நாளொரு மேனியும் பொழு­தொரு வண்­ணமும் மாற்­றங்கள் நிகழ்ந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. பல­ருக்கு அவை ஆரோ­க­ணத்தில் அமைந்­தாலும் சில­ருக்கு அவ­ரோ­க­ணத்தைக் கடந்து பூச்­சி­யத்தில் நிறை­வ­டை­கின்­றது. நேரிய சிந்­தனை கொண்­ட­வர்கள் படிப்­ப­டி­யாக முன்­னேற்றம் அடைந்து செல்­வார்கள் என்­பார்கள். அவ்­வா­றான சிந்­த­னையில் தானுண்டு தனது வேலை­யுண்­டென இருப்­ப­வர்­களின் வாழ்க்கை கூட திடீ­ரென மாறு­கின்­றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல